Kuzhandhaimaiyai Nerunguvom Book By Vizhiyan Bookreview By K. Thamizhselvan நூல் அறிமுகம்: விழியனின் குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்) - கு.செந்தமிழ் செல்வன்




நூல்: குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்)
ஆசிரியர்: விழியன் 
வெளியீடு :  Books for Children
விலை: ரூ 45
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

“கொரோனா காலம்” தந்த தழும்புகளைத் தடவிப் பார்த்தும் விம்மிக் கொண்டும்தான் நாட்கள் நகர்கிறது

அதன் விளைவுகள் ஏராளம். பலரின் வாழ்க்கைகள் பின்னோக்கித் தள்ளியுள்ளது.. எதில் அதிகப் பின்னடைவு ?

வாழ்வாதரத்திலா, ? உடல் ஆரோக்கியத்திலா?, பொருளாதாரத்திலா, குழந்தைகளின் கல்வியிலா ?, கலாச்சாரத்திலா?

நிச்சயமாக ஈடு செய்ய இயலாத விளைவுகள் அனைத்திலும்தான்.

ஆனாலும்,, வளரும் குழந்தகளுக்கான இழப்பு பன்முகத்தன்மைக் கொண்டது. அதனை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றே சொல்லலாம். கற்றதையும் மறந்த கல்விச்சூழல் ஒன்றே  நம்மைப் பதற வைக்கிறது..

குழந்தைகளின் இரண்டாண்டு வீடுகளில் முடக்கம் பெற்றோர்களுக்கு மிகப் பெறும் சவாலாக அமைந்தது. இது ஒரு சவாலாக ஏற்றவர்களுக்குத்தான் சவால்..

சவாலை ஏற்ற பெற்றோர்களை  உற்சாகமூட்டி ஓட வைக்கும் புத்தகம்தான் விழியனின் “குழந்தைமையை நெருங்குவோம்”

தனது சொந்த அனுபவத்தினை குழைத்து  ஒரு எழுத்தளராகவும் வரைந்துள்ளதால் இந்தப் புத்தகத்தில் உயிரும் இருக்கிறது. உன்னதமும் இருக்கிறது.

எவ்வளவு செலவானாலும் பீஸ் கட்டி பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டால் தனது கடமை முடிந்தது என கருதிய பெற்றோர்களுக்கு வீட்டிலேயே குழந்தைகளுடன் இருந்தது பல புதிய அனுபவங்களைத் தந்தது. குழந்தகளுடன் நெருங்கி உறவாடவும் உரையாடவும் வாய்ப்பளித்தது .

ஒரு நல்ல ஆசிரியராகவும் அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று.. இது எப்போதும்    பெற்றோராக செய்ய வேண்டிய கடமைதான். ஆனாலும், கொரானா கால வீட்டடங்கு சூழல் அவர்களுக்கு தெளிவுபடுத்தியது. நிர்பந்தப்படுத்தியது.

“உங்கள் குழந்தை சரியில்லை என நினைத்தால் உங்களை சரி செய்ய  வேண்டியிருக்கிறது என்று பொருள்:” பெலூன்ஸ்கி.

அத்தகைய பெற்றோர்களுக்கான வழிகாட்டி புத்தகமாக  “ குழந்தமையை நெருங்குவோம்” வந்துள்ளது. கொரோனா முடிந்தாலும் தொடர்ந்தாலும் குழந்தை வளர்ப்புக்கான இந்தப் புரிதல்கள் அவசியம்.

  • நவீன உலகில் தொலைகாட்சி, மடி கணினி,  கைபேசி இவைகளை குழந்தைகள் தொடலாமா கூடாதா?  வீட்டடங்கில் குழந்தைகள் இவைகளைத் தொடாமல் எப்படி நகரும் நாட்கள்?. எப்படி நடைபெறும் ஆன் லைன் வகுப்புக்கள்? “தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்குள் சென்று நுழைந்து விட்டால் அது அவர்களை இழுத்துச் சாப்பிடும். அவ்வளவு திறமையான வஸ்துக்கள் உள்ளே இருக்கிறது”என்கிறார் விழியன். சரி, அதற்காகத் தொலைக்க்காட்சியை நிராகரித்துவிட முடியுமா? புதிய தொழில் நுட்பத்தை ஓரம் கட்டிவிட முடியுமா? இந்தக் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
  • கதை சொல்வது இயல்பாக நடைபெற்ற நாட்கள் உண்டு. ஏராளமான் கதைகள் செவி வழியாகத்தான் கடத்தப் பட்டு வந்துள்ளன. . “கதைகளைக் கேட்க இயல்பாகவே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. அந்த மகிழ்ச்சி கொடுக்கும் குரல் இயல்பாக நெருக்கமாகிறது. நமது வேகமான வாழ்க்கைச் சுழற்சியினை இலகுவாக்கும்.” “கதையின் குரலில்” இதனை கேட்கலாம்.
  • “குடும்ப சபை நடத்துவோம்” எனவும் அழைக்கிறார். திட்டமிடவும் விவரங்களுடன் யோசிக்கவும் இந்த குடும்ப சபை தனக்கு உதவியதை பதிவிடுகிறார், “குழந்தைகளும் பெற்றோர் மீது விமரிசனம் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் ஒரு வகையில் ஜனநாயக நாட்டில் பிரஜைகளை உருவாக்கும் முயற்சி இவை” என்கிறார்
  • “மென் தருணங்கள் மலரச் செய்வோம்” என்ற கட்டுரையில் குழந்தைகளோடு சேர்ந்து ரசிக்கும் இன்ப சூழலைத் தேடுங்கள் என்கிறார். அதுதான் நம்மை குழந்தைகளிடம் நெருங்கி அழைத்துச் செல்லும். எந்தச் சூழலையும் மகிழ்ச்சியான தருணங்களாக மாற்றும்.

“இன்றைய அவசர உலகிற்கு அவசியம் தேவை மனிதத் தருணங்களே ;  என்ற ஹாலோ வெல் வார்த்தகைகள் நினைவு கூறத்தக்கது

  • நிறைய உரையாடவும் வேண்டும் பெரிய காதும் வேண்டும் என்பதும் முரண்பட்டவைகளா? உரையாடல் என்பது அடுத்தவர்களின் நிலையினை அறிந்து கொள்ள பயன்படுத்தும் அற்புதமான ஆயுதம். குழந்தகளைப் பேச வைத்து அவர்களது பார்வையில் உருவாகும் உலகை நாம் தரிசிக்க அவசியம் பொறுமையும் காதும் தேவை. நாம் சொல்வதை கேட்பார்கள் என்ற நிலையிருந்தால் பாலியல் சீண்டல்களைக்கூட பெற்றோர்களிடம் பகிர்வார்கள்.
  • 48 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை ஒரே அமர்வில் படித்து விடலாம். ஆனால், தேவை இந்த புத்தகம் முன் வைக்கும்  கருத்துகள்  மீது விவாதமும் தெளிவும். இதனை குடும்ப மாக வாசித்து விவாதிக்க வேண்டும். அதுவே குடும்ப சபையின் முதல் அமர்வாக இருக்கலாம்.
  • குழந்தைகளை முதலில் நெருங்குவோம். குழந்தமையைப் பற்றிய நமது புரிதல்களை சரி செய்து கொள்வோம்.ஒவ்வொரு பெற்றோர்களின் அனுபவங்களும் ஒரு புத்தகமே.
  • அதற்கான வழிமுறைகளையும் கைகொள்ளும் ஆயுதங்கள்தான் இந்தப் புத்தகம் விவாதிக்கிறது..
  • குழந்தைகளை நெருங்குவதே  குழந்தைமையை நெருங்க வழி.

கு.செந்தமிழ் செல்வன், மாநிலச் செயற்குழு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *