குழந்தை எப்படி உருவாகிறது என்று குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு, வளர்ந்த பின் உனக்குப் புரியும் என கேள்வி கேட்ட குழந்தையின் வாயை மூடிவிடலாம்.
ஆனால் குழந்தைகளின் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அழித்து விட முடியாது.
நாம் உரிய விடையோ விளக்கமோ அளிக்கவில்லை என்றால் நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலம் அல்லது வலைத்தளம் போன்றவற்றில் குழந்தைகள் விடையைத் தேட தொடங்கி விடுவார்கள். இதை நாம் தடுக்க முடியாது.
வளரும் இளையவர்களின் அறியும் ஆர்வத்தை மட்டுப்படுத்தாமல் அதே சமயம் அறிவியல் பூர்வமாக பதிலை தர வேண்டும் என்பதை இந்நூலின் ஆசிரியர் மிக எளிமையாக நூலில் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய வண்ணப் படங்களை கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
தாவரங்களில் ஏற்படும் மகரந்த சேர்க்கை மூலம் எப்படி விதை உருவாகிறது. விதை மண்ணில் விழுந்தவுடன் சூரிய ஒளி, மழை உதவியுடன் இன்னொரு புதிய செடி உருவாவதை மிக அருமையாக பதிவு செய்துள்ளார்.
இதுபோன்றே கோழி, முயல், நாய் போன்ற விலங்குகளுக்குள் நடக்கும் இனப்பெருக்கத்தை தொடர்ந்து, மனித இனத்தில் நடக்கும் நிகழ்வுகளை மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் என் நூலில் தெரிவித்துள்ளார்.
அனைவரும், குறிப்பாக பெற்றோர்கள் படிக்க வேண்டிய நூல்.
நூலின் தகவல்
நூல் : ” குழந்தை எப்படி சென்றது?”
ஆசிரியர் : அறிவியல் அறிஞர். ஹேம பிரபா
விலை : ரூபாய் 130/-
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
தொடர்பு எண் : O4424332424.
எழுதியவர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.