காந்த மலை (Magnetic Hill) அல்லது லடாக்கின் காந்த மலை (Ladakh's Magnetic Hill) என அழைக்கப்படுகிறது. இது உலகளவில் சுற்றுலா தலமாக மாறி உள்ளது.

காந்த மலை (Magnetic Hill) – ஏற்காடு இளங்கோ

இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் லே (Leh) மாவட்டத்தில் காந்த மலை (Magnetic Hill) எனப்படும் மலை உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது ஸ்ரீநகர் – லே தேசிய நெடுஞ்சாலையில் இடம் பெற்றுள்ளது. இது லே நகரத்திலிருந்து சுமார் 26.5 கிலோமீட்டர் தொலைவிலும், நிம்மூவிலிருந்து தென்கிழக்கே 7.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

அவ்வழியாக செல்லும் வாகனங்கள் புவியீர்ப்பு விசையை மீறி, எந்த சக்தியும் இல்லாமல் மேல்நோக்கி நகர்கின்றன என நம்பப்படுகிறது. அதாவது இந்த மலையால் ஈர்க்கப்படுகிறது என நம்புகின்றனர். ஆகவே இது காந்த மலை (Magnetic Hill) அல்லது லடாக்கின் காந்த மலை (Ladakh’s Magnetic Hill) என அழைக்கப்படுகிறது. இது உலகளவில் சுற்றுலா தலமாக மாறி உள்ளது.

காந்த மலைக்கு அருகில் ஒரு விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் “புவியீர்ப்பு விசையை மீறும் நிகழ்வு” (The Phenomenon That Defies Gravity) என்று மஞ்சள் பலகையில் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு பிரபலமான நம்பிக்கையாக உள்ளது. ஆனால் காந்த மலைக்கு வாகனங்களை மேல்நோக்கி இழுக்கும் காந்த சக்தி கிடையாது என்பதுதான் உண்மை.

காந்த மலை (Magnetic Hill) அல்லது லடாக்கின் காந்த மலை (Ladakh's Magnetic Hill) என அழைக்கப்படுகிறது. இது உலகளவில் சுற்றுலா தலமாக மாறி உள்ளது.

மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் லடாக்கின் காந்த மலை அமைந்துள்ளது. நிலப்பரப்பைக் கவனிக்கும்போது அடிவானம் சாய்ந்திருப்பது போல் தோன்றும். மேல்நோக்கிச் சரிவாக தோன்றும் மலை, உண்மையில் கீழ்நோக்கிச் சரிவாகும். சுற்றியுள்ள நிலப்பரப்பு ஒரு காட்சி மாயையை உருவாக்குகிறது. ஓர் இடத்தில் தங்கள் வாகனத்தின் இயந்திரத்தை அனைத்து நடுநிலையில் (Neutral) வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அப்போது வாகனங்கள் மேல்நோக்கி நகர்வது போல் தெரிகிறது. ஆனால் உண்மையில் அவை புவியீர்ப்பு விசையால் கீழ்நோக்கிதான் நகர்கிறது. இந்தக் காட்சி சிதைவு, கீழ்நோக்கிச் சரிவை மேல் நோக்கிச் சாய்வாக மூளையை ஏமாற்றுகிறது. அங்கு மரங்கள், கட்டிடங்கள், பிறப் பொருட்கள் இல்லாததால் நிலப்பரப்பின் சரிவை மூளையால் துல்லியமாக மதிப்பிட முடியவில்லை.

இது சுற்றியுள்ள நிலப்பரப்பின் அமைப்பால் ஏற்படும் ஒளியியல் மாயை (Optical Illusion) ஆகும். அதாவது இது ஒரு மாயத் தோற்றம். இந்த அசாதாரண அனுபவத்தைக் காண விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக இது மாறி உள்ளது.

கட்டுரையாளர்:

காந்த மலை (Magnetic Hill) அல்லது லடாக்கின் காந்த மலை (Ladakh's Magnetic Hill) என அழைக்கப்படுகிறது. இது உலகளவில் சுற்றுலா தலமாக மாறி உள்ளது.

– ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *