"கழிவறை இருக்கை" ஆசிரியர் லதா எழுதிய "மந்தை மாந்தர்கள்" - புத்தகம் ஓர் அறிமுகம் | Latha's Mandhai Mandharkal Tamil Book Review | www.bookday.in

“கழிவறை இருக்கை” ஆசிரியர் லதா எழுதிய “மந்தை மாந்தர்கள்” – நூல் அறிமுகம்

“மந்தை மாந்தர்கள் (Mandhai Mandharkal)” இப்புத்தகத் தலைப்பு, ஏதோ ஆட்டிடையர்களின் இன்னல்களைப் படம் பிடிக்கும் புத்தகமோ என்று என்னை வாசிக்க ஈர்த்திருந்தாலும், வாசிக்க, வாசிக்க என் யோசனைத் திசையினை மாற்றி அமைத்தது ஆசிரியரின் கட்டுரையமைப்பின் சிறப்பு..

இந்தத் தொழில் செய்தால் தான் அதிக வருமானம் ஈட்டலாம் அப்படின்னு நம்ம நண்பர்கள் கூட்டம் சொல்றத அடிக்கடிக் கேட்டிருப்போம்.. இந்த படிப்பு படிச்சாத்தான் நல்ல வேலை கிடைக்குமான்டா அப்படின்னு நம்ம மாணவர்கள் சில பேர் group மாத்தி வந்து உட்கார்ந்து நாளாக, நாளாக முழிப்பிதுங்கறத பார்த்திருப்போம்.. இதைத்தான் மந்தை மனப்பான்மை என ஆசிரியர் விளக்குவது அருமை..

அப்படிப்பட்ட மந்தை மனப்பான்மையை விடுத்து தனி வழியில் பயணிப்பதற்கு நமக்கு மனவலிமை தேவைப்படும்.. ஏனென்றால் அம்மந்தையை விட்டு தனித்து வெளிவரும்போது அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள்..

இப்படிப்பட்ட குருட்டுத்தனமான நம்பிக்கையை கைவிட்டு, தங்களுக்கேற்ற சுய சிந்தனையை பயன்படுத்தி, அதற்கேற்றவாறு தன்னிலையை உணர்ந்து, வாழ்க்கையில் முன்னேறியவர்கள் தான் புரட்சியாளர்களாகவும் இவ்வுலகத்தை மாற்றுவதற்கு வழிவகைகளை உண்டு பண்ணுகிறவர்களாகவும் மாறியிருக்கிறார்கள்..

நாம் *கற்றவர்கள் அல்ல கற்பிக்கப்பட்டவர்கள்* என்ற சவுக்கடிகளை கட்டுரை தலைப்பாய் கொண்டு துவங்குகிறது இப்புத்தகம், நாம் கற்றிருந்தால் நமக்கான சுய சிந்தனை வெளிப்பட்டிருக்கும், கற்பிக்கப்பட்டமையால் மந்தையின் மாந்தர்களாக மாறிவிட்டோம் என்ற உள்ளார்ந்த சிந்தனையை உளியாய் செதுக்கிச் செல்கிறது நம் சிந்தனையில்..

“இங்கு யாரும் நல்லவரும் இல்லை, தீயவரும் இல்லை அவரவர் வாழ்வின் தாகம், வாழ இயலாத துயரம் அத்தனையும் சேர்த்து பல வழிகளில் துரத்துகிறது மனிதர்களை”
போன்ற எதார்த்தமான உண்மைகளை பேசி செல்கிறது மந்தை மாந்தர்கள்..

நாம் அன்றாடம் கேட்கும் கேள்விகளில் மிகவும் அர்த்தமற்ற, கோமாளித்தனமான கேள்விகளில் முதலிடம் வகிப்பது எது?
ஒரு கணம் யோசிப்போமா!!
வேறு என்னவா இருக்கப் போகுது..!!
*ஐயையோ..!! இந்த காரியத்தை செஞ்சா நம்மள பத்தி அந்த நாலு பேரு என்ன சொல்லுவாங்க!!* அதுதாங்க அந்த கேள்வி..

இந்தக் கேள்வி தாங்க நம்மை இருநிலைப்படுத்துகிறது ஒன்று பயம், மற்றொன்று கோழைத்தனம்..
இந்த ஒரே கேள்விதான் நம்மை நம் நிலையைப் பற்றி அறியவிடாது தடுத்து அம்மந்தைக் கூட்டத்தோடு இணைத்து நமது தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்த விடாது குழித்தோண்டி புதைத்து விடுகிறது..

அந்த நால்வர் தான் நம் வாழ்க்கையில் நம்மை பின்னோக்கி இழுக்கும் காந்தசக்திகள் என்றுணராது கிணற்றுத் தவளையாக கழித்திருக்கிறோம் நம் நாட்களை என்று சுதாரிப்பின்றி இருந்த மனநிலையை கிள்ளிச்சென்றது *அந்த நால்வர்* என்னும் தலைப்பு..

இப்படிப்பட்ட அழுத்தங்களில் இருந்து தங்களை மறைத்துக் கொள்வதற்காகவே சில பேர் தங்களுக்கான உண்மையான மனநிலையை மறைத்துக் கொண்டு முகமுடி அணிந்தவர்களாய் இச்சமூகம் தங்களை ஏற்றுக் கொள்ளும் விதமாய் தங்களுக்கென ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்..

ஒரு ஆண் எவ்வாறு இருக்க வேண்டும்?

ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும்?

இளம் வயதினர் என்ன கோட்பாடுகளை கையாள வேண்டும்?

முதியவர்கள் தங்களுக்கான நிலைப்பாடுகளை கையாளும் விதம் என்ன?

தாயாக, தகப்பனாக ஒவ்வொருவரும் எப்படி செயலாற்ற வேண்டும்? என்று நம் முன்னோர்களால் ஓரிலக்கணத்திற்குள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளோம்..

நமக்கான ஒரு இலக்கணத்தை நியமித்து, அந்தக் குறுகிய வட்டத்திற்குள்ளாகவே நமது செயல்பாடு இருக்கிறது, அதனை மீறி செய்பவர்களோ, இல்லை தங்களுக்கென ஒரு வேறுபாட்டை விரும்பி அவ்விலக்கணத்தை விட்டு வெளிவருபவர்களை சமுதாயம் ஏற்காதது ஏன்? போன்ற புரட்சிகரமான வாழ்க்கையை துவங்கும், புதுவித சிந்தனையாளர்களுக்கான கேள்விகளை *பாலின பேதங்கள்* என்னும் கட்டுரையின் மூலம் முன் வைக்கிறார் ஆசிரியர் லதா…

அன்பு என்பது மனம் சார்ந்ததாக இருந்தாலும் கூட அதனை வெளிப்படுத்தும் விதம் மாயமற்றதாக இருத்தல் வேண்டும் எடுத்துக்காட்டுக்கு நம் குடும்ப உறவுகளில் நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு முன்பாக பெற்றோராக நமது உண்மையான அன்பை பரிமாறிக் கொள்கிறோம்.. (So many of us are not that much expressive in showing our love) *கோபத்தை வெளிப்படுத்துவதில் நம் உணர்ச்சிப்பெருக்கை காட்டும் திறமையை ஏன் நம் அன்பை வெளிப்படுத்துவதில் காட்ட மறுக்கிறோம்?* என *வெறுக்கப்படும் அன்பு* என்னும் கட்டுரையில் கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர் லதா..

இக்கட்டுரைகளை வாசிக்கும் பொழுதே எனக்குள்ளாக எழுந்ததோர் கேள்வி என் குடும்பத்தில், என் பள்ளியில், என் சமுதாயத்தில், ஏன் நான் பயணிக்கும் இக்குழுவில் நான் மந்தையின் மாந்தர்களில் ஒருவரா? இல்லை மாற்றுத்திசையில் பயணிக்கும் புதுவித சிந்தனையாளரா? என்பது தான்..

This book reminds me the famous funny quote *Great minds think alike*

Instead, let’s follow the famous quote *Winners dont do different things, they do things differently* to show our uniqueness to change the world’s perspective🤝

என்னை கவர்ந்த இப்புத்தகத்தின் சிறப்பியல்புகளில் சலிப்பை ஏற்படுத்திய சில பக்கங்களுமுண்டு.. சில கருத்துக்களை ஆசிரியர் திரும்பத் திரும்ப பல கட்டுரைகளில் முன் வைத்திருப்பது மற்றும் அவரது தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமே கையாண்டிருப்பது உளவியல் ரீதியாக இன்னும் சில தரவுகளை சேர்த்திருந்தால் கூடுதல் சிறப்பளித்திருக்குமோ என்றும் தோன்றியது..

*சிந்திப்போம்..!!*
*நாம் மந்தையின் மாந்தர்களா..!!*
அல்லது
*மாற்றுத் திசையில் பயணிக்கும் சுயாதீனர்களா என்று..!!*

நூலின் விவரங்கள்:

நூல்:  மந்தை மாந்தர்கள் (Mandhai Mandharkal)
ஆசிரியர்: “கழிவறை இருக்கை” ஆசிரியர் லதா (Latha)
பதிப்பகம்: நோராப் இம்ப்ரிண்ட்ஸ் (Knowrap Imprints)
விலை: ரூ.225

எழுதியவர் : 

✍🏻 – அ.சுகிர்தா,
நெல்லை..

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *