தனிமைக்கால தவத்தில் புத்தகங்களே வரங்கள்
இன்றைய நூலின் பெயர்: ஆங்கிலேயர் இல்லாத இந்தியா
நூல் ஆசிரியர் : பியர் லோட்டி
( தமிழில் சி.எஸ் வெங்கடேசன் )
ஜீலியன் வியாத் என்பவர் ஒரு பிரெஞ்சு நாவலாசிரியர் – இவரின் புனைப்பெயரே பியர் லோட்டி.. பிரெஞ்சு கடற்படையில் பணிபுரிந்தவர்.. 1899ல் இந்தியா வருகிறார் – இரண்டு ஆண்டுகள் சுற்றி திரிகிறார்… தான் கண்ணுற்ற மனிதர்களையும், காட்சிகளையும் மிகத்துல்லியமாக ஒரு நாட்குறிப்பை போல் பிரெஞ்சில் எழுதுகிறார்..
இந்த குறிப்புகளின் தொகுப்பே Inde ( Sana les Anglais ) என்ற நூலாக 1901 ல் வெளிவருகிறது – இந்த நூலின் தமிழாக்கமே இந்த நூல். இலங்கை அனுராதபுரத்தில் துவங்கிய இவரது பயணம் பாளையம்கோட்டை வழியாக திருவனந்தபுரத்திற்கு மாட்டுவண்டியிலும், பின் கொச்சி, திருச்சூர் வழியாக மதுரை, திருச்சி, தஞ்சை , பாண்டிச்சேரி என நீண்டு, பின் ஹைதராபாத் என்று அங்கிருந்து ராஜஸ்தான், ஆக்ரா, பனாரஸ் என வடமாநிலங்களில் முடிகிறது இவரது பயணம்..
புதையுண்ட நகரம்…
கற்பாறைக்கோவில்…
திருவாங்கூர் மகாராஜாவின் நாடு…
தென்னை, பனை மரங்கள் நிறைந்த நாட்டில்…
கடும் பட்டினியால் பாதிக்கப்பட்ட இந்தியாவில்…
பனாரஸை நோக்கி…
என்ற 6 தலைப்புகளில் இந்த நூல் விரிகிறது. இவர் இந்த நூலில் இலங்கையையும் இந்தியா எனவே குறிப்பிடுகிறார். மதுரையில் இவர் சந்தித்த பாலாமணி என்ற நாட்டிய மங்கை உங்களை திகைப்புக்கு உள்ளாக்குவாள்..
வாசியுங்கள்..
19 நூற்றாண்டு இந்தியாவை ஒரு வெளிநாட்டு பயணியின் பார்வையில் அறியுங்கள் !
பக்கம்: 216
விலை: ரூ 160
வெளியீடு: சந்தியா பதிப்பகம்