நந்தித்தா ஜெயராஜ் (தமிழில்: மோசஸ் பிரபு) எழுதிய "முந்திரி வளர்ப்பில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர் லியோ டி சூசா…!" கட்டுரை | www.bookday.in

முந்திரி வளர்ப்பில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர் லியோ டி சூசா…!

முந்திரி வளர்ப்பில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர் லியோ டி சூசா…!

நந்தித்தா ஜெயராஜ் (தமிழில்:மோசஸ் பிரபு)

 

கடந்த ஜனவரி-20-2026 அன்று டாக்டர் லியோ டி’சூசா என்ற அறிவியல் விஞ்ஞானி 93 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கிறிஸ்த்தவ பாதிரியாராகவும் இருந்தார். மங்களூருவை (கர்நாடகா) சேர்ந்த கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள் பலரும் அன்புடன் “ஃபாதர் லியோ”(FATHER LEO) என்று அழைப்பார்கள். டாக்டர் டி’சூசா, 1960-களில் ஜெர்மன் நாட்டின் கொலோன் என்ற நகரத்தில் உள்ள மேக்ஸ் பிளாங்க் தாவர இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர். அங்கு, ஜோசப் ஸ்ட்ராப், சுதீர் குமார் சோபரி , இங்கோ போட்ரிகஸ் போன்ற முன்னணி விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றினார்.

திசு வளர்ப்பு (TISSUE CULTURE):

திசு என்பது  ஒத்த அமைப்பைக் கொண்ட செல்களின் குழுவாகும் .  திசு வளர்ப்பு என்பது, ஒரு உயிரியின், செல்கள் அல்லது திசுக்களை, அதன் இயற்கையான சூழலில் இருந்து பிரித்து, ஆய்வகத்தில் ஊட்டச்சத்து நிறைந்த செயற்கை ஊடகத்தில் வளர்க்கும் முறையாகும். இது நுண்பயிர்ப் பெருக்கம் (micropropagation) என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் அவற்றிர்க்கு ஏற்படும் நோய்களை புரிந்துகொள்ளவும் பயன்படுகிறது

நந்தித்தா ஜெயராஜ் (தமிழில்: மோசஸ் பிரபு) எழுதிய "முந்திரி வளர்ப்பில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர் லியோ டி சூசா…!" கட்டுரை | www.bookday.in
லீயோ டி சூசா (Leo D’Souza)

லீயோ டி சூசா அவர்கள் 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் திசு வளர்ப்பை (tissue culture) ஆய்வகங்களில்  மேற்கொண்டவர். அவரது முனைவர் பட்ட மாணவிகள் குழு, உலகிலேயே முதன்முறையாக சோதனைக்குழாயில் வளர்த்த முந்திரி மரத்தை மண்ணில் மாற்றி நடச்செய்து சாதனையை நிகழ்த்திக்காட்டினார்கள் இதுபோல் அவரது வழிகாட்டுதல்களில் சில முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நடைபெற்றது.

“இந்தியாவில் தாவர திசு வளர்ப்பு ஆராய்ச்சியின் ஆரம்ப முன்னோடிகளில் டாக்டர் லியோவும் ஒருவராவர். இந்த ஆராய்ச்சித் துறை உருவாகிக் கொண்டிருந்த காலத்திலேயே அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தார்,” என்று பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னணி தாவர உயிர்தொழில்நுட்ப விஞ்ஞானி பிரமோத் டாண்டன் தெரிவித்தார். 1970-ஆம் ஆண்டு, தனது அறிவியல் ஆய்வுகளுக்குப் பிறகு இந்தியா திரும்ப அழைக்கப்பட்டபோது, அவரது முனைவர் பட்ட வழிகாட்டி ஜோசப் ஸ்ட்ராப், பொருத்தமான ஆராய்ச்சிக்கான தலைப்பைத் தேர்ந்தெடுக்க உதவும் ஒரு நண்பரைச் சந்திக்கச் சொன்னார். அந்த நண்பர் வேறு யாருமில்லை டெல்லியில் இருந்த எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள்தான். லியோ டி’சூசாவின் சொந்த ஊர் மங்களூர் என அறிந்ததும், அவர் முந்திரி செடியை (Anacardium occidentale) ஆராய்ச்சிக்கான தலைப்பாக பரிந்துரைத்தார்.

முந்திரி மரம் இந்தியாவுக்குச் சொந்தமானது அல்ல. 16-ஆம் நூற்றாண்டில் பிரேசிலிலிருந்து போர்த்துகீசியர்கள் இதனை கரையோர பகுதிகளுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அதன் பருப்பு மற்றும் பழத்தின் வணிக மதிப்பு புரியத் தொடங்கியதும், அது முக்கிய பணப்பயிராக மாறியது. 1980-களில் இந்தியாவில் சுமார் 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் முந்திரி பயிரிடப்பட்டிருந்தாலும், அதன் உற்பத்தி அளவு தொழில்துறைக்கு தேவையானதை விட குறைவாகவே கிடைத்தது.

1982-ஆம் ஆண்டு மனுஷி இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், முந்திரி தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களில் 80%க்கும் மேற்பட்டோர் பெண்கள் என்றும், அவர்கள் பெரும்பாலும் கல்வியறிவில்லாதவர்களாகவும் குறைந்த ஊதியத்தில் சுரண்டப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

மங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார முந்திரி செயலாக்க ஆலைகளை டாக்டர் லியோ நேரில் பார்வையிட்டார். தொழிலாளர்களின், சிறு விவசாயிகளின் நிலைமை அவரை ஆழமாக பாதித்தது. வழக்கமான விவசாய முறையின் மூலம் வளர்ப்பது போதுமானதல்ல என்ற முடிவுக்கு வந்தார். பிறகு திசு வளர்ப்பு தான் தீர்வு என அவர் உணர்ந்தார். உயர்தர விளைச்சல் தரும் முந்திரி வகைகளை உருவாக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.

1975-இல் பெங்களூருவில் உள்ள  செயின்ட் ஜோசப் கல்லூரியில் Applied Biology ஆய்வகத்தை நிறுவினார். இது உயிர்தொழில்நுட்பத் துறை (DBT) உருவாகுவதற்கு முன்னதாகவே நடந்தது. பின்னர் அவர் மங்களூரிலுள்ள செயின்ட் அலோய்சியஸ் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். நிர்வாகப் பொறுப்புகளுக்கிடையிலும், ஆய்வகத்தை அங்கே மாற்றி தொடர்ந்து நடத்தினார். இன்று அந்த ஆய்வகத்தை அவரது முன்னாள் மாணவர் சசிகிரண் நிவாஸ் தலைமை தாங்குகிறார்.

அவரின் முதன்மையான சிந்தனை:

நந்தித்தா ஜெயராஜ் (தமிழில்: மோசஸ் பிரபு) எழுதிய "முந்திரி வளர்ப்பில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர் லியோ டி சூசா…!" கட்டுரை | www.bookday.in
கொலோனில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தில் பாதிரியார் லியோ (Fr Leo at the Max Planck Institute in Cologne)

1880 ஆம் ஆண்டு முதல் ஆண்கள் மட்டும் பயிலும் கல்லூரியாக இருந்த செயின்ட் அலோய்சியஸ் கல்லூரியில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என அவர் லியோ வலியுறுத்தினார். 1986-இல் பெண்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. இன்று மாணவர்களிலும் ஊழியர்களிலும் 50%க்கும் மேற்பட்டோர் பெண்களே. அவரது மனதிற்கு மிக நெருக்கமான பணிகளில் ஒன்று, Aloysians’ Boys’ Home என்ற ஆதரவற்ற, விடுதி இல்லம், மனஉளைச்சல் அடைந்த சிறுவர்களுக்கான இல்லத்தை நிறுவி நடத்துவது சவாலானப் பணி. பின் அந்த சிறுவர்கள் வாழ்க்கையில் முன்னேறியதை அவர் பெருமையாகக் கூறினார். அங்கு வளர்ந்த  பல சிறுவர்களுக்கு பேருந்து ஓட்டுவது ஒரு கனவாக இருந்தது, இன்று அவர்களில் பலர் மங்களூரில் பேருந்து ஓட்டுநர்களாக பணியாற்றுகின்றனர் அவர் எப்படி மகிழ்ச்சியடைந்தார் என்பது பற்றி அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

லியோ வீட்டின் அருகே குடியிருந்த நெல்சன் என்பவர் மற்றொரு உதாரணத்தை நினைவு கூர்ந்தார், அவர் தொழில் பயிற்சியை முடித்துவிட்டு, ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சி அதிகாரியாக பணியாற்றினார். நிர்வாக சவால்களை அவர் கடந்து பல செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், அவரது ஆய்வகம் மற்றும் ஆய்வுப்பணிகளே எப்போதும் பாதிரியார் லியோவின் மனதில் இருந்தது. முனைவர் பட்டப்படிப்பு திட்டத்தைத் தொடங்க மங்களூர் பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் ஒப்புதல் பெற்றார், இது ஒரு இளங்கலை கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

அவரது முதல் முனைவர் பட்ட மாணவர் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குண்டபுராவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐசி டி’சில்வா என்ற இளம் பெண்ணுடன் லியோவும் இணைந்து திசு வளர்ப்பு முந்திரி செடிகளை வளர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினார்கள், இது பெரிய அளவில் முந்திரி மரங்களை பெருக்க உதவியது.

ஆய்வகத்திலிருந்து நிலத்திற்கு

விதையின் மூலமாகவும் மற்றும் கலப்பு இனப்பெருக்கத்தின் மூலமாகவும் செய்யப்படும் உற்பத்தி முறை தாவர வகைகளையும் அவற்றின் விளைச்சலையும் மேம்படுத்த உதவலாமே தவிர, ஆனால் அவை அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளுகிறது மற்றும் தரத்தை பராமரிப்பதில் சிக்கல் இருக்கிறது.

மறுபுறம், நுண் இனப்பெருக்கம் என்றும் அழைக்கப்படும் திசு வளர்ப்பு முறை, ஒரு சிறிய திசு மாதிரியிலிருந்து முழு முந்திரி செடியையும் உருவாக்க முடிகிறது. ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகள் இந்த நுட்பத்தை பெருமளவில் பயன்படுத்த முடிந்தது, இதன் விளைவாக வரும் செடிகள் அசல் செடியுடன் மரபணு ரீதியாக ஒத்திருக்கும் என்ற உத்தரவாதத்தையும் கொடுக்க முடியும்.

இந்தியா உட்பட வெப்பமண்டல நாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகள் நம்பகமான திசு வளர்ப்பு நெறிமுறையுடன் முந்திரி தொழிலில் புரட்சியை ஏற்படுத்த முயன்றனர், ஆனால் இது மிகவும் கடினமானதாக மாறியது. மாம்பழம் மற்றும் பிஸ்தா மரங்கள் போன்ற அதன் தொடர்புடைய இனங்களுடன் ஒப்பிடும்போது, ​​முந்திரி செடி திசு வளர்ப்பு முறையில் வெற்றிகரமாக நடைபெறவில்லை, ஏனெனில் இது வளர்ச்சியடையும் போது பீனாலிக் சேர்மங்களை வெளியிடுகிறது, பிறகு வளரும் செல்களைக் அழித்துவிடுகிறது. ஆய்வகத்தில் செடிகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த செடிகள் மண்ணில் மாற்றப்பட்டவுடன் விரைவில் அழிந்துவிடும் நிலையில்தான் இருந்தது.

பத்து ஆண்டுகளுக்கும் மேலான இந்த முயற்சிக்குப் பிறகு, 1990-இல், அவரது முதல் முனைவர் பட்ட மாணவி ஐசி டி’சில்வா, முந்திரி திசுக் வளர்ப்புச் செடிகளை உருவாக்கி அவற்றை மண்ணில் வெற்றிகரமாக நட்டு வளர்த்தார். இந்தப் ஆய்வு குறித்து 1992-இல் Plant Cell, Tissue and Organ Culture இதழில் வெளியானது. முந்திரி தவிர தேங்காய், பன்னீர் (ferns), ஆல்கே, ராகி, உள்ளிட்ட மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்களிலும் அவரது ஆய்வகம் முக்கிய பங்களிப்புகளைச் செய்தது. அவரது மாணவர்கள் பலர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சிறந்த விஞ்ஞானிகளாக உயர்ந்தனர். “எங்கள் பணிகள் சர்வதேச தரத்தில் இருப்பதற்கு அவர் எங்களுக்கு உதவினார்,” என்று அவரது முன்னாள் மாணவி ஸ்மிதா ஹெக்டே கூறினார். அவருக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் அவர் தனது மாணவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தார். ஏதாவது ஒரு மேடையில் ஆண்கள் மட்டும் அமர்திருந்தால் உடனே பெண்கள் எங்கே எனக்கேட்பார். பெண்களை அங்கே இடம்பெறச்செய்வார், பெண்கள் அதிகார அமைப்பில் முக்கிய இடம் பெற வேண்டும் என்று கருதியவர்.

தன்னைப் பற்றி சொல்வது வழக்கம்:

நந்தித்தா ஜெயராஜ் (தமிழில்: மோசஸ் பிரபு) எழுதிய "முந்திரி வளர்ப்பில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியவர் லியோ டி சூசா…!" கட்டுரை | www.bookday.in

பெங்களூரில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் குறுகிய காலம் கற்பித்தாலும், அவரது மாணவர்கள் இன்னும் அவரை நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், ஹைதராபாத்தில் உள்ள மூலக்கூறு உயிரியல் மையத்தில் ஒரு முன்னணி செல் உயிரியலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானியுமான ஜோத்ஸ்னா தவான்.

“பரிணாமக் கோட்பாட்டின் கருத்துகளிலும் ஆண்மீகம் பற்றிய கருத்துகளிலும் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை. அறிவியல் துறையைப் பற்றிய அவரது கற்பித்தலில் மதத்தின் தாக்கம் இருந்ததில்லை என்பதை நான் இப்போதும் நினைத்துப்பார்கிறேன். பாதிரியார் லியோவின் மரணத்தைக் கேள்விப்பட்டவுடன்  பத்திரிகையில் இது குறித்து ஜோத்ஸ்னா தவான் இவ்வாறு எழுதினார். “சகோதரர் செசில் சல்டான்ஹாவுடன் சேர்ந்து, கிறிஸ்த்தவ திருச்சபையை சேர்ந்த தாவரவியலாளர்கள் தாவர அறிவியலில் எங்களுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியவர் லியோ அதற்காக நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றார்கள். பாதிரியார் பணி, அறிவியல் விஞ்ஞானி, இந்த இரண்டு அடையாளங்களையும் சமரசம் செய்வது பாதிரியார் லியோவுக்கு எளிதாக இருந்தது, ஆனால் அவர் வாழ்வில் அவர் தொடர்ந்து ஆச்சர்யங்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்.

“நான் முதல் முறையாக கொலோனில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தில் நுழைந்தபோது மாணவர்கள் என்னை வித்தியாசமாக பார்த்தார்கள்,” என்று அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறினார்.  “அவர்கள் என் பழுப்பு நிற தோலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன், ஆனால் அது என் பாதிரியார் அடையாளத்தியே அவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள் என புரிந்துகொண்டேன் என்றார்.”

எனவே பாதிரியார் லியோ தன்னைப் பற்றி விளக்கி சொல்ல பழகிவிட்டார்.

அறிவியல் கற்பிப்பிலும் மத வாழ்விலும் எந்த முரண்பாடும் இல்லை என்று அவர் நம்பினார்.“ஒரு பாதிரியார் தேவாலயத்தில் மட்டுமல்ல, ஏழை மக்களுக்கும் பயன் தரும் பணியைச் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார். ஜெர்மனியில் ஒருவர் அவரிடம் “நீங்கள் ஏன் ஆலயத்திலேயே இருந்து விடவில்லை?” என்று கேட்டபோது, அவர் பதிலளித்தார்: “மெண்டல் அப்படிச் செய்திருந்தால், மரபியலின் அடிப்படைகளை  நம் உலகம் இழந்திருக்கும்.

விஞ்ஞானி கிரிகோர் மெண்டல் போல் ”அறிவியலையும் மனிதநேயத்தையும் இணைத்த வாழ்க்கையை வாழ்ந்த பாதிரியார் லியோ டி’சூசா, இந்திய அறிவியல் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படுவார்.

10-02-2026 ஆங்கில இந்துவில் வெளியான கட்டுரை

📚 எழுதியவர்:

– நந்தித்தா ஜெயராஜ்
தமிழில்: மோசஸ் பிரபு

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *