Subscribe

Thamizhbooks ad

லட்சத்தீவுகளைக் காப்பாற்றுவோம் – பொ. இராஜமாணிக்கம்லட்சத் தீவுகள் என்பது கேரளக் கடற்கரையில் இருந்து சும்ர் 250 கிமீ முதல் 400 கீமீ தூரத்தில் அரபிக் கடலில் உள்ள தீவுக் கூட்டங்கள் ஆகும். லட்சத் தீவுகள் என்றால் லட்சம்  தீவுகள் இருக்குமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தீவுகள் தெரிவதால் இதை  கேரள மக்கள் லட்சத் தீவுகள் என அழைக்கின்றர்.

Let's save Lakshadweep Map

தற்போது இதில் 37 தீவுகள் உள்ளதென்றும் ஒரு தீவு சமீபத்தில் மூழ்கி விட்டதென்றும் சொல்லப்படுகிறது. பத்து தீவுகளில் சுமார் 65000 மக்கள் வசிக்கின்றர். மற்ற தீவுகள் இம் மக்கள் மீன் படிப்பதற்காகத் தங்குவதும் சுற்றுலாவாசிகள் வந்து செல்லும் தீவுகளாக உள்ளனர். இத்தீவுகளுக்கான கடல் எல்லை நான்கு லட்சம் ச.கிமீ. மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் சுமார் 20000 கிமீ வரை பரந்து இருக்கிறது. 32 square kilometres.

தீவுகள் உருவாக்கமும் இயற்கை வளமும்

இத் தீவுகள் ஆரவல்லி மலையின் தொடர்ச்சி என்றும் கடலுக்குள் ஏற்பட்ட எரிமலையின் காரணமாக எரிமலைக் குழம்பு குன்று போல் குவிந்து பின்னர் குளிர்ந்து குன்றுகளாக கடலுக்குள் இருந்திருக்கின்றன.  இதன் பின்னர் கடலில் உள்ள பவள உயிரிகள் இநதக் குன்றுகளில் வசிக்கத் தொடங்கி பவளக்குன்றுகளாக மாறி பிற்காலத்தில் அது வளர வளர மேற்பகுதி நீர் மட்டத்திற்கு மேல் வந்து சிதலமடைந்து தீவுகளாக மாறி அதன் மேற்பகுதியில் தாவர வகைகளும் கடலுக்குள் பவளப் பாறைகள் சார்ந்த வண்ண மீன்கள் உள்ளிட்ட பல்வகை உயிரிகள் வாழும் சொர்க்கமாக மாறிவிட்டது. கடற் புற்கள்,  கடல் தாவரங்கள் நீருக்கடியிலும் தென்னை, வாழை போன்ற மரங்கள் தீவின் மேல் மட்டத்திலும் காணப்படுகின்றன.

இந்தத் தீவுகளின் முக்கிய குணாம்சம் என்னவென்றால் தீவுகளைச் சுற்றியோ  தீவுகளுக்குள்ளேயோ கடல் நீர்க் குளங்கள்  காணப்படும்.இவற்றை லகூன் என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

Let's save Lakshadweep Ponniah Rajamanickam - லகூன் சூழ்ந்த தீவு 
லகூன் சூழ்ந்த தீவு

இவைகள் கடல் சீற்றம், புயல் கால கடல் அலைகளில் இருந்து தீவுகளைக் காப்பாற்றுகின்றன. சில தீவுகளில் இந்த லகூன்களில் மீன்பிடிக்கின்றனர்.

தற்போது இந்தத் தீவுகள் கடல் அரிப்பாலும் ஒக்கிப் புயல் போன்ற பெரும் புயல்களாலும் தாக்குதலுக்கு உள்ளாகி  வருகின்றன. தென்மேற்குப் பருவக்காற்று வட கிழக்குப் பருவக் காற்று ஆகியன மூலம் சுமார் 1600 மிமீ அதிக மழை பெய்கிறது.இந்த மழை நீரே மண்ணுக்குள் ஊடுருவி கடின பாறைகளுக்குமேல் தேங்கி நன்னீராக மக்களுக்கு 20-30 அடிககுள் தண்ணர் கிடைக்கிறது. எனவே தண்ணீர் குறைபாடும் உண்டு. கடல் நீரை உப்பு நீராக்கும் ஒரு ஆலையும் உள்ளது.

மக்களின் பண்பாடுகளும் தினசரி பழக்க வழக்கங்களும்: 

இங்கு வாழும் மக்கள் 98% இஸ்லாமியர்கள். இன்றும் பழங்குடி மக்களுக்கான பண்புகளுடன் வாழ்ந்து வருவதால் பட்டியலின  பழங்குடி வகுப்பில் உள்ளனர். பெரும்பாலானோர் தற்போது பேசுவது மலையாள மொழியாகும். இவர்களது தொழில் மீன்பிடித்தல், கொப்பரை வியாபாரம், கயிர் தொழில், வாழை பயிரிடுதல் எனக் கூறலாம்.

Let's save Lakshadweep Ponniah Rajamanickam - Fishering

 இங்கு ட்யூனா என்ற சூரை  என்ற மீன் சிறப்பு வகை மீன் ஆகும். இந்த மீனின் கருவாடு மிக்க மதிப்பு பெற்றது. கால்நடைகள் வளர்ப்பும் உண்டு.

மதுக்குடித்தல் அறவே இல்லை. இங்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு மட்டும் சில தீவுகளில்கட்டுப்பாட்டுடன் கூடிய மதுவிலக்கு அமுலில் உள்ளது. இவர்கள் மாட்டு இறைச்சி உண்ணும் பழக்கம் உள்ளவர்கள். குற்றச்செயல்கள் மிக மிகக் குறைவே. தீவுகளில் ஆங்காங்கு தாற்காலிகக் குடியிருப்புகள் அமைத்து மீன் பிடி படகுகள் பிற மீன் பிடி உபகரணங்களை வைத்திருப்பார்கள். இவர்களின் குடியிருப்புகள் கடலுக்கும் சாலைக்கும் இடையிலும் அமந்துள்ளன.

இந்தத் தீவுகளில் வசிக்கும் மக்கள் அந்தந்த தீவுகளில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறார்கள். எல்லாம் இணைந்த மாவட்ட ஊராட்சி நிர்வாகம் உண்டு. இதனை நிர்வகிக்க மாவட்ட ஆட்சியர் உண்டு. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் உண்டு. இது ஒரு யூனியன் பிரதேசம் ஆகும்.

 Let's save Lakshadweep Ponniah Rajamanickam - சூரை மீன்
சூரை மீன்

இப்போது நடப்பது என்ன?

இப்படிப்பட்ட சூழலில் இத்தீவிற்கு மத்திய அரசினால் பிரபுல் கோடா பட்டேல் என்ற முன்னாள் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் December 5, 2020.நிர்வாகியாக நியமிக்கப்டுகிறார். இவர் நான்கு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.
1) லட்சத் தீவு வளர்ச்சிகான திட்டம் (Lakshadweep Development Authority (LDA)
2) பஞ்சாயத்து சட்டத் திருத்தம் (Draft Lakshadweep Panchayat Regulation 2021)
3) சமூக விரோதிகள் தடுப்புச் சட்டம்( Anti-Social Activities Regulation Bill 2021)
4) விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்  சட்டம் (Lakshadweep Animal Preservation and Regulation 2021)

லட்சத் தீவுக்கான வளர்ச்சித்திட்டம் (LDA), என்பது அரசு தேவையான நிலப் பகுதிகளைக் கட்டாயமாகக் கையகப்படுத்திக் கொள்ளலாம். மக்களின் குடியிருப்புகளையும் நிலங்களையும் அதிரடியாக பிடுங்கிக் கொள்ளலாம். ரோடு போடுதல் சுற்றுலா வர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழிடஙகள் தடாலடியாகப் பிடுங்கப்பட்டு வருகின்றன. மீன் பிடித் தொழிலுக்காக போடப்பட்டுள்ள தாற்காலிக நிரந்தர குடியிருப்புகளை கையகப்படுத்தி வருகிறார். சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கடற்கரை மேலாண்மைச்சட்டத்திற்கப் புறம்பாக ரிசார்ட் கட்டுதல்,ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுதல்,  கடற்கறை பீச் அழகு செய்தல் என்ற அடிப்படையில் தீவின் நிலப் பயன்பாடு முற்றிலும் சூலுக்கு நேர் எதிராக மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் மக்களின் வாழும் இடங்களும் வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்பட உள்ளது.

தற்போது பஞ்சாயத்துச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி (Draft Lakshadweep Panchayat Regulation 2021) இரண்டு குழந்தைகளுக்கு மேற்பட்டோர் ஊராட்சித் தேர்தலில் போ்டியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு மககள் தொகைப் பெருக்கம் என்பது தேசீய சராசரியான 17.6க்கும் கீழ்   6.23 ஆகத் தான் உள்ளது. இது அந்த மககளின் பண்பாட்டிற்கு எதிரானது ஆகும்.

சமூக விரோதிகள் தடுப்புச்சட்டம் (Anti-Social Activities Regulation Bill 2021) என்பதன் மூலம் அரசின் அடாவடி செயல்பாடுகளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள்  மீது இச்சட்டத்தை பாய்ச்சி யாரையும் ஓராண்டு  கேட்பாரின்றி சிறையில் தள்ளுவதற்கு ஏற்பாடு செய்கிறது.

அடுத்து  விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் (Lakshadweep Animal Preservation and Regulation 2021) மூலமாக அவர்களின் பாரம்பரியமான உணவு கலாச்சாரமான மாட்டிறைச்சி உண்ணுவதைத் தடுக்கும் முகமாக விலங்குகள் வதைச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி கால்நடைகள் உணவுக்காக வெட்டப்படுவதை இச்சட்டம் தடை செய்கிறது.

மேலும் சுற்றுலாவாசிகளுக்காக சில தீவுகளில் மட்டுமென இருந்த மதுக் கொள்கையை முற்றிலும் நீக்கி விட்டு எல்லாத்தீவுகளிலும் மது விலககு அமுல்படுத்தப்படும் என அறிவித்து இருக்கிறார்.

ஏன் இந்தப் புதிய திட்டங்களும் கொள்கைகளும்?

இதற்கு மூல காரணம் நித்தி ஆயோக் என்ற மத்திய அரசின் கொள்கையே என்கிறார் டெல்லி அறிவியல் இயக்க அறிஞர் டாக்டர் ரகுநந்தன். லட்சத் தீவு மட்டுமல்லாமல் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் இது போன்ற பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை நித்தி ஆயோக் முன் வைக்கிறது.

Let's save Lakshadweep Ponniah Rajamanickam - NITI Aayog

இதன் மூலம் இயற்கை வளங்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை அங்கு வாழும் மக்களின் வாழ்நிலை குறித்த அக்கறையும் இல்லாமல்  உடனடி பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இந்த நாசகாரத் தட்டங்களை நித்தி ஆயோக் முன மொழிகிறது. அதனடிப்படையில் லட்சத் தீவுகள் வளர்ச்சிக்காக குறிப்பாக மாலத் தீவுகள் போன்ற சுற்றுலா சார்ந்த பொருளாதார வளர்ச்சியை முன் நிறுத்தி தற்போதைய நிர்வாக அதிகாரி செயல்படுகிறார் என்பது தான் உண்மை.

இதனால் தற்போது அங்கு வாழும் மக்களின்  பட்டியலின மக்களின் பண்பாடுகள்,  பழக்க வழக்கங்கள்,  வாழிடங்கள், வாழ்வாதாரங்கள், சுற்றுச் சூழல் அனைத்தும் பாழாகும் சூழல்நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே புவி வெப்பமயமாதல் மூலம் தீவுகளைக்  கடல் நீர் விழுங்கி வருவதும்,

Let's save Lakshadweep Ponniah Rajamanickam - மூழ்கும் தீவு
மூழ்கும் தீவு

பவளப்பாறைகள் அழிந்து மீன் வளங்கள் குன்றி வருவதும், புயல் சீற்றங்களினால் பாதிப்பு , கடற்கரை அரிப்பு, குடிநீர்ப் பஞ்சம் ஆகியனவும் தற்போது நிலவுகின்ற சூழலில் நிர்வாக அதிகாரி பிரபல் கே. பட்டேலின் அத்து மீறல்கள் லட்சத் தீவுகளை பதட்டமாக்க உள்ளது. மக்களைப் பன்னிரெண்டு மணி நேர பட்டினிப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களுக்குத் தள்ளி விடப்பட்டுள்ளனர்.

Let's save Lakshadweep Ponniah Rajamanickam - People Protest

கேரளாவின் இடது ஜனநாயக முன்னணியும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இத்திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இத்தீவுகளையும் மக்களையும் எப்படிக் காப்பாற்றுவது? 

கேரள கடற்கரை கடற்கரை மண்டல ஆராய்ச்சியாளர், மற்றும் சென்டர் பார் எர்த் சயின்சஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற முதன்மை அறிஞர்  முனைவர் டாக்டர் கே.வி. தாமஸ் அவர்கள் கூறுவது என்னவென்றால் இத்தீவுகளின மேம்பாட்டிற்கும் மக்களின்  பொருளாதார வளர்ச்சிக்கும்  நீதியரசர் ரவீந்திரன் அவர்கள் தலைமையில் பரிந்துரைக்கப்பட்டு உச்ச நீதி மன்றம் ஒப்புதல் பெற்ற ஒருங்கிணைந்து தீவுகள் மேலாண்மை திட்டத்தை அமுல்படுத்துவதே சரியானதாகும் என்கிறார்.. ஏனென்றால் இவர் அத் தீவுகளில் வாழும் அனைத்து மக்களிடமும் கருத்துக் கேட்டு உருவாக்கப்பட்டது.

நீதியரசர்  ரவீந்திரன் அவர்கள் பரிந்துரையின்படி கடற்கரையின்இருபது மீட்டர் தூரத்தில் எந்த வித வளர்ச்சி நடவடிக்கைகளும் கூடாது. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதுமாக இருக்க வேண்டும். சுற்றுலாவிற்கென எந்தக் கட்டுமானங்களும் கூடாது. லகூன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் பாரம்பரியமும் பழக்க வழக்கங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுலா மிகவும் குறைந்த அளவிலேயே நடத்தப்பட வேண்டும். எந்தத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென்றாலும் தீவுப் பஞ்சாயத்துகளையும் தீவுகளின் மாவட்டப் பஞ்சாயத்தையும் கேட்டறிந்து ஒப்புதலுடன் அமுல்படுத்த வேண்டும்.

முனைவர் கே.வி. தாமஸ் அவர்கள் இத்தீவுகளின் மக்களை சூழல்மண்டல மக்கள் எனக் குறிப்பிடுகிறார். அதாவது இயற்யைான சுற்றுச் சூழல் மண்டத்தின் ஒரு பகுதியாக இவர்கள் வாழ்கிறார்கள். இதனால் சுற்றுச் சூழல் பாதித்தால் இவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது தான் இதன் அர்ததம். இந்த ஆண்டின் உலக சூழல் தின அறைகூவல் என்பது எதிர் வரும் பத்தாண்டுகளுக்கு இழந்த சுற்றுச்சூழல் மண்டங்களை மீட்டெடுப்போம் என்பதாகும். ஆனால் எதிர் வரும் சில ஆண்டுகளிலேயே லட்சத் தீவுகளின் சுற்றச் சூழல் மண்டலத்தை அழிக்கத் திட்டமிடும் பிரபுல் கே. பட்டேலின் தீய முயற்சியை எதிர்த்துப் போராடும் மககளோடு நாமும் கை கோர்ப்போம். லட்டத் தீவுககை் காப்பாற்றுவோம்.

கட்டுரையாளர்: பொ. இராஜமாணிக்கம்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Latest

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன்...

நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்

  குறுங்...... நூலின் தலைப்பே துறுதுறு வென இருக்க, ஏற்கனவே விழியன் அவர்களின் "பென்சில்களின்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்களில் கண்ணீரை வர வைத்த கதையின் அமைப்பு நம்மையும் தூண்டுகிறது சில விடுதலை ஈடுபாடுகளில் அர்ப்பணித்துக் கொள்ள...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன் பொவ்லிங் சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூவின்( 1876- 1955) திறமை மதிக்கப்படவில்லை? பதிவாகவில்லை?. ஏன் பலூவின் இடதுகை சுழற்சி முறை பந்தால் ரன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here