Subscribe

Thamizhbooks ad

ஆயுள் காப்பீட்டுக் கழகம் போராடுகிறதா? – சித்தார்த்தன் சுந்தரம்

 

 

 

இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான `லைஃப் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி)’ குறித்த சமீபத்திய செய்திகள் அது தன்னுடைய ஆயுளுக்குப் போராடுகிறதோ என்கிற தோற்றத்தைக் கொடுக்கிறது.
இப்போது எல்ஐசி சிரம திசையில் இருப்பதாகத் தெரிகிறது. காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பாலிசிகளுக்கான பிரிமீயத்தைப் பொருத்தவரையில் எல்ஐசி –யின் பங்கு கடந்த ஒரு வருடத்தில் 68 சதவீதத்திலிருந்து 59 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதனால் இதனுடைய பங்கின் விலையும் பங்குச் சந்தையில் அது பொதுமக்களுக்காக பங்கு வெளியிட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் 20 சதவீத அளவுக்குக் குறைந்திருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கு சற்றே பின்னோக்கிப் பயணிக்கலாம்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1950களில் பல நிறுவனங்களை தேசியமயமாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டது. அதன்படி, அன்றைய அரசானது இந்தியர்களின் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அதில் அரசின் தலையீடு இருக்க வேண்டுமென்றும் நினைத்து அப்போது இந்தியாவில் இயங்கி வந்த பல தனியார் காப்பீட்டு நிறுவனங்களையெல்லாம் ஒன்றிணைத்து எல்ஐசி என்கிற நிறுவனத்தை உருவாக்கியது. இதனுடைய பிசினஸ் மாடல் மிகவும் எளிமையானது. அதாவது. இந்நிறுவனமானது எண்ணற்ற விற்பனைப் பிரதிநிதிகளை முகவர்கள் என்கிற பெயரில் நியமித்து அவர்கள் மூலம் பிரிமீயத்தை சேகரித்து அதற்குப் பதிலாக பாலிசிதாரரின் மரணம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலம் முடிந்ததும் எதிர்காலத்தில் பண பலன்களை வழங்குவதாக உறுதியளித்தது. இப்படி அவர்கள் சேகரித்த பணத்தை எல்ஐசி –யானது கட்டுப்பாட்டாளரால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும், வேறு பல நிதி ஆவணங்களிலும் முதலீடு செய்ய ஆரம்பித்தது. போட்டியாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் சுமார் 40 ஆண்டுகள் எல்ஐசி – யானது கொடிகட்டி பறந்தது.

ஆனால் 2000-மாவது ஆண்டில் அரசு விதிகளில் சில மாற்றங்கள் செய்ய அது தனியார்களை காப்பீட்டுத் துறையில் செயல்பட அனுமதித்தது. இதனால் புதிய பிசினஸ் மாடல்களும், புது வகையான பாலிசிகளும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் எல்ஐசி-யோ `பெரிய அண்ணன்’ மனப்பான்மையில் தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக செய்து வந்த அதே பாணியில் இயங்கி வந்தது.
காப்பீட்டுப் பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பது என்பது பாரம்பரியமாக இருந்து வரும் முறையாகும். ஆனால் நீங்கள் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எனில் உங்களின் குடும்பத்திலோ அல்லது நண்பர்களின் குடும்பத்திலோ ஒருவர் எல்ஐசி முகவர் ஆனதால் அவருடைய வாழ்க்கையில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டது என்பதைக் கேட்டிருக்கக்கூடும். ஏனெனில் அந்த காலகட்டத்தில் சமூகத்தில் ஓரளவு மதிப்பு தரக்கூடிய வேலைகள் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவது இல்லை. அரசு வேலைக்கு அடுத்து கமிஷன் மூலம் நல்ல வருமானம் ஈட்டும் வேலையாக இந்த முகவர் பணி இருந்து வந்தது. எனவே லட்சக்கணக்கான மக்கள் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முகவர்களாக மாறினார்கள்.

உதாரணமாக, 2005 ஆம் ஆண்டு எல்ஐசி-யில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்திருந்த முகவர்களின் எண்ணிக்கை சுமார் 9.8 லட்சம் ஆகும். ஆனால் காலப் போக்கில் இதன் வளர்ச்சிக் குறைய ஆரம்பித்தது. சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு இருக்கும் முகவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 11.4 லட்சம் ஆகும். அதாவது 18 ஆண்டுகளில் கூடுதலாக 1.6 லட்சம் பேர் மட்டுமே எல்ஐசி-யின் முகவர்களாக ஆகி பணியாற்றி வருகிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, இன்றைய இளைய தலைமுறையினருக்கு பல வகையான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அதில் எல்ஐசி-யின் முகவர் ஆவது என்பது அவர்களது கடைசித் தெரிவாக இருக்கலாம். இன்றைக்கு இருக்கும் முகவர்களின் வயதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்த முகவர்களில் 30 வயதுக்கும் குறைவானவர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. இரண்டாவதாக, ஏற்கனவே முகவர்களாக இருந்தவர்களையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள எல்ஐசி –யால் முடியவில்லை. பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வந்தபின் ஒப்பீட்டளவில் பொருளாதார ஆதாயம் அதிகம் இருப்பதால் அவர்கள் அதை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

என்னதான் புதிய வணிகத்தில் (புதிய பாலிசிதாரர்கள்) 90 சதவீதம் முகவர் மூலம் கிடைக்கப் பெற்றாலும் அவர்களுக்கு அதிக ஊக்குவிப்புத் தொகை அல்லது கமிஷன் கொடுத்து தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. ஏனெனில், IRDAI (Insurance Regulatory and Development Authority of India) விதிகளின்படி, முகவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை அல்லது கமிஷனுக்கு ஒரு வரம்பு இருக்கிறது. ஆனால் தனியார் துறையைப் பொருத்தமட்டில் குறைந்தபட்சம் பணிரீதியிலாவது அதிக வாய்ப்புகள் இருக்கின்றன ஆனால் எல்ஐசி-யில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. உதாரணமாக, HDFC, ICICI போன்ற பல வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்களையும் நடத்தி வருவதால் வங்கி வாடிக்கையாளர்களை காப்பீட்டு நிறுவனத்தின் பாலிசிதாரராக ஆக்குவது சற்றே எளிதான காரியமாகும்.

என்னதான் எல்ஐசி, ஐடிபிஐ வங்கியின் பெரிய பங்குதாரராக இருந்தாலும் கார்பொரேட் முகவர்கள், வங்கிகள் மூலம் எல்ஐசி-க்குக் கிடைக்கும் வணிகத்தின் அளவு 3 சதவீதம்தான்! ஆனால் தனியார் துறையில் இயங்கிவரும் காப்பீட்டு நிறுவனங்கள் பெறும் வணிகத்தின் அளவு சுமார் 58 சதவீதமாகும். இது தவிர, நேரடியாக இணையம் மூலம் எல்ஐசி பெறும் புதிய வணிகத்தின் அளவு 0.16 சதவீதம் ஆனால் தனியார் நிறுவனங்கள் இணையத்தின் மூலம் பெறும் வணிகத்தின் அளவு 2.3 சதவீதமாகும். எனவே எல்ஐசி அதனுடைய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது அவசியமான ஒன்றாகும். HDFC Life நிறுவனமானது 2023 ஆம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் அதனுடைய காப்பீட்டு வணிகத்தை மேம்படுத்தும் வகையில் மொத்த செலவில் சுமார் 40 சதவீதத்தை தொழில்நுட்ப மேம்பாட்டுக்கென செலவழித்திருக்கிறது. இன்றைக்கு அது இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் காப்பீட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது.

இது தவிர என்ன மாதிரியான பாலிசிகளை அறிமுகப்படுத்துகிறோம் என்பதும் முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் காப்பீட்டு ஊடுருவல் மேம்படுவதால், குடும்பத்தில் ஒருவர் இறந்தால் பாதுகாக்க சிறந்த வழி `முற்றிலும் பாதுகாப்பு தரக் கூடிய பாலிசி’யை எடுத்துக்கொள்வது என்பதை மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.. பாலிசிதாரர்களிடமிருந்து குறைந்த பிரீமியத்தைப் பெற்று பாதகமான நிகழ்வின் போது கணிசமான காப்பீட்டுத் தொகையை வழங்குவது முக்கியமாகும். ஆனால் எல்ஐசி-யிடம் இந்த மாதிரியான பாலிசிகள் அதிக அளவில் இல்லை.

மேலும், அதன் விற்பனையின் பெரும்பகுதி, ’பங்குபெறும் பாலிசிகள் (participating policies)” என்று அழைக்கப்படும் ஒன்றிலிருந்து வருகிறது – இதை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்ற பாலிசி நன்மைகளுடன் கூடுதலாக எல்ஐசியின் லாபத்திலும் உரிமையுடையவர்கள் ஆவார்கள். சமீபத்தில் பிரபலமான இணைய இதழில் வெளியான ஒரு கட்டுரையில் நிதியாண்டு 2023 ல் இதனுடைய புதிய பிரீமியங்களில் 94 சதவீதம் இந்த மாதிரியான பாலிசிகள் மூலம் வந்ததாகக் கூறுகிறது. இந்த வகையில் பாலிசிதாரர்களுக்கு லாபத்தைப் பங்கிட்டுக் கொடுப்பதில் இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் மகிழ்ச்சியடையமாட்டார்கள். அதோடு பங்குச் சந்தையிலும் இதனுடைய விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்காமலும் இருக்கக்கூடும்.

எனவே மேற்குறிப்பிட்டக் காரணங்களினால் ஒரு காலத்தில் கோலோட்சி சாமன்யவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்து வந்த ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடந்த காலத்தில் இருந்தது போல திடகாத்திரமாக இல்லாமல் ஓரளவு நலிவடைய ஆரம்பித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை!

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here