“Life of Marie Curie” – நூல் அறிமுகம்
நோபல் பரிசு பெற்ற முதல் பெண்
பல தடைகளைத் தாண்டி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து அறிவியல் வரலாற்றில் சிறப்பிடம் பிடித்துள்ள மேரி கியூரியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நூல்கள் வந்திருந்தாலும் பேராசிரியர் மோகனா எழுதியுள்ள நூலினை பேராசிரியர் விஜயகுமார் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆங்கிலத்தில் மிக அருமையாக மொழிபெயர்த்துள்ளார்.
1867 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி போலந்து நாட்டில் பிறந்தவர்தான் அறிவியல் அறிஞர் மேரி கியூரி.
பள்ளிக்கல்வியை முடித்த பின்பு சோர் போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடப் பிரிவை எடுத்து பயின்று கொண்டிருக்கும்போது பல்வேறு அறிவியல் அறிஞர்களின் அறிமுகம் கிடைத்தது. அறிவியல் அறிஞர் பியரி கியூரி ஆய்வகத்தை மேரி கியூரி மிக அருமையாக பயன்படுத்திக் கொண்டது அவர் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை ஆகும்.
இருவரும் இணைந்து தனிமத்தை கண்டுபிடித்தனர். இவர்கள் கண்டுபிடித்த தனிமத்திற்கு “பொலோனியம்” எனும் பெயர் வைத்தார்கள்.
பொலோனியம் தனிமம் கண்டுபிடித்ததற்காக மேரி , பியரி ஹென்றி பெக்குரேல் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
பியரியை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் சாலை விபத்தில் கணவர் மரணம் அடைந்தார் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ததன் விளைவாக ரேடியத்தை கண்டறிந்தார் மேரி கியூரி. 1911 ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசை பெற்றார் மேரி கியூரி.
இதன் மூலம் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் மேரி கியூரி தான்.
இது போன்ற அறிவியல் வரலாறு விஷயங்களை இந்நூலில் மிக அருமையாக எழுதி உள்ளது மற்றும் மொழிபெயர்த்துள்ளதும் பாராட்டுக்குரியதாகும்.
அறிவியல் அறிஞர் மேரி கியூரியின் பத்துக்கு மேற்பட்ட அறிவியல் மேற்கோள்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மேற்கோள்களை வாசிக்கும் அனைவருக்கும் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ள உதவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய மிக அருமையான அறிவியல் நூல் இது.
நூலின் விவரங்கள்:
நூல் : “Life of Marie Curie”
ஆசிரியர் : பேரா.சோ.மோகனா (ஆங்கிலத்தில் பேரா.பெ.விஜயகுமார்)
வெளியீடு : ஹெர் ஸ்டோரீஸ், சென்னை .
தொடர்பு எண்: 7550098666
விலை: ரூ.75
எழுதியவர் :
✍🏻 MJ. பிரபாகர்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

