ஏனோ
சில நாட்களும்
சில நேரங்களும்
நம்மைப் பிடித்து வைத்துக் கொண்டு
தர மறுக்கையில் ..
சில
உரையாடலும்
சில
மெளனங்களும்
கரைசேர்த்துக்
கைதூக்கி விடும்..
அந்நேரத்தில்
வாழ்க்கையின்
மேடு பள்ளங்களில்
உருளும்
சக்கர மனதைக்
கண்டு கொள்ளலாம்
உருண்டபடியே..
உருண்டபடியே
மெல்லமாகவும்
வேகமாகவும்..
தலை
நிமிர முடியாமல்
தாழவும் முடியாமலிருக்கும்
இடைவெளியில்..
ஒளிந்து கொண்டு
விளையாடுகிறது ..
வாழ்க்கை…
– சரகு..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

