கவிதை: சோறிடும் உயிர்களின் சோர்வு….. – அ.லில்லி ஏஞ்சல் (முத்தமிழ்)வாழ்நாள்….
முழுதும்….
கழனியையும்….
புழுதிக் காட்டையும்….
தாயாய்ப் பார்த்த அன்னதாதா நீ
உன்னை…ஏங்கவைத்தும்…(கை)ஏந்தவைத்தும்…
தலைகுனிகிறோம்
குற்றஉணர்வில்…
நிலத்தில்.‌….நீ எழுதுகிறாய்…
எங்களின்..ஆரோக்கியத்தையும்
வசந்தத்தையும்…..‌…
ஒருநாள்…
வெறும்…தங்கத்தட்டும்
வெள்ளி…டம்ளரும்
மட்டுமே…அவர்களின்
 உணவு மேசையை
அலங்கரிக்கப்போகின்றன
பணத்தைத் தின்று…
பகட்டைப் பருகிக் கொள்ளட்டும்!
உன் உழைப்பைத் தின்று…..
வியர்வையைப் பருகும்
இந்த தேசம்….
துரோகத்தை….ஏப்பமாக..
.விடுகிறது….,காலங்காலமாய்
தொடரும்…துயரம்….
பூக்களை ரசிக்கும்
இவர்கள்..வேர்களின்
வேதனையை உணர்வதில்லை!
இது
காலங்காலமான
கலப்பைகளின் சாபம்!
கவனிக்கத் தவறிடின்
நம்
தலைமுறைக்கும்
பாவம்…!
அ.லில்லி ஏஞ்சல்(முத்தமிழ்)
திருக்கோவிலூர்.