Limaraiku Poems By Na Ga Thuraivan | ந க துறைவன் லிமரைக்கூ கவிதைகள்

 

 

1.
கலகலப்பாய் ஆனந்தமாய் சிரி
வாழ்வின் கனவோடு
வானில் பறந்துச் சிறகை விரி.

2.
அவள் முகம் எத்தனை அழகு
உன் எண்ணத்தை வெளிப்படுத்தி
மெல்ல காதல் கொண்டு பழகு.

3.
விழித்துக் கொண்டது ஆழ்மனம்
உணர்ந்து அனுபவம் பெற்றதினால்
அடங்கி ஒடுங்கியது பெருஞ்சினம்.

4.
குழந்தை மீது கோபப் பாய்ச்சல்
பயத்தில் படுத்தவனுக்கு
இரவு முதல் கடும் காய்ச்சல்.

5.
தாய்மடி சுவைக்குது கன்று
பசுவின் பாலே கொடுப்பது
குழந்தைக்கு நன்று.

6.
விளையாடுவதே மனத் தெம்பு
சிலநேரம் செய்வான் குறும்பு – அக்
குழந்தையைக் கடித்தது எறும்பு.

7.
மரங்கள் அழிந்த காடு
மாரி பொய்த்ததால்
நீர்வளம் இழந்தது நாடு.

8.
கிழவி விற்றாள் நுங்கு
வாங்கிப் பகிர்ந்தாள் அம்மா
குழந்தைகள் அவரவர் பங்கு.

9.
நடந்தவனைத் தடுத்தது கல்
நன்கு தாங்கிக் காத்தது
மெத்தென்று பூங்காவின் புல்.

10.
உள்ளம் உருகும் மெட்டு
கிராமத்து மண்வாசம் வீசும்
நாடோடிக் காதல் பாட்டு.

11.
வயலில் முதிர்ந்த நெல்
பறக்கும் மின்மினிகள்
காவல் காக்கும் இரவில்.

12.
தாயிடம் சோறுண்ணும் சேய்
வேடிக்கைப் பார்த்து நிற்கிறது
அருகில் நன்றியுள்ள நாய்.

13.
தோப்புக்குள் சின்னக் குட்டை
அதிலே ஊறுது உரித்தத்
தேங்காய் மட்டை.

14.
வாழ்வில் எனக்கு வழிகாட்டி
அனுபவத்தைச் சொல்லி வளர்த்தாள்
வயது முதிர்ந்தப் பாட்டி.

15.
வீடெல்லாம் ரொம்ப ஈரம்
கட்டிலில் படுத்திருப்பவருக்கு
நேற்று முதல் விஷசுரம்.

16.
வீசும் மெல்லிய காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்குது நாற்று.

17.
கணநேர மனச் சலனம்
அவமானத்திற்கு அஞ்சி
கற்பு இழந்த பெண் மரணம்.

18.
கண்ணாடியில் தூசு
படிந்து இருக்கிறது
மனதில் மாசு.

19.
நிலவு இல்லாத இரவு
நடந்ததாம் அடுத்த தெருவில்
யாருமில்லாத வீட்டில் களவு.

 

எழுதியவர்: 

ந க துறைவன்
வேலூர் – 632 009
செல் எண்: 893905822.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *