உலகம் முழுவதும் கோவிட்-19 பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேலையில் பொது முடக்கம், வேலை இழப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் சுமை என மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாகப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் தீண்டல் அதிகரித்து வருகிறது. கோவில் -19 பெரும் தொற்று ஏற்பட்டு சுமார் 8 மாதங்கள் கடந்த நம்மை பல்வேறு வகையில் துன்புறுத்தி வருகிறது என்பதே நிதர்சன உண்மை.

உலகம் முழுக்க எல்லா நாடுகளும் இதைப்பற்றிப் பேசி கொண்டியிருக்கையில் இந்தியா ஓரு பக்கம் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சுழல் ஆய்வு மேலாண்மை  EIA2020, இரயில்வே தனியார்மயம், பொதுத்துறையைத் தனியார்மயமாக்கம் என அரசாங்கம் நோய் தொற்றலைக்  கருதாமல் தனியார் லாப நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. மறுபுறம் ஊடக சுதந்திரம், முஸ்லிகளுக்கு எதிரான போக்க, ராமர் கோவில் பூஜை என வேறு பாதையில் போய்க்கொண்டு இருக்கிறது. உலக நாடுகள் முழுக்க பரப்பான இவ்வேலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதைப்பற்றி பிரபல நாளேடுகள் நியூயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற தளங்கள் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் பொது முடக்கத்தில்  பெண்கள் வீட்டிலிருந்து வேலைச்செய்யும் சுழலை உண்டாக்கி அலுவலகப்பணி, வீட்டுப் பணிகள் என இரண்டும் ஓரு சேர வீட்டில் பல பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது.

அதுமட்டுமின்றி பெண்கள் தங்களின் குழந்தைகள் கல்வி கற்க ஆன்லைன் வகுப்புகளையும் கண்காணிக்க வேண்டிய உள்ளது. வீட்டிலிருக்கும் ஆண்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பொது முடக்கத்தில் இணையத்தில்  ஆண்கள் அதிகமாக  Porn போர்ன் வீடியோக்கள் பார்ப்பதும் அதிகரித்து வந்துள்ளது.அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் சார்ந்த பாலியில் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகிறது என உலக சுகாதார நிறுவனமும் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்  மூலம் குழந்தைகள் மீதான பாலியில் ரீதியான  அதிக அளவில் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனார்  என ஆய்வு தெரிவிக்கிறது. இது மேலும் Sex Traffic ஊக்கவிக்க வகை செய்கிறது.

ஆன்லைன் பாலியில் சீண்டல், குடும்ப வன்முறை என ஒருபக்கம் இப்படி எனில் மறுபக்கம் கிராமபுரத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கோவிட்-19 பொது முடக்கத்தில் சுமார் 5584 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது எனக் குழந்தைகள் பாதுகாப்பு மையம் தெரிவிக்கிறது. ஆனாலும் அதுவும் கூட குறைவே. நமக்குத் தெரியாமல் ஆயிரம் ஆயிரம் திருமணங்கள் நடைபெற்று வருகின்றது. கர்நாடகாவில் 118,ஆந்திராவில் 204, தெலுங்கானாவில் 165 என நாடு முழுக்க பல இடங்களில் தடுக்கப் பட்டாலும் இது கணிசமாக வட மற்றும் மத்திய இந்தியாவில் பெரிதும் நடைபெற்ற வருகிறது என்பதைப் பார்க்க முடிகிறது. இதைப்போன்றே UNICEF ஆய்வறிக்கையில் 2017ல்  இந்தியாவில் 27% பெண்குழந்தைகள் 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள் எனவும் அதிலும் குறிப்பாக 7% குழந்தைகள் 15 வயதிற்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது எனச் சொல்கிறது. இந்த கோவிட்-19 பொது முடக்கம் மக்களிடம் கணிசமான  வேறு சில உந்துதலையும் எடுத்துக் காட்டாகக் குறைந்த செலவில் திருமணம், வரதட்சணை போன்ற காரணங்கள் கூறப்படுகிறது. உலகப் பார்வை என்ற அமைப்பு அதிகரித்து வரும் கொரானவால் இது மேலும் 4 மில்லியன் கட்டாய குழந்தை திருமணத்திற்கு ஆட்படுத்தும்.  காலவரையற்ற பள்ளி மூடல், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழ்நிலை என எல்லாம் பெண் குழந்தைகளின் வாழ்கையை ல கேள்விக்குறியாகி உள்ளது.

குழந்தை திருமணத்தை தடுத்து ...

குழந்தை திருமணமும் கிராம-நகர் புற இடைவெளியும்

NFHS-4 வெளியிட்ட குழந்தை திருமணங்கள் ஆய்வில் கிராமபுறத்தில் 14.1 % யாகவும் இது  நகர்ப்புறத்தில்  6.9% இருப்பதாகத் தெரிவிக்கிறது. இந்த இடைவெளி என்பது சுமார் 9% சதவீதம் கல்வியும், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் நகரத்தைவிடக் கிரமங்களில்  பின் தாங்கிய சூழ்நிலையிலே இத்திருமணங்கள் நடப்பதாகத் தெரிவிக்கிறது. பீகாரைச் சேர்ந்த 37 வயதான மீனா தனது 15 வயது மகளுடன் டில்லியில் புலம் பெயர் தொழிலாளராக பணியாற்ற வருகிறார். இவரின் மகன் கிராமத்தில் உறவினர்களுடன் படித்து வருகிறான். எனவும் பெண் குழந்தை என்பதால் தனியாகக் கிராமத்தில் விடமுடியாது சூழ்நிலையில் தங்களுடன் டில்லிக்கு அழைத்து வந்துவிட்டோம் என்றும் கூறுகிறார். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது தனது மகளுக்கு ஒரு ஆணுடன் நிச்சயக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு முன் வரதட்சணை பணத்தைக் கொடுக்க வேண்டும். பொதுவாகப் படிக்காதவர்கள் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு எனக் கருதுவதே திருமண சடங்கை மட்டுமே. இதற்குக் காரணம் அவர்களுக்குப் பெண்களின் பாதுகாப்பு, வயது கூட இருப்பின் அதிகமான வரதட்சணை, அவளின் கண்ணித்தன்மை போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

இதில் எங்கு நாம் அவர்களிடம் பெண்ணின் உரிமையைப் பற்றிப் பேசுவது. இங்கு தான் இந்த இடைவெளி ஏழைக்கும் பணக்காரர்களுக்குமானது என்பது புரிகிறது. குறிப்பாகப் புலம்பெயர் தொழிலாளர்களின் மகள்களைக் கட்டாய திருமணத்திற்குத் தள்ளுகிறது. இதைப்போன்ற  தினக்கூலி, பொது முடக்கம் போன்ற பல காரணங்களால் புலம்பெயர் தொழிலாளர்கள் வெறும் கால்களுடன் சொந்த ஊரை நோக்கிச் சென்று வருகின்றனர். இது ஒரு புறம் என்றால் பருவமழை முன்னே பெய்தால் ஆசாம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்கள் வெள்ளத்தால் பெரும் தாக்கத்தைச் சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் திருமணம் என்பதை ஒரு பெண்களுக்குச் செய்யும் சடங்காக எண்ணி மேலும் அதிகரித்து வருகிறது.

Prohibition of Child Marriage Act 2006, என்ற சட்டத்தின் மூலம் குழந்தை திருமணத்தை முழுமையாக தடுக்கமுடிவதில்லை. மேலும்   PCM Act 2006,நிறைவேற்றப்பட்டத்திலிருந்து  2017 வரை இப்படியான திருமணங்களின் மூலம் நடக்கும் உடலுறவு கற்பழிப்பாகக்  கருதப் படவில்லை. அது திருமணத்தின் ஒரு சடங்காகப் பார்க்கப்படுகிறது. பின் 2017ற்கு பிறகு Independent through vs Union of India  வழக்குப் பதிவு செய்து 15 வயதிலிருந்து 18 வயதாக மாற்றிப் பிரிவு 375 IPC கீழ் உள்ள குழந்தைகளுக்கு எதிரானது என வரையறுக்கப்பட்டது. மேலும் இக் குழந்தைகளிடம் விருப்பமின்றி உடலுறவு கொள்வதும் தவறு  எனவும் அவற்றைக் கற்பழிப்பாகக் கருதப்படும் என்றும் தீர்ப்பளித்தது.

Is Tamil Nadu Seeing A Steady Spike In Domestic Violence Cases ...

குழந்தையை  பாலியலுக்காகக்  கடத்தல்

கோவிட்-19 பொது முடக்கத்தில் மற்றொரு பாதிப்பு குழந்தை கடத்தல் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் டில்லியில் 15 வயது சிறுமி காணாமல் போனதில் விசாரித்ததில் 9 குழந்தைகள் ஓரே சமயத்தில் வடக்கு டில்லியில் மீட்கப்பட்டனர்.
ஒரு ஆய்விற்காகக் கணக்கெடுக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சுமார் 89 சதவீதம் பேர், பெண்கள் மற்றும் குழந்தைகளை உழைப்புக்காக கடத்துவது பொதுமுடக்கத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் “மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக” இருக்கும் என்று கூறியுள்ளனர்.

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், உழைப்பு நோக்கத்திற்காக பொது முடக்கத்தில் காலத்திற்குப் பிந்தைய காலத்தில் மனித கடத்தல் அதிகரிப்பதற்கான “மிக அதிக வாய்ப்பு உள்ளது” என்ற கவலையை அரசு சாரா நிறுவனங்கள் குரல் கொடுத்தன. “தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் 76%  பேர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் கடத்தல் ஆகியவற்றின் நோக்கத்திற்காக மனித கடத்தலைச் செய்கின்றனர். கிராமப்புற அதிக கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களின் விழிப்புணர்வு முக்கிய தேவையாக வலியுறுத்தப்படுகிறது.

கடத்தல்  மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தொற்றுநோய்க்குப் பிந்தைய மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். வாழ்வாதாரத்தை இழந்து பசி மற்றும் பட்டினியை எதிர்கொள்ளும் குடும்பங்களில் குழந்தை கடத்தல் உட்பட அனைத்து வகையான சுரண்டல்களுக்கும் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் கடத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கக் கடத்தல் நடக்கும் பகுதிகளில் ஒரு பரந்த கட்டாய பாதுகாப்பு வலையைப் பரப்ப வேண்டும்   என்று எங்கள் அறிக்கையின் மூலம் நாங்கள் அரசிடம் பரிந்துரைக்கிறோம், ”என்று கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சங்கர் கூறினார்.

தொற்றுநோய் உலகில் பல தொல்லைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அதில் பெண்கள் மீதான அதன் தாக்கமாகும்.பேசப்பட வேண்டும் என்பதே இப்போதைய தேவை.  மன அழுத்தத்திலிருந்து நிதி உறுதியற்ற தன்மை மற்றும் சுகாதாரத்துக்கான அணுகல் இல்லாமை வரை, வைரஸ் அனைத்து வயதினருக்கும் மற்றும் நாடுகளுக்கும் உள்ள பெண்களுக்குக் கடுமையான பாதிப்பைத் தந்துள்ளது. இந்த அதிகரித்த வேலைச் சுமை பல பெண்களுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற மனநல பிரச்சினைகளை உருவாக்குக்கிறது. ஏராளமான பெண்கள் , சமூக தனிமைப்படுத்தலின் விளைவாகக் கோபம் மற்றும் அதிக அளவு விரக்தியையும் அனுபவித்திருக்கிறார்கள்.

பெண்களுக்கான தேசிய ஆணையம் கடந்து ஏப்ரல் உதவி எண்களை அறிவித்து இருந்தனர். இருந்தும் இப்படி நாடு முழுக்க குடும்ப வன்முறை, குழந்தை கடத்தல், பாலியல் வன்முறை அதிகரித்து வருவதால் அரசு இதை மேலும் கவனிக்க வேண்டிய கட்டாய தேவையுள்ளது. இதைத் தொடர்ந்து கேரள அரசாங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இயக்குனார். அனுபாமா குறுஞ்செய்தி/வாட்ஸ் ஆப் மூலம் மித்ரா 181 சேவையை   அறிமுகப்படுத்தியுள்ளது.  இரண்டு நாட்களுக்கு முன்பு மகாராட்ஷாவில் பெண்கள் பாதுகாப்பு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதையெல்லாம் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது எல்லா  பெண்களின் கோரிக்கையாக வைக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *