லண்டன் தோடா சிங் – தோழர் சுர்ஜித்
ஆகஸ்ட் – 1
தேசாபிமானி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் பொது செயலாளராக பணியாற்றிய ஹர்கிஷன் சிங் சுர்ஜித் நம்மை விட்டு பிரிந்து இன்றோடு 16 வருடங்கள் நிறைவடைகிறது.
கடந்த 2008 ஆகஸ்டு 1 ஆம் தேதி தான் தோழர் நம்மை விட்டு பிரிந்தார்.
1916 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள முண்டாலையில் பிறந்த இவர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் விவசாய சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
1934- ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் இயக்கதோடு இணைந்தார். அகில இந்திய கிசான் சபையின் பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் தனது 16 ஆம் வயதில், அதாவது 1932 ஆம் ஆண்டு இந்திய இளைஞர்களின் ஆதர்ச நாயகன் தோழர் பகத்சிங் நினைவு தினத்தன்று ஹோஷியார்பூர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை நோக்கி காவல்துறையின் துப்பாக்கியிலிருந்து சீரி பாய்ந்து வந்த தோட்டாக்களை கண்டு அஞ்சாமல் தீரத்தோடு பிரிட்டனின் “யூனியன் ஜாக்” கொடியை கீழே இறக்கி இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றியதற்காக இவர் கைது செய்யப்பட்டார்.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரின் பெயரை “லண்டன் தோடா சிங்” என்று குறிப்பிட்டார். தமிழில் இதற்கு லண்டனை அழிக்கும் சிங் என்று பொருளாகும்.

லாகூரில் பிரபலமாக உள்ள செங்கோட்டை ஜெயிலில் இருட்டு அறையில் ஒன்றரை வருஷம் வாழ்ந்ததால் சுர்ஜிதின் கண் பார்வை மங்கி போனது. கைதிகளின் சுகாதார விவரங்களை சேகரிக்க வந்த ஐரிஸ் மருத்துவரின் நிபந்தனையை ஏற்காமல், பிரிட்டிஷ் அரசு மறுத்து தொடர்ந்து இவரை இருட்டு அறையில் இருந்து விடுவிக்காமல் இருந்து இருந்தால் இவர் தனது பார்வ சக்தியை முழுவதுமாக இழந்திருப்பார்.
பத்து வருடம் சிறை வாழ்க்கையும், எட்டு வருடம் தலை மறைவு வாழ்க்கையும் வாழ்ந்து தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவராக இவர் வளர்ந்து வந்தார்.
இரண்டு முறை பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றினார். அவசரநிலைக்கு எதிராக, காலிஸ்தான் போர்க்குணம் மற்றும் மதவெறிக்கு எதிராக உறுதியாகப் போராடினார்.
திருத்தல்வாதிகளுக்கு எதிராக இடைவிடாது போராடிய CPI-M இன் நிறுவனத் தலைவர்களில் சுர்ஜிதும் ஒருவர் ஆனார். இவர் ஒரு தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி. கியூபா ஒற்றுமைக் குழுவில் முக்கியப் பங்கு வகித்தார்.
தோழரின் நினைவு எப்போதும் நமக்கு வலிமையையும் ஆற்றலையும் தரும்
எழுதியவர் :

M V கோவிந்தன்
CPI (M) மத்திய குழு உறுப்பினர். மேலும் கேரளாவின் முக்கியமான அரசியல் தலைவர்.
மலையாள செய்தித்தாளான தேசாபிமானியின் முன்னாள் தலைமை ஆசிரியர்.
https://www.deshabhimani.com/articles/harkishan-sing-surjith/1129063
தமிழில் : டயானா சுரேஷ்
மேலும் படிக்க கிளிக் செய்யவும் : மாமனிதர் சூர்ஜித்
நூலாசிரியர் : என் . ராமகிருஷ்ணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

