ராதா வழக்கமாக செல்லும் கோவிலுக்கு சென்று அம்மன் தரிசனம் முடித்து அம்மனுக்கு முன்னால் சிலையாக அமர்ந்திருந்தாள் .அங்கு இரண்டு சிலைகள் இருந்தன ஒன்று கற்சிலையாக அம்மனும் உயிர் சிலையாக ராதாவும் இருந்தனர் .சிலைகளுக்கு இடைய ஒரு மெளன உரையாடல் நடந்து கொண்டிருப்பதாக பார்த்தவர்களுக்கு தோன்றியது.
ஆறு மாதத்திற்கு முன்னால் ராதா தன் தாய் தந்தையருடன் எவ்வளவு அருமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாள்.ராதா வீட்டிற்கு ஒரே பெண் அதனால் அவளின் பெற்றோர் தன் வீடு அருகிலேயே அவளுக்கு ஒரு வீடு கட்டி கொடுத்து அங்கேயே வைத்துக் கொண்டனர் மாப்பிள்ளையும் நல்லவர் அவளை புரிந்து கொண்டு நடந்து கொண்டிருந்தார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர் ராதாவிற்கு இரண்டு தம்பிகள் இருந்தனர் .
திடீரென்று ஏற்பட்ட கொரானா தொற்றால் குடும்பமே நிலை குலைந்தது அதுவும் ஆரம்பகாலத்தில் ராதாவுக்கு லேசான சளி ஜுரம் ஆகத்தான் ஆரம்பித்தது பிறகு அதிகமானதால் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே தன் மகளுக்கு ஏதோ வரக்கூடாத கொடிய நோய் வந்துவிட்டதாக எண்ணி தாய் மிகவும் மன முடைந்ததால் உடல்நலம் பாதித்தது. அதனால் ஏற்பட்ட ஊரடங்கும் மனித சமுதாயத்திற்கே மிகவும் புதியது என்பதால் அதனை தாங்கிக் கொள்ளும் பக்குவம் நிறைய பேரிடம் இல்லை. முக்கியமாக ராதாவின் தாயிடம் இல்லாததால் திடீரென்று ஏற்பட்ட மூச்சுதிணறல் அவருக்கு சைலண்ட் ஹார்ட் அட்டாக்கை வரவழைத்தது . சுயநினைவு இழத்தலும் அவருக்கு ஏற்பட்டது . அதீத பயம் காரணமாக அவர் தன் இன்னுயிரை இழந்தார்.
அதனைப் பார்த்த மொத்த குடும்பமும் கையறு நிலைக்கு சென்றது. எந்தச் செயலுமே அவர்களை மீட்க முடியவில்லை.ராதா நிலைகுலைந்துபோனாள மருத்துவமனையும் அவளைத் தன் தாயின் முகத்தைப் பார்க்க அனுமதிக்கவில்லை. கதறி அழுதது தான் மிச்சம்.அதனைப் பார்த்த தந்தைக்கும் மனைவி மற்றும் மகளைப் பிரிந்த ஏக்கத்தினால் மனைவியின் காரியங்கள் முடிவதற்குள் துக்கத்திலேயே ராதாவின் தந்தையும் இறந்துவிட்டார். ஒரே நேரத்தில் தனது தாயையும் தந்தையையும் இழந்த ராதா மிகவும் மனம் உடைந்தால் அதுவும் தாயின் ஊர்வலத்திற்கு கூட அவரால் வர முடியவில்லை தந்தையின் காரியத்திற்கு வந்தவளை உள்ளே விட மறுத்தனர் தம்பிகள் இருவரும்.
மிகவும் மனம் சோர்ந்த அவளை அவளுடைய கணவன் ராஜேஷ் தாங்கிப் பிடித்தான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தனக்கு நோய் சரியாகி விட்டது என்று கூறியும் சமுதாய மக்கள் அவளை தந்தையின் முகத்தை பார்க்க அனுமதிக்கவில்லை. தாயின் முகத்தையும் பார்க்கவில்லை அப்போது மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க வில்லை. தந்தையின் முகத்தையும் பார்க்காமல் பித்துப் பிடிக்கும் நிலையில் இருந்தவளை கணவனும் குழந்தைகளும் தாங்கிப் பிடித்தனர் குழந்தைகள் தன்னிடம் வந்ததை எண்ணி ஆறுதல் அடைந்தாள்.
இன்று அனைத்தும் சரியாகி விட்டது தம்பிகள் புரிந்துகொண்டு தவறுக்கான மன்னிப்பும் கேட்ட பிறகு ஒன்றும் சொல்ல முடியவில்லை .ஆனால் அவளுக்கு மிகப்பெரிய ரணம் உண்டாக்கியது கொரானா. அதைத்தான் அந்த தெய்வத்திடம் முறையிட்டு செல்வாள் ராதா. இழப்புகளின் வலி என்றுமே குறையாது என்பதை அறிந்த ராதா சோர்வடைந்தாள். இதற்கு காலம் தான் மருந்து கொடுக்கும் என அப்பகுதி மக்கள் நினைத்தனர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.