கொடுமைமிகு நாட்களிலும் கண்ணியம் காப்பது ஜிகாத்
கடமையொன்றே கண்ணாக களம் காண்பது ஜிகாத்
பொறுப்பொடு பெற்றோர்க்கு பெருமை சேர்ப்பது ஜிகாத்
பொறுத்தலும் மனிதம் போற்றி மறத்தலும் ஜிகாத்
கால்கடுக்க காதங்கள் பல கடந்து நீதிக்குப்போர் ஜிகாத்
மதமறியாது குலமறியாது
மொழியறியாது இனமறியாது
மனத்தை பிணைத்தவரை
அணைத்து கொள்வது ஜிகாத்
அன்பை அள்ளித்தெளிப்பது
லவ் ஜிகாத்…
–சிந்து