வலிக்காத அடியொன்றோடு
முடித்துக்கொள்,
கண்டும் காணாது போவது
போல் முடித்துக்கொள்,
என்னுடன் பேசாமல்
வேறு யாருடனாவது பேசுவதைப் போல் முடித்துக்கொள்,
அலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் போது
தொடர்பைத் துண்டித்து
முடித்துக் கொள்….
யாரேனும் என் பெயரினைக்
கேட்டால்
தெரியாதென முடித்துக்கொள்,
பிறந்த நாள் சாக்லெட்டை
என் அருகில் இருப்பவனுக்குத் தந்து விட்டு
எனக்குத் தராமல் சென்று முடித்துக்கொள்,
நான் வெளியே சென்று வர
அழைக்கும் போது
வரமாட்டேனென முடித்துக்கொள்,
இனி உன்னைப் பார்க்க மாட்டேன்
உன்னோடு பேசமாட்டேனென மட்டும் சொல்லிவிடாதே,
மரணதண்டனையை விடக் கொடிது உன் மௌன தண்டனை!

m.mubarak kavithaikal மு.முபாரக் கவிதை
Posted inPoetry
