விக்னேஷ் எழுதிய “மின்மினி ஹைக்கூ...!” புத்தகம் | M Vignesh's Minmini Haiku Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

கவிஞர் விக்னேஷ் எழுதிய “மின்மினி ஹைக்கூ…!” – நூல் அறிமுகம்

என் வாசிப்பு திசையை சற்றே திருப்பி, கவிதை நூல்களை தேடிச் சென்ற பொழுது என் வலை வீச்சில் அகப்பட்டது அழகிய, சின்னஞ்சிறு, வண்ணமயமான, மீன்களை போல, என் மனதில் துள்ளித் திரிய பிடிப்பட்டது, இந்த ஹைக்கூ புத்தகம்..

சிறு துளி மழையில் மறைந்திருக்கும் ஆழி போல்
சிறு சொற்றொடருக்குள் நம் மனதைத் திறக்கும் மௌன மொழி ஹைக்கூ..

நம் மூவண்ண தேசியக் கொடியை கண்டதும் எட்டிப் பார்க்கும் தேசப்பற்றை போல்,
மூவண்ண வானவில்லின் மெல்லியமடிப்பினின்று எட்டிப் பார்க்கும் கவிதையே ஹைக்கூ..

என் மனவலைக்குள் துள்ளித் திரிந்த சில மீன்களை இவ்வலைத்தளத்திற்குள் நீந்த விடுத்துள்ளேன்..

*எதார்த்த மனிதன் சலிப்பான வாழ்க்கையில் மாற்றம் காண முயல்கிறான் எனினும், கனவுகள் யாவும் மின்மினியாய் சிறு இன்பங்களை கொடுத்து கனவாய் கரைந்து விடுகிறது விரைவில்..* என்று சுற்றமும், சூழமும் மாறாத வரையில் நம்மிடமான மாற்றம் பெரும் ஏமாற்றமே!!
என்ற எண்ணங்களை சிதறவிட்டு தன் எழுத்தாணியை எடுத்துள்ளார் கவிஞர் விக்னேஷ்..

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

கருவுற்ற நிலா//
பெற்றெடுத்த பிள்ளை//

🔹 அதிகாலை
இயற்கையின் எழில் மிகு தோற்றத்தை வர்ணிக்கும் விதம்
—————————-
அடிபட்ட முதியவரின் செய்தி//
அள்ளுகிறது ஆயிரம் லைக்குகள்//

🔹மனிதநேயம்
(Mirror of the current society)
—————————
சமத்துவமோ சமையலறையில்//

நாகரிகமோ நடுத்தெருவில்//

🔹இன்றைய பாரதம்
இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி விட்டோம் என்பது தெரியாமலே வாழ்க்கையை நகர்த்தும் இன்றைய சமுதாயம்
——————
முற்றுப்பெற்ற உலகம்//

முயன்றால் முற்றுப்புள்ளியும் காற்புள்ளியாகும்//

🔹மாற்றம்
மாற்றம் ஒன்றே மாறாதது ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வை இதில் அப்பட்டமாகிறது..
———————
ஊதுவது இன்றைய புகை//
நாளைய சங்கு//

🔷சிகரெட்
போதைக்கு அடிமையாகும் ஒவ்வொருவருக்குமான ஆசிரியரின் சவுக்கடி..
——————–
சிக்குண்ட நூல்//
முகவரி இல்லா மீன்களின் தூண்டில்//

🔹முகநூல்
சிக்கியது நூலாக இருந்தாலும் முகநூலாக இருந்தாலும் மீள்வது கடினமே என்பது ஆசிரியரின் பார்வையில்..
———————-
கலாச்சாரம் என்னும் கரு//
இளமை என்னும் விபத்தின் கருச்சிதைவு//

🔹பண்பாடு
பண்பாட்டை சீர்குலைக்கும் இளமை மோகத்தை எச்சரிக்கும் ஆசிரியரின் குரல்..
———————–
அதீத மறதி//
ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஏமாளி//

🔹 மக்கள்
புரிந்து இருக்கும் என நினைக்கிறேன் ஆம்..
Election atrocities..
———————-
கட்டாய அன்பளிப்பு//
கண்ணுக்கு தெரியாத பிச்சை//

🔹 லஞ்சம்
இனியாவது சுதாரிக்குமா நம் சமுதாயம் *கொடுப்பவர்களும் வாங்குபவர்களும்*
——————–
சுமைதாங்கும் தொழிலாளி//
சுமக்க முடியாத சுமை//

🔹 விலைவாசி
மாற்றத்தை நோக்கி பயணித்தால் சுமப்பது லெகுவாகும்..
———————–
வழி துணையாய் தனிமை//
மனதோடு மௌன உரையாடல்//

🔹 நடைபயணம்..
——————————-
இவ்வாறு கவிஞரின் சொற்களின் நெசவு எளிமையானது;
அதின் அர்த்தம் ஆழமானது..

வார இறுதி விடுமுறை யோடு மழைக்கான விடுமுறையும் சேர்ந்து வந்தால் கிடைக்கும் மகிழ்ச்சியைப்போல தொடர் வாசிப்பினூடே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது இந்தச்சிறிய ஹைக்கூ தொகுப்பு..
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

நித்திய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், கோர்ப்போமா நம் கரங்களை..?!!
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

📚 நூலின் விவரங்கள்:
தலைப்பு விவரம்
நூலின் பெயர்: மின்மினி ஹைக்கூ…!
ஆசிரியர்: விக்னேஷ்
வெளியீடு: மின்கவி (www.minekavi.com)
விலை: ₹.150
அறிமுகம் எழுதியவர்:     அ.சுகிர்தா

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *