சைனா டவுன் மற்றும் சில சிறுகதைகள் – நூல் அறிமுகம்
சிறுகதைகள் இலக்கிய உலகில் தனக்கென்று வலுவான இடத்தை எப்போதும் பெற்றிருக்கிறது உலகில் எல்லா மொழிகளிலும் சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன சிறுகதைகளில் சொல்லப்படும் செய்திகள் தனிமனித வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு நுட்பமான உணர்வுகளைப் படம்பிடிக்கும் அற்புத ஆற்றல் கொண்டவை.
சிறுகதயின் தாக்கம் மனதில் தொடர்ந்து ரீங்காரம் செய்யும் இயல்புடையவை.
“சைனா டவுன்” சிறுகதை தொகுப்பு நூலில் உள்ள கதைகள் மிகுந்த நுட்பமான உளவியல் தாக்கமுடையவை.
இந்த சிறு கதை தொகுப்பு நூலில் தென்கொரிய பெண்மணி எழுதிய “சைனா டவுன்” என்ற நீண்ட சிறுகதையும் லியோ டால்ஸ்டாய் எழுதிய “கடவுள் உண்மையை காண்கிறார் ஆனால் காத்திருக்கிறார்”, “மூன்று கேள்விகள்” என்ற இரண்டு கதைகளும்
அர்னால்டு பைன் எழுதிய “பர்சில் இருந்த கடிதம் ” என்ற சிறுகதையும்,
வில்லியம் சோமர்செட் மோம் எழுதிய “எறும்பும் வெட்டுக்கிளியும்”
என்ற சிறுகதையும் இடம் பெற்றுள்ளன. சிறுகதைகள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மிக அற்புதமாக எளிய நடையில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
இந் நூலை சென்னை ஹெர் ஸ்டோரீஸ் வெளியிட்டுள்ளது.
மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர் ராஜபாளையத்தில் வசித்து வரும் மிகச் சிறந்த எழுத்தாளர் கவிஞர் மதுமிதா (Madhumitha Raja) அவர்கள்.
18 மொழிபெயர்ப்பு நூல்கள்,
பதினோரு தொகுப்பு நூல்கள் என பல உருவாக்கி தமிழுக்கு அளித்திருக்கிறார்.
21க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
எளிமையான தொடர்ந்து படிக்க ஆர்வ மூட்டும் வகையில் அமைந்துள்ள இவரது தமிழ் நடை மிக மிகச் சிறப்பாகும்.
தென்கொரியாவின் இலக்கியத்திற்கான உயர் விருது பெற்ற ஓ சுங் ஹி “சைனா டவுன்” என்ற நீண்ட சிறுகதையை எழுதி இருக்கிறார்.
ஒரு சிறுமி தன் வாழ்க்கைப் பயணத்தின் அனுபவத்தை சொல்லுவது போல இந்த சிறுகதை அமைந்திருக்கிறது.
சைனா டவுன் அல்லது கடற்கரை கிராமம் என்று அழைக்கப்படும் அந்த கிராமத்திற்கு புலம்பெயர்ந்த அந்தச் சிறுமி ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் சூழ்நிலைகளை சொல்லும் தன்மை, அந்தச் சிறுமி சிறு வயதில் பெற்ற,
காணும்அனுபவங்களை விவரிக்கும் பான்மையும் ஆற்றொழுக்கு நடையில் அமைந்துள்ளது.
சைனா டவுனுக்கு செல்லும்போது வண்டியில் அனுபவித்த அனுபவங்கள், குடியிருக்கும் பகுதி பாலியல் தொழிலாளி சைனா டவுனின் மாலை நேரங்களில் முதியோர்களின் செயல்கள்,
அம்மாவின் ஏழாவது பிரசவ படும் பாடுகள்,
கணவருடன் வாழாத பாட்டியை முதுமையில் தாத்தாவின் வீட்டிற்கு அனுப்புவதும் அவரது இறப்பும்,
மனதை மிகவும் நெகிழச் செய்கிறது.
சிறுமி வயதுக்கு வரும் நிகழ்வுடன் முடியும் கதை.
வாழ்க்கை கதைகளை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
லியோ டால்ஸ்டாயின் “கடவுள் உண்மையைக் காண்கிறார் என்ற கதையில் பாசமிக்க தந்தையாக வரும் ஆக்சியனோவ் எதிர்பாராமல் ஜெயிலுக்கு போவது, தன்னுடைய மனைவியே நடந்த கொலையை தான் செய்திருப்பேன் என்று உண்மைக்கு புறம்பாக நம்புதல் ஜயிலில் அவனுடைய நடத்தைகளால் எல்லாராலும் மதிக்கப்படுதல் கொலையாளி மாக்கர் சிமோனிச் ஜெயிலுக்கு வருதல், உண்மையை ஒப்புக் கொள்ளுதல், ஆக்சியானோவ் இறப்பு மரணம் மனதை என்னவோ செய்கிறது.
மூன்று கேள்விகளில் அரசனின் மூன்று கேள்விகளுக்கான விடைகளை முனிவர் மூலம் தீர்த்து வைப்பதே கதை.
மிகுந்த உளவியல் தாக்கம் உடைய கதை.
அர்னால்டு பைன் எழுதிய “பர்சில் இருந்த கடிதம்” உண்மையான மனித காதல் சாகா வரம் பெற்றது.
அதற்கு வயது கிடையாது என்பதைச் சொல்கிறது.
ஐந்தாவது கதையான “எறும்பும் வெட்டுக்கிளியும் ”
கதை உழைப்பவன் எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கிறான் அவன் எப்போதும் சிரமத்தையும் அனுபவிக்கிறான் ஆனால் சோம்பேறி ஏமாற்றி பிழைப்பவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.
இது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வியோடு உருவாக்கப்பட்ட கதை.
மொழி பெயர்க்கப் பட்ட எல்லா சிறுகதைகளும் அழகியல் நுட்பம் வாய்ந்தவை. அதைவிட கதைகளை பிற மொழிக் கதைகள் என்ற நினைப்பே வராமல் படிக்கும் ஆர்வத்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டு செல்லும் எழுத்தாளர் மதுமிதா (Madhumitha Raja) அவர்களுக்கு அனைத்து பெருமைகளும் சேரும்.
சிறுகதைகள் மனித வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் மிக நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டுகிறது என்ற வகையில் இந்த கதைகளும் மிகச்சிறப்பானவை படிக்கப்பட வேண்டியவை.
நூல்: ” *சைனா டவுன்*” மற்றும் சில சிறுகதைகள்
தமிழாக்கம்: மதுமிதா (Madhumitha Raja)
வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ் (Her Stories)
பக்கங்கள்: 122
விலை: ரூ. 160
எழுதியவர்:-
ச.செல்லத்துரை
உடுமலைப்பேட்டை
திருப்பூர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.