மதுசூதன் கவிதைகள் (Poems)

Madhusudhan Poems. It Contains Five Poetries in Tamil Language1)
கற்பனை தானென்றாலும்
எறும்புகளின் வரிசையில்
தும்பியின்
கண்ணாடிச் சிறகிற்கு
நான்
அவசரமாய் ஊர்வது
நன்றாகத் தானிருக்கிறது

******
2)
திரும்பிப் படுத்திருக்கும்
இருவருக்கும் நடுவில்
கண் விழித்துக்
காத்திருக்கிறது காமம்.

****3)
எறிந்தவனுக்கு என்ன ?
மேற் பரப்பில் தவ்வி தாவும்
சில்லுக்குத் தெரியும்
நீரின் சலனம்.

****
4)
எந்தக் கனி மரங்களைப்
பார்த்தாலும்
அங்கே ஒரு அரவம்
அங்கே ஒரு ஏவாள்
செய்வதறியாது ஆதாம்.

******5)

பழைய கிணற்றோரம்
நிற்கிற எனக்கு
குதிக்கிற தவளைச் சத்தம்
புதிதல்ல
ஏற்கனவே பாஷோ சொன்னது தான்.
ஒரு தவளை குதித்த பின்
குதிக்கத் தயாராகிற
என் நிழலின் தோளை
தடுத்தது
பாஷோவின் கைகளாக
இருக்குமோ ?

*******

Poems   மதுசூதன்   இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.