அப்பா இஸ் அப்டேட்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கஃபே காஃபிடேயில்
கிரிடிட் கார்டும்
மெக்டொனால்டில்
டெபிட் கார்டும் ஸ்வைப்
செய்து பழகிக் கொண்டேன்
அமேசானில் ஆர்டர் போட்டும் கற்றாயிற்று
பிளிப்கார்ட், ஸொமேட்டோ
பிக் பேஸ்கட்
ஒன்றையும் விடுவதில்லை.
வங்கிக் கணக்கிற்கு
மொபைல் ஆப்பையும்
தரவிறக்கம் செய்து
பழகிக் கொண்டேன்
இன்ஸ்டாகிராம்
முகநூல்
வாட்ஸ் அப்பெல்லாம்
இப்போது அத்துப்படி.
மேக் புக் கடைசி வெர்ஷனும் கை வசம்
டிஜிட்டல் உலகத்தில்
நானும் குடிமகன்.
நேற்று வரை
அப்பா கிராமத்து ஆளென
அறிமுகம் செய்த மகள்
இன்றைக்குச் சொல்கிறாள்
அப்பா ஈஸ் க்ரேட்.
அப்டேட் ஆகாத அப்பாக்களின் உலகத்துக்குள்
மகள்கள்
எட்டிப் பார்ப்பதேயில்லை.
******