ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் -மகளதிகாரம் - மரு.அ.சீனிவாசன்
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் -மகளதிகாரம் - மரு.அ.சீனிவாசன்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் -மகளதிகாரம் – மரு.அ.சீனிவாசன்

 

 

 

 

மகளதிகாரம் எனும் சிறப்பு- மறை

ஒரே மூச்சில் வாசித்து முடிக்க முடிந்தது
மகள்களுக்கான எல்லா செயல்களையும் மின்னல் வேகத்தில் தானே நடத்துகிறோம்.

மகளின் மனதைப் பற்றிக்கொண்டு மகளோடு வானுலா சென்று வந்ததாயிருந்தது தொகுப்பின் கடைசி வரி படிக்கும் போது!

மகளோடிருப்பவர்களின் மனதிற்கெலாம் இது ஒரு அணிகலன்!
மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியம் இல்லாத மனங்களுக்கு சமாதான கலன்!

மகள்களின் அன்பு எளிமையானது
எதிர்பார்ப்பு எளிமையானது
மகள் குறித்த கவிதைகளும் எளிமையானவையே!

எப்போதும் மகளோடே இருப்பவர்களுக்கு
வாழ்வின் வரத்தை ஒரு கணமேனும் இழக்க விழையாதவர்க்கு
மகளைப் பிரியும் காலம் நெருங்க நெருங்க அமைதியிழப்பவர்க்கு
‘மகளதிகாரத்தை’ கையில் ஏந்திய மணித்துளி முதல் ஒரு சமாதானம் ஒரு அமைதி, ஒரு நிவாரணம் கட்டாயம் கிட்டும்!

பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைப்பது போல, இனி மகள் உடனில்லா காலங்களில் ‘ மகளதிகாரத்தோடு’ இருந்து கொள்ளலாம் என்ற உபாயம் உத்தம நிவாரணமாய் இருக்கும்.

மகளும் இந்த மகளதிகாரமும் வேறு வேறல்ல மகளைப் பெற்ற அத்தனை அப்பாக்களின் ஈரம் பக்கத்துக்கு பக்கம் மணம் சேர்க்கின்றது.

திருக்குறள் என்பது பொதுமறை
மகளதிகாரம் அனைத்து தகப்பன்களுக்குமான சிறப்பு-மறை!

(பின்குறிப்பு: தொகுப்பிலிருக்கும் ஒரு கவிதையைக்கூட இங்கு எடுத்துக்காட்ட மனம் வரவில்லை! அனைத்து கவிதைகளும் விலைமதிப்பற்ற ரத்தினக்கற்கள்!! இங்கு அதை சிதறடித்தல் உசிதமான செயலாய் இல்லை!)

மரு.அ.சீனிவாசன்

நூலின் பெயர் : மகளதிகாரம்
ஆசிரியர் : அண் டன் பெனி 
பதிப்பகம் : தமிழ் அலை
விலை : ரூ 102

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *