மகளிர் தினம் குறித்து – நூல் அறிமுகம்
மகளிர் தினம் குறித்து அலெக்சாண்டர் கொலந்தாய் எழுதியக் கட்டுரைகளை வைத்து தமிழில் எழுத்தாளர் லெனின் அவர்கள் எழுதியுள்ளார். மொத்தம் இரண்டு கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. 1913ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சிக்கு முன்பு மகளிர் தினம் குறித்து முதல் கட்டுரை எழுதப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் என்ற அடிப்படையில் 1920ஆம் ஆண்டு புரட்சிக்கு பிறகு எழுதப்பட்ட இரண்டாவது கட்டுரையாகவும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
ஒவ்வொரு கட்டுரையும் வாசிக்கும்போதும், அந்த காலத்தின் சூழல்கள், நிலவும் பிரச்சனைகள் வைத்து கருத்துகள் முன் வைக்கப்படுகிறது. அதுபோல் இந்தப் புத்தகத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உள்ள வரலாறுகளைப் பற்றி பேசும் புத்தகமாக இருக்கிறது என்றே கூறலாம்.
தொழிலாளி வர்க்கம் என்கிற போது ஆண், பெண் இருவரும் சேர்ந்து வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கு மட்டும் மகளிர் தினம் என்பது அவசியமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் புத்தகமாக நான் பார்க்கிறேன்.
ஆண் தொழிலாளி பொருளாதார ரீதியாக சுரண்டப்படுகிறான். ஆனால் பெண் தொழிலாளியோ பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சுரண்டப்படுகிறாள். இந்த அடிப்படையில் தான் மார்க்சியம் சொல்வது ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்து சமூக, பொருளாதார விடுதலையை முன்நிறுத்தியதாகவும் இருக்கிறது.
உழைக்கும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கினால், அது உழைக்கும் வர்க்கத்தை இன்னும் பலப்படுத்தும் என்று வாக்குரிமை மறுக்கப்பட்டதாகவும், பின்பு சோசிலிஸ்டுகள் முயற்சியால் அது சாத்தியமானதாக இருக்கிறது.
” எவ்வித உரிமைகளுமின்றி பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களை வதைப்பது, அவர்களை அலட்சியமாகவும், அடிமைப்போலவும் நடத்துவது உழைக்கும் வர்க்கத்திற்கு எந்த பலனையும் தராது” என்று புத்தகத்தில் குறிப்பிடுகிறது. பெண்களை அடிமைப்போல் நடத்தும் நிலைமையை தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு போதும் இருக்க கூடாது என்று நூலாசிரியர் கூறுகிறார்.
![]()
பெண்களுக்கான உரிமையையும், கோரிக்கைகளையும் முன் வைத்து சர்வதேச அளவில் முழக்கத்தை முன்னெடுக்கும் விதமாக மகளிர் தினம் முதலில் கொண்டாடப்பட்டது.
மகளிர் தினம் என்பது என்ன?
அப்படியொரு தினம் அவசியம்தானா?
தொழிலாளி வர்க்கத்திற்கு ஒற்றுமை ஆபத்து விளைவிக்காதா?
என்று நிறையக் கேள்விகள் ரஷ்யாவில் கேட்க முடிந்ததாகவும் கட்டுரையில் அதற்காக பதில் இருப்பதாகவும் நூலாசிரியர் கூறுகிறார்.
ரஷ்யாவில் தான் முதன்முதலில் 1913ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இத்தாலி, ஹங்கேரி, டென்மார்க், ஸ்வீடன், நார்வே, சுவிட்சர்லாண்ட் நாடுகளில் உழைக்கும் பெண்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை செய்து வந்தார்கள்.
விலைவாசி உயர்வு, மகப்பேறு காப்பீடு, உழைக்கும் மகளிர் காப்பதற்கான சட்டம் போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி சர்வதேச அளவில் மகளிரைத் திரட்டுவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்பட்டதாகவும், குடும்பம்,அரசு,சமூகம் எங்கும் அதிகாரம் மறுக்கப்பட்ட நிலையில் பெண் அடிமைபோல் நடத்தப்பட்டதாகவும், பெண் தொழிலாளிகளை விழுப்புணர்வு ஏற்படுத்தி இயக்கத்திற்கு கொண்டு வருவது மட்டுமே முன்னேற்றத்திற்கான வழியாக சோசிலிஸ்டுகள் கூறுவதாக இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
மகளிர் தினத்தில் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக பெண்கள் அணிதிரப்பட்டு போராடுகிறார்கள். அதில் முக்கியமானதாக பெண்களுக்கான வாக்குரிமை பெறுவது குறித்து அதிகமாக இருக்கிறது.
ஆண் ஒரு தொழிலாளியாக மட்டும் இருக்கிறான். பெண் ஒரு தொழிலாளியாகவும், தாயாகவும், அடுத்த தலைமுறையை உருவாக்கும் பெண்ணாக முன்நின்று வருவதால், அவர்களுக்கான முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது உரிமையாக மாறியது. உழைக்கும் மகளிர்,வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் பெண் விடுதலையும் இணைந்து மகளிர் தினம் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து நூலாசிரியர் கூறுகிறார்.
1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவில் முதல் முதலில் வாக்குரிமை என்ற அரசியல் உரிமையை முன்நிறுத்தி மகளிர் தினத்தன்று போராட்டத்தை கொண்டு வந்தார்கள்.
1920ஆம் ஆண்டு சர்வேதச மகளிர் மாநாட்டில் ” பெண்களுக்கான வாக்குரிமை, சோசிலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பது, ஒன்றிணைப்பது, வலுப்படுத்துவது” என்று முழக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதாகவும் இருக்கிறது.
முதல் உலகப்போரின் முடியும்போது கடுமையாக விலைவாசி உயர்வு ஏற்பட்டதாகவும், அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளில் குடும்ப தலைவின் எழுச்சி ஏற்பட்டதாக இருக்கிறது.
1848ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி புருஷ்ய மன்னன் பெண்களுக்காக வாக்குரிமையை வழங்கியதாகவும், ஜெர்மன் தொழிலாளர்கள் அந்தத் தேதியை மகளிர் தினமாக கொண்டாடியதாகவும், பின்பு
“ஜெர்மனியில் பெண்ணுக்கான வாக்குரிமையும், ஆஸ்திரியாவில் மகளிர் தினம்” என்று பத்திரிக்கைகளில் மகளிர் தினம் குறித்த கட்டுரைகள் வெளிவந்தது.
முதல் சர்வதேச மகளிர் தினம் 1911ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் தான் முதல் காரணமாக இருந்தது. பின்பு குழந்தைகளோடு ஆண்கள் வீட்டிலும், மனைவிகள் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பதுமாக நிலைமைகள் மாறியதாக புத்தகத்தில் இருக்கிறது.
கடைசியாக 1913ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதிக்கு மாற்றப்படுகிறது. உழைக்கும் பெண்களை முன்நிறுத்தி பேசும் தினமாக மாறியது.
மகளிர் தினம் என்பது மகளிருக்கான உரிமைகளை பெறும் தினமாக முதலில் இருந்தது. அனைத்து உழைக்கும் பெண்கள் தினமாக இருந்து பெண்களின் உழைப்பை சுரண்டும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறது.
உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து பெண்களுக்குக்கான உரிமையை தொடர்ந்து பேசும் தினமாக சர்வதேச மகளிர் தினம் அமைந்ததாக நாம் புரிய முடிந்தது.
உரிமைகள் என்றும் போராடிதான் பெற முடியும். மகளிர் தினங்களில் பெண்களுக்கான போராட்டம் தொடரட்டும்.
நன்றி தோழர்.லெனின் அவர்களுக்கு.
நூலின் தகவல்கள் :
நூல் : மகளிர் தினம் குறித்து
ஆசிரியர் : அலெக்சாண்டர் கொலந்தாய்
தமிழில் : ச.லெனின்
விலை : 25
பக்கம் : 24
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044-24332924
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

