தற்போது நம்மை பிரபஞ்ச உலாவிற்கு அழைத்துச் சென்று, அதனுள் ஆழ்த்தி, பிரமிக்க வைத்துள்ளார,”மகா கவிதை” மூலமாக!…இந்த உலகத்தில் எந்த ஒரு கவிஞனாலும் சிந்திக்க முடியாத அளவிற்கு, நாம் யோசித்துக் கூட பார்த்திராத ஒப்புமைகளை- உருவகங்களை.. வார்த்தைக்கு வார்த்தை.. வரிக்கு வரி… வாசகனுக்கு விருந்து படைக்கும் நூலாகிய இந்நூலை வாசிக்க ஆரம்பித்தால் முழுதும் ஒரே மூச்சில் வாசித்த பிறகுதான் கீழே வைக்க முடியும்.
ஆனால் நூலின் பல இடங்களில் வாசித்த வரிகளையே மீண்டும் மீண்டும் வாசித்து வாசித்து ரசித்து ரசித்து மகிழ வேண்டி இருக்கும். இயற்கை கவிஞரா, இயற்பியல் கவிஞரா, பிரபஞ்ச கவிஞரா, உலக மகா கவிஞரா என வார்த்தையை வடித்தவர் பற்றி ஒரு புறம் சிந்தித்துக் கொண்டே, மறுபுறம் நாம் எங்கெங்கோ கற்பனை உலகில் சென்று விட்டு மீண்டும் நூலின் வரிகளுக்கு.. நனவுலகுக்கு திரும்பச் செய்யும் ரசவாதத்தை நிகழ்த்துகிறது மகாகவிதை.
நிச்சயம் யாராலும் இந்நூலை முழுவதுமாக விமர்சிக்க முடியாது; விமர்சிக்கவும் கூடாது! ஏனெனில் தமிழகத்தில் உள்ள தமிழ் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு வீட்டிலும் வாசிப்பு இயக்கமாய் இந்த நூல் வாங்கி வாசிக்கப்பட வேண்டும்.. ஒவ்வொரு பள்ளியிலும். கல்லூரியிலும் இதை ஓர் அறிவியல் களஞ்சியமாய் வாய்விட்டு உரக்க வாசிக்கச் செய்ய வேண்டும் .அது மட்டும் அல்ல இந்திய மொழிகள் அனைத்திலும்.. உலக மொழிகள் அனைத்திலும் இது மொழிபெயர்க்கப்பட வேண்டும் .ஆனால் எல்லா மொழிகளிலும்” வைரமுத்துக்கள்” இருப்பார்களா என தெரியவில்லை. ஏனெனில் இதே சுவாரசியத்துடன், இதே அர்த்தத்துடன் மொழிபெயர்க்க முடியுமா என்பது சந்தேகம்.!
30 மாதம் சுமந்து கவிஞர் பிரசவித்த “மகா கவிதை “நூலை தமிழன் ஒவ்வொருவரும் சீராட்டி பாராட்டி கொஞ்சி மகிழ வேண்டும்.
சூழலியல் எழுத்தாளர் நன்னிலம் திரு நக்கீரன் அவர்கள் எழுதிய “இயற்கை 24*7” நூலை வாசித்த பின் இந்த நூலை வாசிக்க நேர்ந்தது .அவரது உரைநடை நூலில் இருந்த கருத்துக்கள் பல இந்நூலில் கவிநடையோடு நம் மனதிற்குள் ஆழப்பாய்வதை உணர முடிகிறது.
“பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழத்தகுதி படைத்த ஒரே இடம் பூமிப்பந்து மட்டும்தான்”… “சூரியனே கடவுள் -பூமிதான் தெய்வம்” என்று நமக்கு உணர்த்தும் இந்த நூல் பஞ்சபூதங்களான” நிலம், நீர், தீ, வளி,வெளி…” என ஒவ்வொன்றையும் ஆழமாக.. அறிவியலாய் வர்ணிக்கிறது.
“மகாகவிதை”யின் ஒவ்வொரு எழுத்துக்கும், வார்த்தைக்கும், வரிக்கும் ! எனஒவ்வொரு குறியீடுக்கும் ஒவ்வொரு வாசகனும் ஒவ்வொரு அர்த்தத்தை காணலாம். ஏனெனில் ஆலம் விதையில் புதைந்திருக்கும் ஆல விருட்சம் போல ஆயிரம் ஆயிரம் கருத்துக்கள் கவிஞரால் ஒவ்வொரு வரியிலும் புதைக்கப்பட்டிருக்கிறது.
சூரிய குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினராக விளங்கும் கிரகங்களைப் பற்றி அறிவியல் பேராசானாய் பாடம் நடத்துகிறார் வைரமுத்து! அதையும் தாண்டி பால்வீதி, நெபுலா, விரிந்து கொண்டே இருக்கும் பிரபஞ்சம் ,கருந்துளை, பெருவெடிப்பு ,விண்கற்கள், எரி கற்கள் என்று ஏராளமாய் அறிவியல் செய்திகளை மிக எளிமையாய் பதிய வைக்கிறார். அதே போல நம் பூமியை காக்கும் ஓசோன், வாயுக்கள், கடல், கண்டம், பூமி சந்தித்த பேரழிவுகள், பூமியில் உயிர்கள் தோன்றியதன் பரிணாம வளர்ச்சி என பல்வேறு அறிவியல் கருத்துக்களை தெளிவாக விளக்குகிறார் மகாகவிஞர். இவ்வளவு கடினமான இயற்பியல் கருத்துக்கள் போகிற போக்கில் கவி நடையில் மிக எளிதாக நம் மனதில் பதிய வைக்கப்படுகிறது.
உண்மையில் விலை மதிப்பில்லா புத்தகம், விலை மதிப்பீடு செய்ய இயலாத புத்தகம் என்றால் அது மகா கவிதை என்ற இந்த கருத்துக்கள் அடர்த்தியாக அதே நேரத்தில் லேசாக உள்ள நூல் எனலாம்.
பல புதுப் புது வார்த்தைகள் நூல் முழுவதும் கிடைக்கின்றது. இந்த நூலை வாசிக்க ஆரம்பிக்கும் முன் இருந்த நம் மூளையின் நிறையை விட, வாசித்து முடித்த பின் இருக்கும் நிறையை ஒப்பிட்டால் தலை கனமாக இருப்பதைஉணரலாம்! ஆம்!…அது”மகாகவிதை”யை வாசித்த வாசகன் நான் என்ற பெருமிதமாகக்கூட இருக்கலாம்!
நான் பெற்ற மகிழ்ச்சியை …வாசிப்பு அனுபவத்தை… ஒவ்வொரு வாசகனும் பெற வேண்டும்.. இந்த மகா கவிதை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இடம்பெற வேண்டும்… ஏன்.. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் வாசிக்க தகுந்த முறையில் அவனுக்கான மொழியில் இந்த நூல் உருப்பெற வேண்டும்! நன்றி!
நூலின் தகவல்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Beautifully commented. I have already read this book. However after going through the comments I feel like reading it one more time. Every one should own this book and raed it. Congratulations Mr Yesudoss for the beautiful comments.
வாசித்தவன் பேசுகிறேன்…
கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்களின்
மகா கவிதை நூல் பஞ்ச பூதங்களை சரமாய் கோர்த்து வாசிக்க வாய்ப்பு தந்துள்ளார். சாமானியனும் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு அறிவியலை ஆராய்ச்சி செய்து தேடி தேடி தகவல் திரட்டி தமிழர் மட்டும் அல்ல தரணியில் வாழும் மக்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய நூல். திருக்குறளுக்கு அடுத்த பொதுவான நூலாகும். இதுவும் உலக பொதுமறை நூலாகும் என்பது அடியேன் .கருத்தாகும்.நன்றி.நன்றி