மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Mahatma Gandhi) எழுதிய இந்திய சுயராஜ்யம் (Indiya Suyarajiyam) - நூல் அறிமுகம் | தமிழில் வெ.ஜீவனாந்தம் - https://bookday.in/

இந்திய சுயராஜ்யம் (Indiya Suyarajiyam) – நூல் அறிமுகம்

1909 இல் லண்டன் இந்திய ஹவுஸிலிருந்து, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் சிலர் திட்டமிட்டு கொண்டிருந்த நீண்ட விவாதத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்கா திரும்பிய காந்தி தனது தாய் மொழியில் எழுதிய கொள்கை சாசனம் தான் இந்த நூல்.

முதல் வாசிப்பில் நாம் ஏற்றுக் கொள்ள முடியாத பிற்போக்குத்தனமானதாக இந்நூலின் கருத்துக்கள் தோன்றக்கூடும். சுயநலம் விட்டு, அனுபவப் பின்னணியில் தனித்தனியாக சிந்திக்கும் போது சரியே என்று ஏற்கத் தூண்டும். என்று இந்நூலிலேயே குறிப்பிட்டுள்ளனர். ஆம்! முதல் வாசிப்பில் நமக்கு என்ன எண்ணம் தோன்றும் என்பது அவர்களுக்கே தெரிந்துள்ளது. அப்படி தான் தோன்றுகிறது.

ஒரு விடயம் தவறு என்றால் தவறு! சரி என்றால் சரி! என வலியுறுத்த வேண்டும். இதில் ஒரே விடயத்தை சரி என்றும், தவறு என்றும் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை. வேண்டுமானால் எல்லாவற்றிலும் நன்மை, தீமை இரண்டுமே உள்ளது என பொருள் கொள்ளலாம்.

இந்த நூலில் உள்ள அனைத்து கருத்துகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் சிலவற்றை ஏற்றுக் கொள்வது அவசியம்! அவற்றில் சில:

மாறுபட்ட கருத்துள்ளவர்களை தேச விரோதிகள் என்பது தவறு. அதே போல் ஆங்கிலேயர் அனைவரும் கெட்டவர்கள் என்பதை ஏற்க முடியாது. இந்தியாவுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று விரும்பும் பல ஆங்கிலேயரும் உண்டு என்ற கருத்து ஆங்கிலேயரால் சில நன்மைகளும் கிடைத்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

பார்லிமென்ட் ஒரு மலடி போன்றது. அது தானாக எந்த நல்ல காரியத்தையும் செய்ததில்லை. நாம் சிறந்தவர்களை தேர்ந்தெடுக்கிறோம் என நினைக்கிறோம். அவர்கள் மக்களுக்காக சேவை செய்பவர்கள் என நம்புகிறோம். ஆனால் அவர்கள் சுயநலக்காரர்கள். முதல் நாள் பேசியதை மறுநாள் மறுப்பார்கள். 700 ஆண்டுகள் ஆகியும் (1909 இல் சொல்லப்பட்டது) வளராத “சவலை குழந்தை” நாடாளுமன்றம். பார்லிமென்ட்க்கு உண்மையான எஜமான் இல்லை. பிரதமருக்கோ தன் பதவியை காப்பதில் தான் கவனம்.

மதப் புரட்டர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். மதங்களின் பெயரால் மிகப்பெரிய மோதல்கள், கொலைகள் நடப்பதை விட “மோசமான நாகரிகம்” எதுவும் இல்லை. எல்லா மதங்களிலும் ஏமாற்றுக்காரர்கள் உண்டு. மத மூடநம்பிக்கையை முழுமூச்சுடன் போராடி ஒழிக்க வேண்டும்.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பவர்கள் கனவில் வாழ்பவர்கள். இந்தியாவை தனது தாய் நாடாகக் கொண்ட அனைவரும் இந்தியர் தான்.

பணக்காரர்கள் செல்வத்தை மதிக்காமல், பயமின்றி உண்மை பேச வேண்டும்.

டாக்டர்கள் ஐரோப்பிய அறுவை சோதனை செய்யக்கூடாது. தேவையற்ற மருந்துகளைத் தராமல் நோயின் காரணமறிந்து அறிவுரை கூற வேண்டும்.

என்பவை எல்லாம் உண்மையாகவே இன்றைக்கும் ஏற்றுக் கொள்ள வேண்டியவை தான்.

இந்நூலில் ஏற்றுக்கொள்ள முடியாத சில, நீதிமன்றங்களிடமோ,வக்கீல்களிடமோ செல்லக்கூடாது. நீதிமன்றம் வந்தபின் மனிதாபிமானம் குறைந்துவிட்டது. நம் அறியாமையால் முன்பின் தெரியாத ஒருவர் நம் பணத்தை வாங்கிக்கொண்டு நமக்கு வழங்குவதை நீதி என்கிறோம் நீதிமன்றங்களாலும், வக்கீல்களாலும் தான் ஆங்கிலேயர்கள் நம்மை ஆள்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படி நீதிமன்றங்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் ஆங்கிலேயர் மட்டும்தான் இல்லாமல் போயிருப்பார்கள். துயரங்கள் அப்படியேதான் இருந்திருக்கும் அல்லவா?

அனைவருக்கும் “கட்டாய கல்வி” தருவதால் பயன் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார். அது உண்மை இல்லை என்றாலும், “நாம் பொய்யான படிப்பின் தீமையில் சிக்கியுள்ளோம்” என்பது மட்டும் உண்மை.

ரயில் வந்தவுடன் தான் புண்ணியத்தளங்கள் எல்லாம் புனிதம் இழந்துவிட்டன.

ராணுவம் தேவையற்றது.

இந்தியாவின் பொதுமொழி இந்தியாக இருக்க வேண்டும்.

போன்ற சிலவற்றை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே! ஏனெனில், இவை அன்றைய காலச் சூழலை பொறுத்து எழுதப்பட்டவை.

நூலின் தகவல்கள் : 

நூல் : இந்திய சுயராஜ்யம் (Indiya Suyarajiyam)
எழுதியவர் : மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Mahatma Gandhi)
தமிழ்சுருக்கம் :  வெ.ஜீவனாந்தம் (Dr. Ve. Jeevanantham)
வெளியீடு : இயல்பாகை
பக்கங்கள் : 28
விலை : ரூ.40

நூல் முகம் எழுதியவர் :

 

தீபா ராஜ்மோகன்

இந்திய சுயராஜ்யம் (Indiya Suyarajiyam) – நூல் அறிமுகம்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *