குடை விரித்தல்!
*********************
புன்னகைக்க வழியின்றிக்…
கடக்கும்…
மௌனப்பொழுதுகளில்…
இமைக்குடைகளை…
விரிக்கிறாய்!

மௌன மொழி…
தவழ்ந்து பரவுகிறது!
தூரிகைகளும்…
உளிகளும்…
வாய்பிளக்கின்றன!

சாகசம் நிறைக்கும்…..
நகரத்து
வாகன நெரிசலில்..
புழுதி கடந்த…
பூவாய்!

சொற்பமான…
சில..
வண்ணப் பறவைகள்…
வழியில்!

மழை சில…
பரிமாணங்களில்…
நெருங்குகிறது!

கடற்கரையின்…
ஒற்றை நிலவொளியை…
கனவுக்குள்….
நுழைக்கிறேன்!
சாத்தியக்கூறுகள்…
பல்வேறாய்த்…
திரிந்து….
மீண்டும்….
இமை…
மௌனக்குடைகளை…
விரித்தலில்…
அமிழ்கிறது!

கணங்களைச் சிதைத்தவன்!
*********************************
நம் அக்கணங்கள்
செதுக்கப்பட்ட போது
வினாடிகளில்
இனிப்பிருந்தது!

வளர்ந்த பயிரை
விபரீதப்பார்வைகள்
வழிநடத்தின!

தென்றலைக் களவாடவும்
தயங்காதவனின்
நிழலை
வனமிருகங்கள்
சேர்க்கவில்லை!

ஈரமான மௌனங்கள்
வெளியேறியபோது
இறந்தது
துளி!

சுவடுகளின்
பின்னணி முக்கோணம்
புதிராகிறது!

மலைமுகட்டுப் பறவைகள்
வழி தவறின!
நிகழ்வுகளின்குறிப்பேடுகளில்
மண்வாசனை!

கணங்களைச்சிதைத்தவன்
பொடிந்து போகலாம்!
அக்கணங்கள்
சிதைந்தும் சிதையாமலும்
இருவேறாய்
நினைவடுக்கில்!

– மகேஷ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *