மகளிர் தினம் கவிதை – கவிதா பிருத்வி

மகளிர் தினம் கவிதை – கவிதா பிருத்வி




மகளிர் தினம்
*****************
அன்றைய பழமொழி
திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றன..

இன்றைய உலகத்தில்
அனைத்திற்கும் அவசரம்..
வாட்ஸ்அப் உடனடி தகவல்கள்..

மாப்பிள்ளை பெண்ணின்
பழைய வேர்களைத் தேட..
குறைகள் பெரிதாகி
நிச்சயிக்கப்பட்ட திருமணம்
நின்று போகிறது..

பெண்ணை
போகப் பொருளாக்கும்
காதல் கிறுக்குகள்

பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டும்
காணொளிகளை வெளியிட்டு
இறுமாப்பு கொள்கிறது..

தைரியம் தன்னம்பிக்கை
உனது போர்வாளாகட்டும்
சிறு திரை உடைத்து வா
பெருஞ்சிறை பிளந்து வா

சலனம் தவிர்த்து
சாந்திகொள் சகோதரி…
வரவேற்று அரவணைக்க
வாசலில் உலகம்!

கவிதா பிருத்வி
தஞ்சை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. பெ. ஆராவமுதன்

    அன்பு அடக்கம் கற்பு… பெண்ணுக்கு திமிர்தரும்.. உலகில் இந்தத் திமிர் ஓங்க வேண்டும். ஆசுகவி ஆராவமுதன் கள்ளக் குறிச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *