ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்:  நூலறிமுகம் – மக்ஃபி (குறு நாவல்) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மக்ஃபி (குறு நாவல்) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

 

 

 

 

முகலாய மூத்த இளவரசி சைபுன்னிஷா வின் வடிவம் தான் மக்ஃபி.

சூஃபி கவிஞர்:

அவர்களின் கவிதைகளின் இழையோடும் சோக ஏக்க வடிவம் தான் மக்ஃபி. மக்ஃபியின் இரண்டு வடிங்கள் தான் இக் குறு நாவல்.

மக்ஃபி- 1
ஹே… ஒன்றுமறியாத குயிலே
உன் தொண்டையில் மூச்சை
இழுத்துப் பிடித்துக் கொள்…..

என அழகிய தொடக்கத்தோடு எட்டிப் பார்த்த கவிதைகள் மனதை வருடி சொல்கின்றன. சைபுன்னிஷா என்கிற மூத்த இளவரசிக்கும் ஆலம்கீர் என்கிற ஓளரங்கசீப்பிற்கும் இடையே இழையோடிய உள்ளன்பை, மறக்கமுடியா அன்பை…..
அழகிய வரிகளில் கோர்த்து, விளம்பியுள்ளார்.

மக்ஃபி – 2
இரண்டாவது இளவரசி ஜீனத் , தன் சகோதரியை எப்படியாவது அழைத்து வர வேண்டும் என்ற நோக்கில் புறப்படுகிறார்.

ஆலம்கீருக்கும் மக்ஃபிக்குள்ள இறுமாப்பு
தன்னையே சிறை வைத்துக் கொண்ட
சைபுன்னிஷா…..

அங்குள்ள சூழல்…..

காய்ந்த புல்வெளிகள்
அணைந்த அடுப்பு
மங்கிய வெளிச்சம்
பூரணமற்ற புகை ஓவியம்
உச்ச வெறுப்பு…..
எனப் பல விதங்களில் இயலாமையை ஏற்றியுள்ளார்.

மக்ஃ பி – 3
‘பரவசத்தில் குயிலின் பாடல்
ரோஜாவை வசீகரிக்கிறது’

என தொடங்கும் கவிதையோடு,

ஜீனத்துக்கும் மக்ஃபிக்கும் உரையாடல்,
ஆலம்கீரின் உடன் கட்டை ஏறுதலைத் தடுத்தல்.

ஆலம்கீர் அவரங்கசீப் காலம் வரலாற்றின் பொற்காலம் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். ஆனால் ஆடம்பரத்திற்கு செலவு செய்தவரல்ல, நம் பாவா, நீ அக்பரோடு அவரை ஒப்பிடுகிறாய். தன் எடைக்கு எடை பொன் வைர ஆபரணங்களை தானமாக கொடுப்பதில்லை, அரசு பணத்தை கேளிக்கைக் கொண்டாட்டங்களுக்காக விரயும் செய்யும் போது அறம் பேசாத உங்கள் கவிதைகளுக்குப் பாவா குற்றவாளியாகத் தெரிகிறார். என்கிற வரிகள் ஒளரங்க சீப்பின் இன்னொரு பரிமாணத்தைத் தருகிறது.

மக்ஃபி – 4
ஹே சஹியே
அதிர்ஷ்டமற்ற என் இதயத்தைப் பார்…..

எனத் தொடங்கி

அது எரிந்து சாம்பலாகும் வரை.

என முடியும் கவிதை…

அந்த மலை எலிக்கும் (சிவாஜிக்கும்)
இந்த மக்ஃபிக்கும் (மறை பொருளுக்கும்)
இடையே ததும்பிய காதலை வெளிப்படுத்துகின்றது.

தன் படைத்தளபதி ஷெயிஷ்ட கான் , பார்வையில் ….

மாயாவி எப்படி இருப்பான்?
மாயப் போர்வையில் பறந்து வருவானா

என மனதுள் நுழைந்த வரிகளோடு
ஒரு நிகழ்வு.

ஆலம்கீரின் ஐம்பதாவது பிறந்தநாள்.

பல ராஜ புத்திர அரசர்கள்
வருகையின் கொண்டாட்டம்.

தன் மகன் சாம்பாஜியுடனும், 10 படைவீரர்களின் புடைசூழ சிவாஜியின் வருகை,
சூட்சுமமாய்ச் சிறைப்பிடித்தல், தப்பிச் செல்லல். எல்லாமே நான் படித்த வரலாற்றின் இன்னொரு கூறாய் தெரிகிறது.

மக்ஃபி – 5
‘ஞான தேசம் என்னுடையது
அதில் களைத்துப் போய்விட்டேன்…..’

என்கிற வரிகளிலும் காதல் உணர்வுகள்

ஆக்ராவிலிருந்து மதுரா நோக்கிப் பயணித்த அந்த ஓரிரவில் அவன் நெருக்கம், அவன் மூச்சுக்காற்று, என் உடல் மொழி எழுதிய கவிதைகளை அவன் மவுனத்தில் வாசித்த இரவாய் முடிந்து போனது.

என காதல் உணர்வினை மிகையூட்டி….

தக்காணம் தீண்டாத ரோஜாவாய் உன்னை இந்த நதிக்கரையில் விட்டுச் செல்கிறேன்.
என்கிற வரிகளும் அவர்களின் அழகிய காதலை வெளிப்படுத்துகின்றன.

மக்ஃபி – 6
மரணத்தின் ஆழம் வரை சென்று விட்டேன்
சொர்க்கங்கள் என் மீது கொடூரத்தை வீசுகின்றன….

என்ற வரிகளும்

அவளின் இயலாமையை வெளிப்படுத்துகின்றன.

மேலும்,
அவன் தப்பித்த விதம்,
ஆலம்கீரின் கவனக்குறைவு.

எனப் பல ஓட்டங்கள்.

மக்ஃபி – 7
‘நீண்ட காலமாகவே எனக்குத் தெரியும்
சத்தியங்களில் அர்த்தமில்லையென ‘

என்கிற மறைபொருள் வரிகள் மேலும்
நம்மைச் சிறையிடுகின்றன.

ஆலம்கீரின் சிவாஜியை வெல்ல முடியாத வெறியையும், சம்பாஜியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி நதியில் வீசித் தன் வெறி தீர்க்க முடியாமல் ஆட்டம் போட்டது, மரணப் படுக்கையில் ஆலம்கீரைத் தின்று துப்பியது….

என்கிற வரிகளும்

தொழுகைக்குத் தன் கையால் குல்லா தைத்து விற்றதை எண்ணிப்பார்த்தார். இவ்வளவு போதும் ஒரு மனிதனின் இறுதிச் சடங்கு செய்ய இவ்வளவு போதும்….

என்கிற ஒளரங்க சீப்பின் கடைசி கால மனதை அழகாய் சித்த மனத்தோடு படம்பிடித்துள்ளார்

மக்ஃபி – 8

‘நீண்ட காலமாகவே
என் கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன

என்கிற கவியோடு,
மாயாவியின் (சிவாஜியின்) மரணத்தின் இரகசியத்தை அறிந்த சிதறல்களால் மக்ஃபியின் கவிதைகள் சொல்லிச் செல்கின்றன.

மக்.பி.9

கடைசியாய்….

மக்ஃபி

அவள் அரசனின் புதல்வி
அலங்காரம் அதிகாரம் துறப்பு
தரையில் விழுந்த மீன்.
அவள் பெயர் சைய்பு நிஷா
பெண் இனத்தின் ஆபரணம்
உங்கள் காதலியும் அவள்..

என

கவிதையோடு முடித்திருக்கிறார்கள்….

மக்ஃபியின் முதல் பாகம்,
அழகிய காதல் உணர்வையும்
ஒரு நீண்ட சக்கரவர்த்தியின்
கடைசி காலமும்,

மலை எலியின்
மாயாவித் தனமும்
தந்திர தப்பிப்பும்

ஆலம்கீரின்
இன்னொரு பக்கமும்….

அக்கா ,
புதிய மாதவியின் வரிகளில் துயில்கின்றன.

மக்ஃ பி …..

பாகம் இரண்டு.

‘சரித்திரங்கள் கல் வெட்டுகளாய் மட்டுமே இருப்பதில்லை.
சம கால அரசியலாய்த் தொடர்கின்றன …..

எனத் தொடங்கி

பேரா கவிதா போஸ்லே சுட்டுக் கொன்ற செய்தியையும்,
அவர் கணவரின் ஆணாதிக்க அரசியலையும்

புதிய மாதவி அவர்களின்
அழகிய

‘ஹே…. ராம்’

கவிதை வரிகளும்,

மக்ஃபி கவிதைகளை இந்தியிலும் மராத்தியிலும் கவிதா போஸ்லே அவர்கள் மொழியாக்கம் செய்த விதத்தையும்.

அதன் படி எழுந்த பூசலையும்.

கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட சிராய்ப்பும்…..

கடைசியில் ஓரிழப்பாய் ….

சாவு நிகழ்வு.

இதன் தொடர்பாய் ….

கவிதா போஸ்லேக்கும்
புதிய மாதவிக்கும் உள்ள அன்பு.

பின் ….

அபியின் அதிர்ஷ்டம்….

கடைசியாய்,

கவிதா போஸ்லோ வின் மறைவு.

தொடர்ந்து….

அபிபோஸ்லே வின் கையினால் மக்ஃபி
வெளியிடப்பட்டதை இரண்டாம். பகிர்வாய்த் தந்துள்ளார்….

வந்த நாளில் இருந்து , விடாமல் புரட்டிப் புரட்டிப் படித்தேன், ஆலம்கீரின் கடைசி காலமும், சைய்புநிஷாவின் தீரா எழுத்தையும், மலைஎலியின் அழகும், ஜீனத்தின் இயைபையும் என்னால் கீழே வைக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்தாற் போல், கவிதா போஸ்லேயின் போர்க்குணம் அதற்கான இழப்பு, ஆணாதிக்க அரசியல் தனம்எல்லா வற்றையும் அழகிய எழுத்துக்களுடன் உள்வாங்கினேன்.

இயல்புடன்….

இராஜேஷ் சங்கரப்பிள்ளை
இராசாக்க மங்கலம்

 

நூலின் பெயர் :மக்ஃபி (குறு நாவல்)
ஆசிரியர் : ‘புதிய மாதவி சிவ சங்கரன்’
வெளியீடு: இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்)
41, கல்யாண சுந்தரம் தெரு,
பெரம்பூர்,
சென்னை – 11,
பேசி- 9444640986
விலை : 100

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *