மனமே
மனமே
மனித மனமே!
கரைந்து போகும்
பனிக்கட்டியாய்
கரையட்டும்
உன்
அகந்தை
ஆணவம்
கோபம்
பொறாமை
தூர் பார்வை
தீய எண்ணம்
புறம் பேசுதல்!
உருகித் தான்
பாரேன்
நீராக!
உடைந்து தான்
பாரேன்
பாறையின்
சிற்பமாக !
கரைந்து பார்!
உடைந்து பார்!
உருகிப் பார்!
உன்னையே
நீ நேசிப்பாய்!
சக மனிதர்களால்
நேசிக்கப்படுவாய்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நம்மை நாம் நேசிக்க மனதிற்கு பாடம் கற்றுக் கொடுக்கிறது இவ்வரிகள் சிறப்பு.
மனம் தெளிந்த நீரோடை போல
மனதை நனைக்கிறது
தங்கள் வரிகள்
மனம் மகிழ!!
சிறப்பு.. வாழ்த்துகள் தோழர் 💐
மனம் மாற்றம் கொள்ள வேண்டிய சிலவற்றை பற்றி அழகான பதிவு💐👌..வாழ்த்துகள் தோழர்💐
மனம் இது நேர்மையான ஒன்று நேர்மறை எண்ணங்களின் எதிரொலி. அருமை. மென்மேலும் எழுத்துலகில் வளர்க.