32 பக்கங்கள் கொண்ட கையளவு புத்தகம் “மன மகிழ்ச்சிக்கு” கடலளவு காரணிகளை அலை அலையாக தந்து நம்மை வருடி செல்கிறது .
முதல் பரிசு
முதல் பேணா
முதல் காதல்
முதல் முத்தம்
இவை எல்லாம் யாரால் மறக்க முடியும். மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த நொடிகள். மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்த நொடிகள்.
Live this moment என்பார்கள். அதற்கான சரியான எடுத்துக் காட்டுகள் தான் இவை. அந்த நொடி மகிழ்ச்சியை நாம் திரும்ப திரும்ப நினைத்து மகிழ்ந்தாலும் அந்த நொடி கடந்த நொடிகள் தான்.
“மனம்” அது மகிழ்ந்தால் வாழ்க்கையில் வளம் பின் தொடரும். ஆகவே நம் மனமே மாமருந்து. நம் மனமே நமது பொக்கிஷம். அதை மகிழ்வோடு வைத்து கொள்வதின் வழியே நாமும் மகிழ்ச்சியாக வாழலாம்.
மகிழ்ச்சியை நுகரப் புலன்கள் கண், காது மூக்கு பூட்டாக இருக்க மனம் சாவியாக இருக்கிறது என்று ஆசிரியரின் பார்வை நம்முள் ஊடுருவ தவறவில்லை. ஆம் மனம் என்னும் சாவி கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும்.
மனமே மகிழ்ச்சியின் அளவுகோலை நிர்ணயிக்கிறது. அதனால் தான் சில புலன்கள் இல்லாதவர்கள் பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வருகிறது. மனமே முக்கிய பங்கு வகிக்கிறது.
மனிதன் உடல் ரீதியான, தேவைகளைப் பூர்த்தி செய்த பின் அதை தாண்டிய மகிழ்ச்சி இருப்பதாக உணர்வான். மரியாதை, கௌரவம், புகழ் etc., சிலருக்கு சேவை. மகிழ்ச்சிக்கான காரணிகள் மாறுபடும்.
சில நேரங்களில் சிலமனிதர்களோடு அமரும் போது நமக்கு மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். புகார் புத்தகம் எதுவும் அவர்களிடம் இருப்பதில்லை.
பிடித்த வரிகள்:
மகிழ்ச்சி மண்டபத்திற்குக் கதவுகள் இல்லை. பல வழிகளில் உள்ளே நுழைய முடியும்.
கொள்கைகளில் உறுதியும், கொள்பவைகளில் தளர்வும் சேர்ந்து இருப்பதே முதிர்ச்சிக்கான முத்திரை.
நாம் பலருக்கு இளைப்பாறும் இடமாகவும், சாயும் தோளாகவும் படுக்கும் மடியாகவும் மாற முடியும்.
மனிதனின் சராசரி ஆயுள் அதிகரிக்க மருத்துவம் காரணம் என்பது மட்டும் சற்று முரணாக தோன்றுகிறது. நம் தாத்தா பாட்டியின் ஆயுட்காலம் 100 வயதிற்கு மேல். எந்த ஒரு மருத்துவமும் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை தள்ளி போட முடியாது என்பது என்னுடைய புரிதல்.
ஒரே நாளில் உதிர்ந்து விடும் மலர் மகிழ்ச்சியாக இருப்பது போல நாமும் மகிழ்ச்சியாக வாழ பழகி கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இலக்காகக் கொண்டு நாம் மகிழ்ந்து வாழ வேண்டும்.
இப்புத்தக வாசிப்பு கற்றுக் கொடுத்தது ” மகிழ்ச்சியாக இருக்கக் காரணங்கள் தேவையில்லை; மகிழ்ச்சியே மகிழ்ச்சிக்குக் காரணமாகட்டும்.”
ஆசிரியர் வெ.இறையன்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி
திருமதி சாந்தி சரவணன்
சென்னை 40
புத்தகத்தின் பெயர்: மனமெல்லாம். மகிழ்ச்சி
ஆசிரியர்: வெ. இறையன்பு
வெளியீடு : கற்பகம் புத்தகாலயம்
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2019
பக்கங்கள் : 32
விலை: ரூ 25/
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.