மாணவன் ஒரு பாறை
**************************
குடம் செய்ய ஒரு குயவன் போதும்!
சித்திரம் தீட்ட ஒரு ஓவியன் போதும்!
வீணை மீட்ட ஒரு கலைஞன் போதும்!
சிலை வடிக்க ஒரு சிற்பி போதும்!
ஆனால்…
மாணவன்
வடிவமைக்க…
பற்பல சிற்பிகள் தேவை!
அன்று மாதா, பிதா, குரு, தெய்வம்,
நான்கு சிற்பிகள் வடிவமைத்த
நவீன சிலைதான் மாணவன்!
இன்றோ…
இவர்களுடன திரைப்படம்,
ஊடகம், யுவ் டியூப்,
ஃபேஸ் புக், டிவிட்டர்
என
பலவந்தமாய் நுழைந்த
பற்பல சிற்பிகள்!
சில நேரங்களில்
“கைபேசி”எனும்
காமாந்திரக் கருவி
கள்ளமில்லா
கிள்ளைகளின்
கைதவழ்ந்து
விரல்தழுவி
விசம் பரப்பி
திசைமாற்றி
திறனழித்து
மனம் சிதைத்து
சிற்பத்தைச்
சிதைக்கின்றனர் !
எய்தவன் இருக்க..
அம்பை குறைகூறுவது
எப்படி நியாயமாகும்??
சின்னபுத்தி
சிற்பிகளை..
சீர்திருத்தி…
வருங்கால மன்னர்களை !
வழிநடத்த வழிசமைப்பீர்?
– மரு உடலியங்கியல் பாலா
Dr.K.Balasubramanian.MD
VALASARAVAKKAM
CHENNAI..600087.
MOBILE: 9382876968.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

