மாணவர் மனசு | Manavar Manasu

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” – நூலறிமுகம்

கோடை விடுமுறை.. குழந்தைகள் போல் ஏனோ எனக்கும் இந்த விடுமுறை தேவை பட்டது.. ஊரெல்லாம் சுற்றி வீடு வந்து சேர்ந்தாச்சு… இன்று எனது வாசிப்பில் தேனி சுந்தர் அவர்களின் மாணவர் மனசு புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவம்

இந்த நூல் 16 கட்டுரைகளை கொண்டுள்ளது. பாரதிபுத்தகாலயம் வெளியீடு நூல் விலை : 70 ரூபாய்..

நான் புத்தகம் படித்து முடித்தவுடன் தோன்றியது என் மனதில் புத்தகத்தின் விலை குறைவு இப்புத்தகத்திற்கு இன்னும் எவ்வளவும் கொடுக்கலாம்.

சிரிப்பு போலீசு….. பெரும்பான்மை கிராமபுற பள்ளிகளில் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு நுளையும் போதே இன்று பள்ளியின் நிலை எப்படி இருக்குமோ? என்று மனதில்ஓடும். … இதில் குற்றவாளிகளை கண்டறிந்து…. சிரிப்பு போலீசாக படிக்கும் போதே நாங்களும் ஆகிட்டோம்.

சாரு பயந்துட்டாரு….. இதில் சீக்கிரம் வாங்க சார்…பயமுறுத்திட்டுப் போயி உக்காரணும் கால் வலிக்குது….இப்படி சொல்லும் ஆசிரியர் குழந்தைகளின் உறவை விட வேறு என்ன வேண்டும்?

டும் டும் டும்……..வாசிக்கும் போதே குழந்தை போல் மகிழ்ந்தேன்.

மாணவர் மனசு வாசிக்கும் போதே எனக்கும் ஒரு போன் வேண்டும் என்று எழுதிப் போட தோன்றியது .எனது வகுப்பறையிலும் மாணவா மனசு பெட்டி வைத்து ஒரு நாள் அவர்களை எழுதிப் போடச் சொல்ல வேண்டும். அவர்கள் எழுதியதை ரசிக்க வேண்டும் என்று தோன்றியது..

ஊருக்கு போகும் போது ஏன் சொல்லிட்டுப் போகலை என்று கேட்டதுக்கு எதுக்கு சார்? சொன்னா… நீங்களும் என் கூட ஊருக்கு வருவீங்களா? என்று கேட்ட ஹாசினி…அவள்போல் தான் முதல் வகுப்புகுழந்தைகள்… சார்.. கொஞ்ச நேரம் படிச்சுட்டு .கொஞ்ச நேரம் எடுத்திட்டு சினாக்ஸ் சாப்பிட்டு…சோறு சாப்பிட்டு….கொஞ்ச நேரம் தூங்கிட்டு ..கொஞ்ச நேரம் விளையாடிட்டு… அப்படியே வீட்டுக்குப் போயிரலாம். இப்படியே ரிப்பிட்டு…..

பால்வாடி அம்மு பாப்பா சொன்னது… எங்க வீட்டுக்கு வந்து காமராசர் தாத்தாபொங்கல் சாப்பிடார்… பாயசம் குடிச்சார்…. என்று சொல்வதும்… அவர் செத்து போய்ட்டார் என்று கூறியதற்கு அது கெத்து விடாமல் அவரு சாகுறதுக்கு முன்னாடி வந்தாருல சார் என்று கூறுவது படிக்கும் போதே ரசனை…. பூனைக்குட்டி சளி பிடிச்சு, காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரிக்கு போயி , ஊசி போட்டு அஞ்சு நாள் பள்ளி கூடம் வரலை. சொன்ன அம்முவை ரசித்துக் கொண்டே கடந்து வந்தேன்.

கடந்த வேகத்தில் அடுத்து கண்ணீர் வந்தது…தான் பார்க்கும் தொழிலை பற்றி கூறியதந்தை ….பாக்குறது பூராம் வெறும் நரகலா தான் தெரியுது என்று தான் குடிப்பதற்கு காரணம் சொல்லும் போது ஏனோ மனம் கனமானது….

பெரிய ஆபீசர் ..வந்ததையும் … மாணவர்கள் சார் காலைல வந்தார்ல அவர் லாம் நம்ம ஸ்கூலுக்கு HM. வர்றதா இருந்தா முன்னாடியே சொல்லிருங்க சார்.. நாங்கல்லாம் வேற ஸ்கூலுக்குப் போய்க்கிர்றோம்….நமக்கு ஒத்துவராது சார்… என்ற கோவக்காரமாணவர்களை ரசிப்பதா? இல்லை அதிகாரிகளை நினைப்பதா?…..

சார் அழுதுடுவேன் என்று சொல்லவும்… எங்க சார் அழுங்க பார்ப்போம் என்று….பிளீஸ் சார் ஒரே ஒரு தாட்டி அழுங்க சார் எப்படி இருக்கீங்கனு பார்ப்போம்….மகிழ்ந்துவிட்டேன்…

எத்தனை குழந்தை தனத்தை சொல்வது எதனை விடுவது நீங்களும் ரசித்து படியுங்கள்… குழந்தைகளுடன் எவ்வளவு இனக்கமாக இருந்தால் இத்தகைய உரையாடல்கள்… நிகழ்ந்து இருக்கும் …. குழந்தை நேய ஆசிரியர் சுந்தர் அவர்களின் மாணவர் மனசு அனைவரும் வாங்கி படியுங்கள்…. உங்கள் அனுபவங்களும் கட்டுரைக்குள் இருக்கும்.

நூலின் தகவல்கள் 

நூல் : மாணவர் மனசு

ஆசிரியர் : தேனி சுந்தர்

பதிப்பகம் :  புக்ஸ் ஃபார் சில்ரன்

விலைரூ. 70

 

நூலறிமுகம் எழுதியவர் 

சரவண ஶ்ரீ
ஆசிரியை




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *