ஆளுக்கொரு சிமிழ் வைத்திருப்பார்கள். தனக்கு புரியாத உலகின் பிரம்மாண்டத்தை அவற்றின் பெயர்களின் மூலம் குழந்தைகள் சகஜமாவதைப் போல அந்த சிமிழில் தாங்கள் விரும்புகிற கலைஞர்களை இறக்கி விட்டு, அதில் இருந்த அற்பதங்களை காற்று பிடுங்கிய பின்னர் நானும் அவரும் ஒன்றே என்று சொல்லத் தலைப்பட்டு விடுவார்கள்.  இந்தக் கட்டுரை எழுதப் போவதாக சொன்னதும் எனக்கு பல டைட்டில்கள் அனுப்பப்பட்டன. நான் அவர்களின் டைட்டிலுக்கு விளக்கவுரை எழுத வேண்டுமாம். கலைஞர்களை அறிவது அப்படியல்ல. அறிவில் விரிவடையாத குறுகிய சிமிழ்களுக்குள் நாம் ஏறி உட்கார்ந்து கொள்ளுவது நம்முடைய வசதி என்பதால் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். பத்மராஜன் போன்ற ஆளுமைகளின் முதல் க்வாலிட்டியே நீ நினைக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்பதுதான். சொல்லபோனால் இன்று மலினமாக புழுங்குகிற நூறு கோட்பாடுகளால் அவரைக் கட்டுடைத்து அவரது படங்களை சில்லு நூறாக்க ஒரு முட்டாளால் முடியும். கலையை எதிர்பார்ப்பவர்களால் முடியாது, ஏன்?

அவர் ஒரு அசலான ஆளாக இருந்ததால் தான்.

பத்மராஜன் மற்றவர்களுக்கு எழுதுவதைத் தாண்டி, தனது எழுத்தை இயக்கிய முதல் படமே அசலாக இருந்தது.

பெருவழியம்பலம் – அந்தக் கதையின் நாயகன் ராமன் தனக்கும் நமக்குமாக திறந்து விட்ட ஞானக் கதவு.

சின்னதாக கதையை சொல்லிப் பார்க்கிறேன்.

വിടന്റെ ചിരിയും 18 കത്തിക്കുത്തും ...

தந்தையை சமீபத்தில் பறிகொடுத்த குடும்பம்.  இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளையான ராமன், வெறும் ஒரு சிறுவனாக இருந்த போதிலும் தமது குடும்ப கௌரவத்தை முன்னிட்டு அவர்களைப் பொத்தி வைத்து கெட்டபெயர் ஏற்பட்டு விடாமல் பரிபாலனம் பண்ணிக் கொண்டிருக்கிறான். ஜெயிலில் இருந்து வருகிற போக்கிரியான பிரபாகரன் பிள்ளையின் சபல நடவடிக்கைகளால் சீறுகிற ராமனிடம் அவன் முறைப்பு கொள்கிறான். கொலை மிரட்டல் விடுக்கிறான். ஊர் திருவிழாவில் விரட்டவும் செய்கிறான். கைகொண்ட பொறுமை முடிந்து பயம் உந்தியத்தில் ராமன் பிரபாகரன் பிள்ளையை கத்தியால் குத்திப் போடுகிறான். ராமனை ஒரு குடும்பம் ஒளித்து வைத்துக் காப்பாற்றுகிறது. அந்த ஊரில் இருந்து கடந்து வேறு ஒரு ஊரில் ஒரு விபச்சாரியின் அடைக்கலத்தில் கொஞ்ச நாள் இருந்து இறுதியாக சொந்த ஊருக்குத் திரும்புகிறான். அங்கே அவனுக்கு என்ன நடந்தது?

எளிமையான கதை.

அவ்வளவு எளிமையாக பார்த்து விட முடியாது என்பது அதன் உள்ளுரக் கொதிக்கிற கதை.

ஒரு விதமாக சொன்னால் ஒரு கொலைகாரனாகி ஓடி ஒளிந்து கொண்டிருக்கும்போது தான் ராமன் வெளியுலகைப் பார்க்கிறான். வேறு விதமான மனிதர்களைப் பார்க்கிறான். அவன் தன்னிடத்திலும், தனது சகோதரிகளிடமும் பேணிய ஒழுங்கில் ஒழுகுமா உலகு?  வெறும் வயிற்ருப் பிழைப்பு தான் என்றாலும் மனிதர்களை ஒரே வரிசையில் ஒரே நோக்கில் ஒரே புன்முறுவலில் நிற்க வைத்திருக்குமா வாழ்க்கை? குற்றங்கள் எல்லாம் மனித வாழ்வின் ஒரு அங்கம் என்பதை உணர எவ்வளவோ தருணங்கள் அவனுக்கு கிடைத்தவாறு இருக்கின்றன. திருடிக் கொண்டு வந்த மாங்காய் சுவையாக இருப்பதில் குறைந்து விடுகிறதா, பசி தீர்க்காமல் இருந்து விடுகிறதா? ராமனுக்கு மாங்காய் கொடுக்கிற கிழவி சில மணி நேரத்தில் அவனை அன்பால் உச்சி முகர்ந்து விடுகிறாள். மறுநாள் அவள் கிளம்பும்போது இன்று உனக்கு சாப்பிடுவதற்கு என்ன வேண்டும் என்பதையே கேட்டுவிட்டு தான் போகிறாள். அவன் சொன்னதை அவளால் திருடிக் கொண்டு வரமுடியும். ராமன் அந்தக் கிழவியை திருட்டு பற்றி அல்லாமல் அவளது அன்பால் தான் நினைவில் கொண்டிருப்பான் என்பது சந்தேகமில்லை.

The one who came before Kireedam: Peruvazhiyambalam

இது சிறிய உதாரணம் என்று சொன்னேன்.

குன்னத்தே தேவயானி என்று ஒரு கதாபாத்திரம். முன்னர் தொழில் செய்திருந்தாள், இப்போது இரண்டு ஆட்கள் அவளை பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். வியப்பு என்னவென்றால் எதோ ஒரு பெண்ணின் வயிற்றில் கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டான் என்று அறிமுகப்படுத்தப்படுகிற பையனை கூட அவளால் வாஞ்சை கொள்ள முடிகிறது. அதை வேறு ஒரு கோணத்தில் எடுத்துக் கொள்ள முடிகிறது. அவன் அவளது ஆத்மாவில் குத்துகிற கேள்விகளை கேட்டபோதும் சகித்துக் கொள்கிறாள். ஒளிந்து கொள்ள வந்தவனின் உண்மையான குற்றத்தைத் தெரிந்து கொண்ட போதிலும் அவளது வாஞ்சையில் ஒரு மாற்றமுமில்லை.  தனக்கு யாரும் இல்லை என்று அவள் சொல்லியிருந்தாள். ஒரு வேசியாக இருக்கக் கூடிய பெண்ணின் கதையை, பெண்களின் கதைகளை ராமனுக்கு தெரிந்திராதபோதிலும் நாமெல்லாம் அறிவோம் இல்லையா, அவள் தனக்கு இவன் இருப்பான் என்று கனிந்ததில் அவள் அவனது அம்மையாக நின்று கொள்கிறாள்.  அந்த மாதிரிக் கனவுகள் எல்லாம் நிலைக்கக் கூடியவை அல்ல.  ஆனால் அவளை கைவிட்டு செல்ல வேண்டியிருந்த ராமன், பெண் என்றால் என்ன மாதிரி ஜென்மம் என்கிற பாடத்தை எடுத்துக் கொண்டிராமல் சென்றிருக்க மாட்டான்.  கதையின் இறுதியில் சொல்லப்படாத ஒரு கிளைமாக்சிற்கும் இதற்கும் சம்மந்தமிருக்கிறது. எப்படி சொல்கிறேன் என்றால் சொல்ல வந்த கதையின் ஒரு சிறு துண்டைக் கூட பத்மராஜன் விரையம் செய்திருக்க மாட்டார்.

ராமன் நேர்மையாக இருக்க விரும்புகிறான். இந்த காலத்துப் பையன்களிடம் இருப்பதெல்லாம் திருட்டுத்தனம், முகத்தை நிமிர்ந்து பார்க்க மாட்டார்கள் என்று சொல்லும்போது அவளது கண்களுக்குள் பார்க்கிற தீரம் அவனுடையது. பொய்யில் தப்பிக்க உருண்டு கொண்டிராமல் உண்மையை சொல்லிவிட்டு என்ன நடக்கிறது என்று பார்க்கிறவன்.  அப்புறம் உலகம் வெகு சில நாட்களிலேயே கற்றுக் கொடுத்து விட்ட அறிவில் அவன் கொண்டிருந்த பல மாயைகளும் உதிர்ந்து போகின்றன. அதனால் இன்னமும் தனது பக்கத்தில் வலுவாகிக் கொண்டதால் தான் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறான்.

Five Actors Who Debuted Through Padmarajan Movies

சகோதரிகளைப் பார்க்கிறான்.

எல்லோரும் போலீஸ் வந்துவிடும், ஓடு என்றுதான் சொல்லுகிறார்கள்.

படம் முடியும் போது பிரபாகரன் பிள்ளை வீட்டு வாசலில் அவனது மனைவி வெளியே வந்து தூற்றிவிட்டு கதவை மூடிக் கொண்டு சென்றிருக்கும் நிலையில் சன்னலில் அவரது பிள்ளைகளின் முகங்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறான் ராமன்.

அவனது கண்களில் நீர் வழிகிறது.

திரும்பிப் பார்க்கிறான்.

மொத்த ஊரும் சூழ்ந்து கொண்டு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

பிரபாகரனை, அவன் என்ன செய்யப் போனாலும் இப்படிதான் பார்த்தார்கள். ஊர் எல்லையில் நுழையும்போது சிதறி ஓடினார்கள். டீ காப்பி ஓசியாக கொடுத்தார்கள். அவனது துணிச்சலை ஊதி வளர்த்தி அவனது பொறுக்கித்தனத்துக்கு ரசிகர்களாக இருந்தார்கள்.  அவர்களுடைய கோழைத்தனத்தில் நின்று கொண்டுதான் அவன் எந்தப் பெண்ணையும் கையைப் பிடித்து இழுத்தான். அவனுக்கு பயந்து பயந்து செத்தவாறு இருக்கும்போது ஒருநாள் யாரோ ஒரு ராமன் குத்திப் போடுவான். இதோ அவனுக்கு பயந்து, டீ கொடுத்து, தப்ப உதவுவதாக முன் வந்து, பிரபாகரன் வீட்டாரை என்ன செய்யப் போகிறான் என்று இப்போது வேடிக்கை பார்க்க வந்திருக்கிறார்கள்.

இப்போது ராமன் எந்த அராஜகத்தையும் நிகழ்த்திக் காட்டலாம்.

எந்த வீட்டுக்குள்ளும் நுழைந்து எந்தப் பெண்ணின் கையையும் பிடித்து இழுக்கலாம். .

என்ன செய்வான் அவன் என்பது முன்னமே சொன்னது போல இதுவரை வந்த படத்தில் சூசகமாக இருக்கிறது.  ஆனால் அது எதையும் சொல்லாமல் படம் முடிந்து விட்டது.

Peruvazhiyambalam - Wikipedia

இது ஒரு ராமனின், ஒரு பிரபாகரன் பிள்ளையின், ஒரு குட்டி கிராமத்தின் கதை மட்டும் தானா? பொழுது விடிந்து, பொழுது போவதற்குள் எத்தனை வில்லன்கள் என்ன, என்ன, என்ன என்று நம்மை இடித்து விட்டுப் போகிறார்கள்? நமது முகத்தின் மீது மூச்சு விட்டு, ஏறிட்டுப் பார்த்தால் மறுபடியும் என்ன என்கிறார்களா இல்லையா? நாம் என்ன சீற்றம் கொண்டு விடுகிறோமா? சிதறி ஓடலாம் ஒருவேளை. மற்றபடி யாராவது ஒரு ராமன் வருவானா என்றுதானே காத்திருக்கிறோம்? யோசித்துப் பார்த்தால், நாம் அறசீற்றம் கொள்ளுகிற எந்த அநீதியும் நம்மால் உருவாக்கப்பட்டவையே. அந்த கிராமத்து மக்களைப் போல அப்படி சும்மா பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பேட்டிபார்த்தேன்.  இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐ வி சசியை வைத்து படம் பண்ணுவதற்கு கதை கேட்கவே பத்மராஜனிடம் சென்றிருக்கிறார்.  இந்தக் கதையை தான் கேட்டிருக்கிறார். இந்தப்படத்தை தனது முதல் படமாக செய்வதற்கு வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் சொல்லவே நீங்களே படத்தை செய்யுங்கள் என்று ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. முதன் முதலில் பத்மராஜன் இயக்கிய படம்.  சுருக்கமான செலவில் சில போதாமைகள் தென்படுவது தவிர்த்து, ஒரு இயக்குனர் தனது கதைசொல்லலில் உறுதியைக் கொண்டிருக்கிற படம். இலக்கிய படிமங்களை படத்தில் வரிசையாக வாசித்துக் கொண்டிருக்க முடியும்.  நடிகர்கள் நடிகைகள் எல்லாம் வெகு எளிமையாக தனது பாத்திரத்தில் கைவீசி நடந்தார்கள்.  எல்லா பக்கங்களிலும் இயக்குனரின் ஆளுமை கூடி வந்திருந்தது.

இன்னும் சொல்லப் போனால் புழக்கத்தில் இருந்த பேரு கேட்ட பல இயக்குனர்களைக் காட்டிலும் அவர் இதில் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்கிறார். இதற்கு பிறகு அவர் எந்த மாதிரிப் படத்தையும் செய்துவிடுவார் என்கிற நம்பிக்கையையும் படம் அப்போது கொடுத்திருக்க வேண்டும்.

ராமனாக அசோகன் நடித்திருந்தார்.

AɴᴀɴᴛHᴀ KʀɪsHɴᴀɴ J 😷 on Twitter: "#Padmarajan… "

இப்படத்தைப் பற்றின அவரது பேட்டிகள் இணையத்தில் இருக்கின்றன.  எழுதப்படுகிற இந்தக் கட்டுரைகள் எவற்றிலும் தகவல்களால் நிரப்பக் கூடாது என்று நினைக்கிறேன். என்னதான் நியாயமான டிரெண்டாக உட்கார்ந்து விட்டாலும், இதில் காபி பேஸ்ட் மோசடிகள் வேண்டாமென்று எப்போதும் போல படுகிறது. ஒரு படம் பற்றி படிக்க முனைந்து அது விருப்பமாக வந்தால் அந்தப் படத்தைப் பார்த்து விடலாம். அப்புறம் மேலும் அதுபற்றி தெரிய விரும்பினால் இணையத்தில் தேடி விவரங்களை அறிந்து கொள்ளலாம். அதை எல்லாம் தாண்டி ஒன்று சொல்ல வேண்டும், தகவல்களுக்கும் கலைக்கும் ஒரு சம்மந்தமுமில்லை. எழுதுவதாக இருந்தாலும் சரி, பார்ப்பதாக இருந்தாலும் சரி,  படைப்பதாக இருந்தாலும் சரி.

நான் இப்படத்தை முதலில் ஒரு ஞாயிறு முற்பகல் நேரத்தில் சென்னை தொலைக்காட்சியில் பார்த்தேன். டில்லி ஒளிபரப்பில்.  அப்புறம் ஒரு திரைப்பட சங்க திரையிடலில். அதற்கு அப்புறம் படத்தின் திரைக்கதையை அது வெளிவந்த உடனேயே தமிழில் படித்தேன். அந்த அற்புதமான காரியத்தை மீரா கதிரவன் செய்திருந்தார்.  அவரை சந்திக்க வேண்டும் என்று கூட சுற்றியிருக்கிறேன். பத்மராஜன் எழுத்தால் கூட நம்மை நிரப்புகிறவராக எப்படி இருக்க முடியும் என்று தன்னைத்தான் கிள்ளிப் பார்த்துக் கொண்ட காலங்கள் அவை.

இன்று பார்க்கும்போது கூட இருக்கையின் நுனியில் உட்கார்ந்து கொண்டுதான் பார்த்தேன் என்றால் கொஞ்சம் மலைப்பாக இல்லையா?

ஒன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

தூவானத் தும்பிகள் படத்தை அநேகரும் பார்த்திருக்கக் கூடும். அல்லாதவர்களுமே கூட ஒருவேளை குறிப்பிட்ட அந்தக் காட்சியைப் பார்த்திருக்கக் கூடும். ஒரு பத்மராஜனின் படம் பார்ப்பது என்பது ஜங்க்ஷனுக்கு சாமான்கள் வாங்க வந்த லாலுடன், அசோகன் நாரைங்கா வெள்ளம் குடிக்க புறப்பட்டது போல.

Image

-மணி எம்.கே மணி 

One thought on “மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *