“பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான மூன்று மந்திரங்கள்”
பிளாஸ்டிக் என்று சொன்னாலே பிளாஸ்டிக் பைகள் பற்றிய நம் சிந்தனைகள் செல்கிறது. மக்கிப் போகாததாலும் அனைத்து இடங்களிலும் நிறைந்து பெரும் சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது என்பது நாம் அறிந்ததே.
பிளாஸ்டிக் நம் உடலுக்குள் புகுந்து மெல்ல மெல்ல அரித்தெடுக்கும் விஷயம் நமக்குத் தெரியாது. ஆயிரக்கணக்கான வழிகளில் பிளாஸ்டிக் மனிதகுலத்தை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் மரங்கள் வெட்டப்படுவது குறைகிறது. பிளாஸ்டிக் சாதனங்கள் கேடு தராதவை என்று பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழில் துறையினர் பரப்பி வருகின்றனர். இது தவறான தகவல்.
பிளாஸ்டிக் பயன்படுத்துவது சுகாதாரக்கேடு மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதோடு, சுவாசக் கோளாறு, புற்றுநோய் ஏற்படுத்துவதாக அறிவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏரி, குளம், கடல் மற்றும் அனைத்து நீர் பாதைகளையும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அடைத்துக் கொண்டு பெரும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
நாம் பயன்படுத்தி எரியும் பிளாஸ்டிக் கழிவுகளை சேரிப்பாளர்கள் அவற்றை மறுசுழற்சி செய்ய அனுப்புகின்றனர்.
ஆனால் பழைய பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து தரமான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவே முடியாது என்பதே அறிவியல் உண்மை.
மூன்று முறைக்கு மேல் மறுசுழற்சி செய்த பின் பிளாஸ்டிக்கை பயன்படுத்தவே முடியாத கழிவு பொருளாகி விடுகிறது.
இப்படியான கழிவு பொருட்கள் கடல் பரப்புகளுக்கும் சென்று மாசு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் செத்து மடிகின்ற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கடற்பரப்பில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் கொட்டப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே நாம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு (குறிப்பாக தெர்மாகோல் தட்டு பிளாஸ்டிக் குவளை போன்றவை) சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத துணி, சணல், நார் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் தயாரிப்புகள் எல்லாவற்றிலும் நச்சுத்தன்மை உள்ளது என்று அந்தந்த பொருட்களில் குறிப்பிட உற்பத்தியாளர்களிடம் அறிவுறுத்தப்பட வேண்டும்
இதற்காக தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.
மாற்றுப் பொருட்கள் தயாரிப்பதை, பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.
பூமியை பிளாஸ்டிக் இல்லா பூமியாக மாற்ற மூன்று வழிகளை நாம் கடைப்பிடிக்கலாம்.
1) REDUSE – குறைத்தல்
2) REUSE – மறு பயன் கொள்ளல்
3) RECYCLE – மறு சுழற்சி செய்தல்
நம் எதிர்கால குழந்தைகள் வளமுடன் வாழ பிளாஸ்டிக் கை ஒழிக்க விரும்பும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
நூலின் தகவல்கள்
நூல் : “மனித குலத்தை அச்சுறுத்தும் பிளாஸ்டிக்”
நூலாசிரியர் : சிந்தன் சுற்றுச்சூழல் ஆய்வு குழு
விலை : ரூபாய் 125/-
வெளியீடு : நேஷனல் புக் ட்ரஸ்ட் சென்னை.
தொடர்பு எண் : 044 28252663
நூலறிமுகம் எழுதியவர்

MJ பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

