நண்பா, உங்களுக்கு…
உங்களை நீங்களே துண்டுகளாக
வெடிக்கச் செய்ய வேண்டும்,
வாழ்க்கையோடு ஆரம்பிப்பதற்காக
ஒரு காட்டுமிராண்டித்தனமாக முரசை அடித்திடு
புகை பிடி, கஞ்சா குடி
அபின் மென்றிடு லல்பரி மென்றிடு
நாட்டுச் சாராயம் மிகவும் உடைந்து இருக்கிறதால்
எல்லாவற்றையும் விட மலிவான டால்டாவின் ஒரு பின்ட் கீழ்
பகல் இரவு போதையில் வாழ், சுறுசுறுப்பாக வாழ்
24 மணி நேரம்
ஒருவர் மற்றும் எல்லோரையும்
சபி ;
இவனின் அம்மாவின் யோனியின்,
சகோதரியின் யோனியின் சபதம்
அசிங்கமாக பேசு
கன்னத்தின் மேல் அறைந்திடு மற்றும்
இவனை அடி… நண்பனே, நீ
ராம்புரியின் கத்தியைப் பயன்படுத்தி
வைக்கணும் குத்து, ஒரு கோடாலி, ஒரு வாள், ஒரு இரும்புக்கம்பி
ஒரு ஹாக்கி மட்டை,
ஒரு மூங்கில் அதன் மேலே அமில பல்ப் போன்றவை எடுத்து
செல்ல வேண்டும்
நீங்கள் இமைக்காதீர்
யாரோ ஒருவரின்
உள்மனதையும்
செதுக்குவதற்காக
தயாராக இருக்க வேண்டும்
கொலை செய் மற்றும் தூங்குபவரை அடி
மனிதர்களை அடிமைப் படுத்து ; அவர்களின் கழுத்துகளில் கத்தியால் குத்து
அவர்களின் இரத்தம் தோய்ந்த முதுகின் மேல் உனது
பீன்ஸை சமைத்திடு
உனது அக்கம்பக்கம் உள்ள பக்கத்து வீட்டுக்காரர்களைக் கொள்ளையடி,
வங்கிகளை உடை
லேவாதேவிக்காரர்களின் அம்மாக்களை மற்றும்
துர்நாற்றம் வீசும் பணக்காரர்களை
புணர்ந்திடு
உனது சொந்தம் உறவினர்களை ஏமாற்றி
அவர்களின் கழுத்தை அறுத்துப் போடு ; அவர்களுக்கு விஷமூட்டு,
அவலமான நீ
யாருடையவாவது அம்மா
அல்லது
சகோதரியை
எங்கேயும் தலை குனிய வைத்திட
உன்னால் இயலும்
ஒவ்வொரு கன்னியோடு
உனது குறியை இணைத்திடு , எவரையும்
இவ்வளவு முதியவரென அழைக்காதே ,
எவரையும் மிகச் சிறியவனென சொல்லாதே
எவரையும் அதிர்ச்சியூட்டுவதற்காக பச்சை இல்லை
அவர்களுக்கு ஒன்று செய்
மற்றும்
எல்லோரையும் ஒன்று சேர்த்து
பகிரங்கமாக
மேடை மீது பலாத்காரம் செய்
வேசிகளைப் பெருக்கு!;
வாழ்
ஒரு தரகனை வெட்டி
பெண்களின் மூக்கு , ஸ்தனங்களை அறுத்துப் போடு
அவர்கள் வெட்கப்படுவதற்காக
சாலையில் கழுதைகள் மேல் நிர்வாணமாக ஏற்று
மனிதனுக்கு சாலைகளைத் தோண்ட வேண்டும்
பூக்களைப் பறிக்க வேண்டும்
தெரு விளக்குகளை வீழ்த்த வேண்டும்
காவல் நிலையங்களை மற்றும்
ரயில் நிலையங்களை
உடைத்துப் போட வேண்டும்
கைஎறி குண்டுகள் வீச வேண்டும்;
இலக்கியச் சங்கங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், விமானத் தளங்களை
மண் போட்டு மூடுவதற்காக
ஹைட்ரஜன் குண்டுகளை
விழச் செய்ய வேண்டும் ;
சாக்கடைகளின் முக்கியத் திறப்புகளைத் திறந்து
அவற்றில்
பிளாட்டோ, ஐன்ஸ்டீன், ஆர்கிமிடிஸ்,
சாக்ரடீஸ்,
மார்க்ஸ், அசோகர், ஹிட்லர்,
சார்த்தர், காஃப்கா,
போதலேர் ஆகியோரை எறிய வேண்டும்
ரிம்பாட் , எஸ்ரா பவுண்ட், ஹாப்கின்ஸ்,
கதே, தாஸ்தாவெஸ்கி, மாயாகோவஸ்கி,
மாக்சிம் கார்க்கி, எடிசன், மேடிசன், காளிதாஸ்,
துக்காராம், வியாசன், ஷேக்ஸ்பியர்,
ஞானேஸ்வர், மற்றும்
அவர்கள் தமது எல்லா வார்த்தைகளோடு
அங்கேயே
அழுகியபடி வாழ விடுங்கள்
ஜீசஸ், பேகம்பர், புத்தர் மற்றும் விஷ்ணு போன்றவர்களின் சந்ததியினரை
தூக்கில் தொங்க விட வேண்டும்
கோயில்கள், சர்ச்சுகள், பள்ளிவாசல்கள்
சிலைகள், அருங்காட்சியகங்கள் அழிக்கப்பட வேண்டும்
எல்லா பூஜாரிகளை
பீரங்கிக் குண்டுகளால்
பறக்க விட வேண்டும்
மற்றும்
அவர்களின் உதிரத்தால் நனைந்த துணிகளால் கட்டுரை எழுத வேண்டும்
உலகத்தின் எல்லா புனித நூல்களின்
எல்லா பக்கங்களையும்
கிழித்தெறிய வேண்டும்
பிறகு அவற்றை
மக்களுக்குக் கொடுக்க வேண்டும்
அதனால்
அவர்கள் தமது கழுதைகளுடைய
அழுக்கை சுத்தம் செய்து முடிக்கட்டும்,
எப்போது அது நடக்கிறதோ
ஏதாவது ஒருவரின்
வேலிகளின் கம்புகளை அகற்றிடு
மற்றும் அங்கே அழுக்குண்டாக்கி மூத்திரமும் பெய்வதற்காக சென்றிடு ,
மற்றும் இதோடு மலம் கழித்திடு
அங்கே
மாதவிடாய், இருமல் சளி, தும்மல் வெளியேறும் குசு போன்றவற்றை
காற்றாக கொடுப்பதற்காக
தேர்ந்தெடுத்திடு
ஒருவரின் வாசனை உணர்வை புண்படுத்துவதில்…
என்ன தீங்கு
போய்ச் சேரப்போகிறது?
மேலிருந்து கீழேயும்
நடுவில் எல்லா இடமும் நரகம் எழட்டும்
மனிதனே, நீ மனிதக் குருதியைக் குடி,
எச்சிலை சாப்பிடு,
மனித மாமிசத்தை வறுத்திடு,
மனிதக் கொழுப்பை உருக வை
பிறகு
குடி,
உனது ஆலோசகர்களின் முழங்காலை
கடினமான கற்கள் மீது அடி,
அவர்களின்
எலும்புக்கூழை குடிப்பதற்காக,
வர்க்க யுத்தம், ஜாதி யுத்தம்,
வகுப்புவாத யுத்தம், கட்சிகள் யுத்தம்,
தர்ம யுத்தம் , உலக யுத்தத்தில்
முழுமையாக
அநாகரிகமான , இரக்கமற்ற
மற்றும் ஆதி மனிதனாக
ஆகிப் போக வேண்டும்
பிறகு
சைத்தானின் மேற்பார்வையில்
அராஜகத்தையும் பிறப்பிக்க வேண்டும்,
உணவு
உற்பத்தியாகாததற்காக
ஒரு எதிர்ப்பை ஆரம்பித்திடுங்கள்,
எல்லா மக்களையும் கொல்லுங்கள்
மற்றும்
அவர்களைப் பசியால் கொன்று
மரணத்தின் பள்ளதாக்கில்
இறக்கி விடுங்கள்,
சுயமாகவும் இறக்கட்டும்,
நோயைப் பரப்புங்கள்,
எல்லா மரங்களையும் இலைகளற்றதாக்குங்கள்
தியானித்துக் கொண்டு
எந்த பறவையும்
எப்போதும் போகவில்லை
மனிதனே, அனத்தல் மற்றும் வலியில்
அலறி இறக்கும் திட்டத்தை உருவாக்கு
பிரபஞ்சத்தை நிரப்புவதற்காக
இதை எல்லாம் ஒரு கட்டியில் விரிவடையச் செய்,
பலூன் ஊதுங்கள்
பிறகு
சுருங்குவதற்காக
ஒரு எதிர்பாராத நேரத்தில் வெடிக்கட்டும்
இதற்கு பிறகு எவர் தப்பிக்கின்றனரோ
அவரையும் கொள்ளையடிப்பது அல்லது மற்றவரை
தமது அடிமை ஆக்குவதை நிறுத்தி விடு
அரசியல் கட்சி உருவாவதை தடுத்து நிறுத்து,
சொத்து உண்டாக்குவதை தடுத்து நிறுத்து,
தன்னை அறியாததின்
குற்றம் செய்வதை தடுத்து நிறுத்து,
உனது அம்மா அல்லது சகோதரிக்குத் தெரியாமல்
குற்றத்தைச் செய்
ஆகாயம் உனது தாத்தா,
பூமி உனது பாட்டி
மற்றும்
அவற்றை போஷித்திட வேண்டும்,
எல்லோரும் தமக்குள்
அன்பில் மூழ்க வேண்டும்
இத்தனை வேகமான
அபிநயம் செய்திட வேண்டும் என்று சூரியன் மற்றும் சந்திரனை
ஒளிரச் செய் ,
உணவின் ஒவ்வொரு புல்லையும் எல்லாரோடும் பகிர்ந்திடுங்கள்,
ஒரு பஜன் எழுதப்படட்டும்
மனிததன்மைக்காகவே தான் ,
மனிதன்,
மனிதனுக்கு மட்டும்மனிதனினுக்காகத் தான்
பாடல் பாட வேண்டும்.
ஹிந்தியில் : நாம் தேவ் தஸால் (மராத்தியக் கவிஞர்)
தமிழில் : வசந்ததீபன்
நாம்தேவ் தஸால்
பிறப்பு : 15 பிப்ரவரி 1949
இறப்பு : 15 ஜனவரி 2014
பிறந்த இடம் : பூனாவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் , மஹாராஷ்டிரா மாநிலம்.
படைப்புகள்
(1) கோல் பீட்டா (1972)
(2) மூர்க்கம் ஹாதாத் யானே டோங்கர் ஹல்வலே (1975)
(3) ஆமச்யா இதிஹாஸாதீல் ஐக் அபரிஹார்ய பாத்ர: பிரியதர்ஷிணி (1976)
(4) துஹீ யத்தா காஞ்சீபுரம் (1981)
(5) க்கேல் 1983)
(6) காண்டூர் பஹீச்சா (1986)
(7) யா ஸத்தேத் ஜீவ் ரமத் நாஹீ (1995)
(8) மீ மார்லே சூர்யாச்யா ரத்தா சே
க்கோடே ஸாத் , துஜே போட் த்தருன்
சால்லோ ஆஹே.
ஆக மொத்தம் 11 கவிதைத் தொகுப்புகள்.
மற்றவை
(1) தலித் பைந்த்தர் ஆந்தோலன் கே ஸம்ஸ்த்தாபக் (1972)
(2) புத்த் ரோஹிதாஸ் விசார்ட்ஸ் கெளரவ் புரஸ்கார் (2009)
(3) ஸாஹித்ய ஜீவன் கெளரவ் புரஸ்கார் (2004) மற்றும் பத்மஸ்ரீ புரஸ்கார்.
இவர் கவிதையைக் தவிர நாடகமும் , நாவலும் எழுதியுள்ளார்.
எழுதியவர்
வசந்ததீபன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.