manitha sadalam poetry written by saragu கவிதை: மனித சடலம் - சரகு
manitha sadalam poetry written by saragu கவிதை: மனித சடலம் - சரகு

கவிதை: மனித சடலம் – சரகு

எல்லாவற்றையும் இழந்து நிற்கும்
மனித சடலத்திடமிருந்து
ஒரு முனகல் மட்டுமே வரும்..

அந்த முனகலும்
அவருக்கு நெருக்கமானவர்க்கு
மட்டுமே தெரியும்..

கொடுமை எதுவென்றால்
அவரும் அதை
நிராகரிப்பார் ..

ஒரு பாலைவனத்தில்
கானல்நீர் பார்த்து
ஏமாந்து ஏமாந்து
பழக்கப்பட்ட
அந்த மனித சடலம்

இரத்தமும் சதையும்
நைந்துபோகும்வரை
அந்த நிராகரிப்பையும்
உண்மையென்று
எண்ணிக் கொள்ளும்..

விட்டில் பூச்சிகள்
விளக்கை நம்புவதுபோல்
உண்மையின் பிடியில்
சிக்குண்டுவிட்டால் ..
மனிதன் இப்படித்தான்..

காய்ந்து விட்டால்
ஒடிந்துதான் போகும்
வளர வாய்ப்பில்லை
என்பது புரிந்தால்..

நரகத்திலும் வாழலாம்
மனித சடலம்…

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *