கு.மணி எழுதிய “மனிதம்” (இது கதையல்ல நிஜம்) சிறுகதை

கு.மணி எழுதிய “மனிதம்” (இது கதையல்ல நிஜம்) சிறுகதை

“மனிதம்” (இது கதையல்ல நிஜம்) சிறுகதை

ஜம்முவில் உள்ள நர்வால் பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஒரே ஒருவர் மட்டும் தனது கையில் மைக்கை பிடித்துக் கொண்டு

. ” இந்த அக்கிரமத்தை பாருங்கள் இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா? “என்று கத்திக் கொண்டே இருந்தார்

. ஒரு சிலர் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.நர்வால்பகுதியே பதற்றத்துடன் காணப்பட்டது.
.
. “நான் என்ன குற்றம் செய்தேன். என் வீட்டை ஏன் இடிக்கின்றீர்கள்?”

. உங்கள் வீடு ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளது. ஜம்மு மேம்பாட்டு ஆக்கிரமிப்பு அதிகாரிகள்.

. முறைப்படி எந்த அறிவிப்பும் வழங்காமல் நூற்றுக்கணக்கான போலீசாரைக் குவித்து வீட்டை இடிக்கின்றீர்களே! இதன் காரணம் என்ன? அகமதுவின் கேள்வி.

. தனக்கு நேர்ந்த அநீதியை அவரே நேரலையில் செய்தியாக தெரிவித்தார் “நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு ஜம்மு காஷ்மீரில் என்ன கதிநேர்கிறது என்பதற்கு இதுஒரு சான்று “என கூக்குரல் இட்டார் அகமது.

. ஜம்முவில் உள்ள நார்வால் பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அகமது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டில் வசித்து வந்தார். போதை மருந்து கடத்தல் காரர்களின் செயல்பாடுகளை அவர் அம்பலப்படுத்தி வந்துள்ளார். சமீபத்தில் கடத்தல் காரர்களுக்கும் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் உள்ள தொடர்பை இவர் அம்பலப்படுத்தி இருக்கிறார். இதனுடைய தாக்கமே அகமதுவின் வீடு இடிக்கப்படுவதாக அருகில் குடியிருந்த ஒருவர் தகவல் தெரிவித்தார்.

. ஜம்மு காஷ்மீரில் 20 லட்சம். கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கப்பட்டுள்ளன. இவற்றை எதுவும் ஐம்மு மேம்பாட்டு ஆணையம் இடிக்கவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது பெரும் முதலாளிகளிடடமிருந்து தொடங்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பின்பற்றப்படவில்லை என்று அகமதுவின் வழக்கறிஞர் வேதனையுடன் தெரிவித்தார். அப்போது புல்டோசர் கொண்டு அகமதுவின் வீடு சுக்குநூறாக இடித்துத் தள்ளப்பட்டது.

. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புரிமையை ரத்து செய்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியமைத்த பின்னர் அங்கு துணைநிலை ஆளுநரை நியமித்து சர்வாதிகார அடக்குமுறை ஆட்சி நடத்தி வருகிறார்கள். ஜம்மு-காஷ்மீர் மட்டும் கிடையாது பல மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார வரம்பை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள துணைநிலை ஆளுநர் புரோட்டோசர் அடக்குமுறையைக் கடைபிடித்து வருகிறார் வெகுஜனம் ஒருவரது புலம்பல்.

. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் வீடுகள் இடிப்பு நடவடிக்கையில் பல பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீடுகளை காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இடித்து வருகின்றனர் வீட்டை இழந்தோரின் குமுறல்.

. பயங்கரவாதிகளுக்கும் அப்பாவி பொதுமக்களுக்கும் இடையில் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளின் வீடுகளுடன் சாதாரண காஷ்மீரிகளின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன அப்பாவி மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் பலரின் வேண்டுகோள்.

. ராணுவத்தினரும் காவல்துறையினரும் இரவு 12:30 மணி வரை இருந்தனர். நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று வீட்டை இடிக்க வந்த காவல்துறையினரிடம் மன்றாடியது ஒரு குடும்பம். ஆனால் அவர்கள் எங்களை வெளியேறச் சொல்லிவிட்டு வேறு வீட்டிற்கு அனுப்பினர்.

. இரவு 12:30 மணிக்கு ஒரு பெரிய குண்டு வெடிப்பு ஏற்பட்டது. வீட்டைச் சுற்றி இருந்த அனைவரும் 100 மீட்டர் தொலைவில் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். அங்கிருந்து அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டனர். சிலர் கடுகு வயல்களுக்குள் சென்றனர். சிலர் வேறு வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

. அப்போது எங்கள் வீட்டில் யாரும் இல்லை எனது இரண்டு மகன்களையும் கணவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை என்றும் இதுவரை 10 வீடுகள் வரை இடிக்கப்பட்டுள்ளது. அப்பாவிகளாகிய நாங்கள் என்ன தவறு செய்தோம் இந்த புல்டோசர் நிலை தொடர்ந்தால் நாங்கள் எங்கு செல்வது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சாயிராபானு கண்ணீர் மல்க கூறினார்.

. துணைநிலை ஆளுநரின் புல்டோசர் பீதி வாட்ஸ் அப் வலைப் பின்னல் மூலம் பல இஸ்லாமியர்களின் வீடுகள் எல்லாம் ஆக்கிரமிப்பில் இருப்பவை என்று வதந்தி பரப்பப்பட்டது. இந்த புல்டோசர் அடக்குமுறைக்கு அகமது வீடு இடிப்பு நடவடிக்கை வெளிப்படுத்தி உள்ளது என்று ஒருவரின் புலம்பல்.

. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்தவிதத் தகவலையும் தெரிவிக்காமல் அனுமதியும் கோராமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியீடு.

. அகமதுவின் வீடு இடிக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருந்தன.

. புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராக
சனநாயகக் கட்சி கொண்டுவந்த மசோதாவை தேசிய மாநாட்டுக் கட்சி அரசு நிராகரித்தது என்று அங்கே ஒரு சிலர் குறிப்பிட்டனர்.

. ஒரு பக்கம் சட்டமன்றத்தில் மசோதா இயற்றி புல்டோசர் நடவடிக்கையைத் தடுப்பதற்கான பெயரளவிலான முயற்சியைக் கூட மேற்கொள்ளாமல் இன்னொரு பக்கம் இந்த வீடு இடிப்பை முதல்வர் கண்டிப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

. ஊடகங்கள் மற்றும் தனிநபராக அகமது செய்தி வெளியிட்டாலும் அவர்கள் குடும்பத்தினர் செய்வதறியாது தவித்தனர்..

. புல்டோசர் ராஜ்ஜியம் என்ற பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக காஷ்மீர் மட்டுமல்ல நாடு முழுவதும் இந்துக்கள் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இஸ்லாமியர்களுக்காக இந்துக்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

. இந்த நிலையில் வீடு இடிக்கப்பட்டதால் திக்கற்று இருந்த அகமது குடும்பத்தினருக்கு அருகில் வசித்து வந்த சர்மா என்ற இந்து என்று சொல்லிக் கொள்ளாத நல் உள்ளம் கொண்ட மனிதநேயமிக்க மனிதாபிமானமுள்ள மனிதர்

. “அகமதுவின் 2700 சதுர அடி வீடு இடிக்கப்பட்டால் நாங்கள் 5400 சதுர அடி வீடு கட்டி கொடுப்போம் “என்ற குரல் இன்னும் மனிதம் வாழ்கின்றது என்பதை வெளிப்படுத்தியது.

. “சகோதரத்துவம் வளர வேண்டும் இந்து இஸ்லாமியர் என்ற வெறுப்பு அரசியலை எத்தனை காலம் தான் நாம் சகித்துக் கொள்வது “என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார் நிலம் கொடுத்து உதவிய சர்மா.

. இந்த மனிதம் இருக்கும் வரை மனிதர்களிடம் இருக்கும் இந்த மத நல்லிணக்கம் சனாதான சக்திகள் ஒர் அணியில் திரண்டாலும் அவைகளால் வெற்றி பெற இயலாது என்பது நிச்சயம் என இந்து சகோதரர்களும் இஸ்லாமிய சகோதரர்களும் தங்கள் குரலை உயர்த்தி கோசமிட்டனர். அகமது அவரது குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.

எழுதியவர் : 

✍🏻 – கு.மணி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *