மனிதருக்குத் தோழனடிப் பாப்பா : சிறார் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா manitharukku thozhanadipapa : siraar sirukathai nool veliettu vizha
மனிதருக்குத் தோழனடிப் பாப்பா : சிறார் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா manitharukku thozhanadipapa : siraar sirukathai nool veliettu vizha
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வத்தலக்குண்டு கிளை, கிளை நூலகம் ஆகியவற்றின் சார்பில் புத்தகத்திரு விழா மற்றும் ராமன் முள்ளிப்பள்ளம் எழுதிய” மனிதருக்குத் தோழனடிப் பாப்பா” சிறார் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா  ஞாயிறன்று (ஜூன் 4) நடைபெற்றது.

வத்தலக்குண்டு கிளை நூலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு ச.கணேசன் தலைமை தாங்கினார். தமுஎகச கிளைச்செயலாளர் கி.லெட்சுமணன் வரவேற்றார். தமுஎகச மாவட்டச்செயலாளர் கவிஞர் கவிவாணன் துவக்கவுரையாற்றினார். தமுஎகச வின் மாவட்டத்தலைவர் நாவலாசிரியர் வரத.இராஜ மாணிக்கம், ராமன்முள்ளிப்பள்ளம் எழுதிய “மனிதருக்குத் தோழனடி பாப்பா” நூலை வெளியிட்டார்.

மனிதருக்குத் தோழனடிப் பாப்பா : சிறார் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா manitharukku thozhanadipapa : siraar sirukathai nool veliettu vizha
 
கவிஞர் சக்திஜோதி பெற்றுக்கொண்டார் தமுஎகசவின் மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர்.ரேவதிமுகில், செனார்டு தொண்டு நிறுவன செயலாளர் பா.கிருஷ்ணமூர்த்தி, வைகை டிரஸ்ட் இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பட்டிமன்ற நடுவர் கவிஞர் முல்லை நடவரசு நிறைவுரையாற்றினார்.

தமுஎகசவின் கிளைத்துணைத்தலைவர் ஆர்.ரமேஷ் பாண்டி யன் நன்றி கூறினார். நூலகர்கள் எம்.கருப்பையா, அசோகன்,செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *