கவிதை: மண்ணில் புதைகிறது மனிதநேயம்
– கோவி.பால.முருகு
காசா கட்டிட இடிபாடுகளில்
சிக்கித் தவிக்கிறது மனிதநேயம்
அன்பு…….
ஏவு கணைகளின் முனையில்
தடவி அனுப்பப் படுகிறது.
கருணை….
ட்ரோன்களில் வைத்து
அனுப்பப்படுகிறது.
நாளும் பண்டிகையும்
மரண ஓலத்தில் நடக்கிறது.
எங்கள்
பச்சிளங் குழந்தைகளைப்
பசி கொல்வதற்கு முன்னே
குண்டுகள் எங்களைக்
கொன்று விடட்டும்.
என்கிறது பெற்ற வயிறுகள்.
மனிதர்கள் இல்லாத
மண்ணைப் பிடித்து
என்ன செய்யப் போகிறீர்கள்?
ஈவு இரக்கமற்ற
அரக்கர்களே…!
உங்கள் கோப்பைகளில்
மனித இரத்தம்
நிரம்பி வழிகிறது.
உங்கள் சிந்தனையில்
விஷம் நிரம்பிக் கிடக்கிறது.
நூற்றுக் கணக்கான
ஆயுதங்களின் மூலம்
அனுப்புகிறீர்கள்
உங்கள் மரணப் பரிசை.
வீடின்றி உறவின்றி
உணவின்றி உறக்கமின்றி
திறந்த வெளிச்
சிறைச் சாலையில்
எங்கள் வாழ்க்கை……..
ஏவு கணைகளையும்
ட்ரோன்களையும் விடுவது
உங்களுக்கு விளையாட்டு
எங்களுக்கு வேதனை!
புழுவை வெயில் சூட்டில்
போட்டு…
அது துடிப்பதைப் பார்த்துக்
குதூகளிக்கும் உங்கள்
குரூர புத்தியில்
கருணைக்கு ஏது இடம்?
பெரியண்ணன் அமெரிக்கா
மூன்றாம் உலகப் போருக்கு
முகவரி எழுதுகிறது!
கோடிக் கணக்கான
மக்களைக் கொல்லத் துடிக்கின்றன
இஸ்ரேலும் அமெரிக்காவும்.
நித்தம் ஒரு சர்வாதிகார
அறிவிப்பைச் செய்யும் அமெரிக்கா
சொந்த நாட்டு மக்களாலேயே
வெறுக்கப் படுகிறது.
மரண ஓலத்தை
மகிழ்ச்சியாய்க் கேட்கும்
மனமற்றவர்களின் காதுகள்!
ஓங்கி அடிக்கும்
உங்கள் கைகளுக்கு
வலி பரிசாகக் கிடைக்கும்
விரைவில்….!
எழுதியவர் :
– கோவி.பால.முருகு
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
