ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை – செ.தமிழ் ராஜ்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை – செ.தமிழ் ராஜ்

 

 

 

கர்நாடக இசை உலகின் பிரபல வாய்ப்பாட்டு இசைக் கலைஞரான T.M.கிருஷ்ணா
அவர்கள் பாரம்பரியமான தங்கள் இசைத்துறையில் நிகழும் கைவினைஞர்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறைகள் அதன் ஏற்றத்தாழ்வுகள்
குறித்து விரிவான நூலொன்றை எழுதியிருக்கிறார்.

குரலிசையில் உச்சம் தொடும் இசைக்கலைஞர்களுக்கு பக்கபலமாக பக்கவாத்தியம் இசைக்கும் கலைஞர்களும் உயரம் தொடும்போது அந்த வாத்தியக் கருவிகளை செய்து கொடுப்போர் எந்த நிலையிலும் வெளிவராமல் சத்தத்தின் ஓசையில் கரைந்துபோய்விடுவதை மிக உன்னிப்பாக கவனித்து அந்தக் கருவிகளை தயாரித்து தரும் கைவினைஞர்களை கண்டு அவர்களின் வாழ்க்கை பண்பாடு கலாச்சாரம் சாதியம் ஏற்றத்தாழ்வு கல்வி பொருளாதாரம் யாவற்றையும் உள்வாங்கி நூலாக்கம் செய்திருக்கிறார்.

கர்நாடக இசையில் முற்போக்கான புரட்சிகளை செய்துவரும் தோழர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் மிகப்பிரபலமான முன்னனி இசைக்கலைஞராக
விளங்கும் அவர் பழம்பஞ்சாங்கமாக இருந்திருந்தால் இதைப்பற்றியெல்லாம்
கவலைப்பட்டிருக்க மாட்டார். சக மனிதர்களின் மீதான நேசமும் அவர்களை
கூர்ந்து கவனித்து அக்கலைஞர்களை உள்வாங்கி சமூகத்திற்கு அறிவிக்கும்
மகத்தான பணியை முன்னெடுத்து உலகின் முன் அவர்களின் துயரமான பாடலை
தொகுத்து தந்துள்ளார். அந்த வகையில் சொகுசாக சாய்ந்து கொள்ள
வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ள சமூகத்திலிருந்து விலகி வாழ்வின்
தாழ்நிலையில் வீழ்ந்து கிடக்கும் கலைஞர்களை அவர்கள் வாழ்வியலின்

அவலநிலைகளை மிகத் துல்லியமாக படம்பிடித்து தானொரு செயல்பாட்டுக்
கலைஞராக தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

மிருதங்கத்தை தயாரிப்பவர்களை தேடி தன் பயணத்தை துவங்குகிறார் தஞ்சை
கும்பகோணம் என்று செவட்டியான் என்று அழைக்கப்படும் செபாஸ்டின் மற்றும்
அவரது வழித்தோன்றல்கள் வழியே உண்மையைத்தேடி புறப்படுகிறார் அது
மதுரை வட சென்னை மயிலாப்பூர் என நீள்கிறது. செவட்டியானின் மகனான
பர்லாந்து அவரின் தொழில்திறன் அனைத்து முன்னனி இசைக்கலைஞர்களை
அசரடிக்கிறது. எத்தனையெத்தனை கைவினைஞர்கள் அவர்களின் பெயர்கள்
பூர்வீகம் இன்னபிற கதைகள் யாவற்றையும் சலிக்காமல் தொகுத்துள்ளார்.
பெயர்களின் விவரணைகள் கொஞ்சம் போரடித்தாலும் அதில் சொல்லவரும்
செய்திகள் இதுவரை யாராலும் சொல்லப்படாதது.

சாதியத்தின் கோர முகத்தை பிய்த்து உலகம் காண தந்திருக்கிறார் இப்படி ஒரு
உலகம் இருப்பதும் மனிதர்களை வஞ்சிக்க தீண்டாமை கொடுமைக்குள்ளாக்க
என்னனென்ன வழிகள் இருக்கின்றது மனம் குமைந்தபடி சமத்துவமற்ற
வாழ்க்கையை வாழ நேர்ந்த துயரத்தை காட்சிப்படுத்துகிறார்.

மிருதங்கச் சக்கரவர்த்திகளும் வித்வான்களும் மேளம் தாளம் இசைக்கும்
விற்பன்னர்களும் தங்களுக்கான கருவிகள் யாரால் எவ்விதம் தயாரிக்கப்படுகிறது
அவர்களை வைத்து பிழைக்கும் நாம் அவர்களுக்கு தரும் சமூக மதிப்பு என்ன
என்பதை நெஞ்சில் கைவைத்து பார்த்தார்கள் என்றால் அவர்களுக்கு
துரோகமிழைத்திருக்கிறார்கள் என்றே கூறவேண்டும்.

சபையில் அக்கைவினைஞர்களுக்கு முதல் மரியாதை தர வேண்டும் ஆடு மாடு
எருமை இவற்றின் தோலுரித்து அவற்றை பக்குவம் செய்து பாடம் செய்து
இசைக்கருவிகள் தயாரிக்கும் அந்த மூலவர்களின் இடம் தேடியும் போகிறார்
டி.எம்.கிருஷ்ணா மேட்டிமைச் சமூகத்தில் பிறந்த ஒருவர் அப்படி எளிதில் பார்க்க
விரும்பாத மிருகவதைக்கூடங்கள் இறைச்சி உண்பவர் பார்த்தால்கூட சில மாதம்
இறைச்சி உண்பதை விட்டுவிடுவார் என்று சொல்லி அந்த இடங்களில் நேரடி
ஆய்வு செய்கிறார்.

நாற்றம் மூக்கைத் துளைத்தாலும் சகித்துக்கொண்டு உரிக்கப்பட்ட தோல்களை
காரில் சுமந்து செல்கிறார். ஒரு களஅனுபவம் எவ்வளவு முக்கியமானது என்பதை
உணர்த்துகிறார்.

மொத்தம் 11 கட்டுரைகள் உள்ளது. தஞ்சையில் துவங்கி சென்னை வரை விரிந்து
பரந்திருக்கின்ற கைவினைஞர்களின் வாழ்க்கையை மொத்தமாய்
தொகுத்திருக்கிறார்.

ஆதியிலிருந்து துவங்கி அந்தம் வரை சேகரித்திருக்கின்ற தகவல்கள் யாவும்
நிச்சயம் வியப்பூட்டுபவை. நான்காவது கட்டுரையில் ஆசாரிகளின் பங்களிப்பை
பேசுகிறார் இசைக்கருவிகளுக்கு தேர்ந்தெடுக்கும் மரம் அதன் செய்நேர்த்தி
மெனக்கெடல்கள் யாவும் துல்லியமாக பதிவு செய்திருக்கின்றார். முக்கனிகளில்
ஒன்றாகிய பலாப்பழம் சுவையூட்டும் கனியென்றால் அதன் மரத்தால்
செய்யப்படும் இசைக்கருவிகள் காதுகளில் இன்னிசை மீட்டுகின்றன.

பெண்களின் பங்களிப்பை பற்றியும் பேசுகிறார் சமூகத்தில் நிலவும்
பெண்ணடிமைத்தனமே அந்தத் தொழிலிலும் நிலவுகிறது மாதம்மாள் அஸ்வத்தம்மாள் கீதா என்று ஓரிருவரைத் தவிர குறிப்பிட்ட சொல்லக்கூடிய பெண் இசை கைவினைஞர்கள் அந்தக் கருவிகளால் உலகப்புகழ் பெற்ற பெண் கலைஞர்கள் ஏராளமானோர் இருக்கையில் அந்த தோலிசைக்கருவிகளை செய்யும் பெண்கள் மிகச்சொற்பமாகவே இருக்கிறார்கள்.

பசுவைத் தெய்வமென்று வணங்குகிறார்கள் அந்த பசுவின் தோலை உரித்து
செய்யப்பட்ட கருவிகளை வைத்துக்கொண்டு காமதேனுவை போல இசை மழை
பொழிகிறார்கள்.இது வாழ்வின் மிகப்பெரிய நகைமுரணாய் விளங்குகிறது.

வர்ண அடுக்குகளில் ஒரு மனிதக் கூட்டத்தையே வெளியில் நிறுத்துகிறார்கள்
அவர்கள் கைகளால் தொட்டு தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகளை வைத்துக் கொண்டு சபையேறி தேனும்பாலும் பொழிகிறார்கள். அங்கீகாரம் யாவற்றையும் பெற்றுக்கொண்டு மிகக்கொடிய சுரண்டல் வர்க்கமாய் மாறுகிறார்கள். என்பதை எல்லோரும் போல் கடந்து செல்லாமல் அவற்றை கவனித்து கேள்விகள் எழுப்பி அவர்களுக்கான நியாயத்தை தேடியிருக்கிற டி.எம்.கிருஷ்ணா அவர்கள் உண்மையில் பாராட்டப்படவேண்டியவர். தமிழாக்கம் செய்த அரவிந்தன் அவர்களுக்கு அன்பும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்

செ.தமிழ் ராஜ்
வண்டியூர்
மதுரை

நூல் : மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்
செபாஸ்டியன் குடும்பக்கலை
ஆசிரியர்: டி.எம்.கிருஷ்ணா
மொழிபெயர்ப்பாளர்: அரவிந்தன்
பக்கம்: 321
விலை : 195
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *