எழுதா வார்த்தை
ஒவ்வொன்றிலும் பிழைகள்..
சொல்லாத சொல்
ஒவ்வொன்றிலும் அர்த்தங்கள்…
சிந்தாத கண்ணீர்
துளிகள் ஒவ்வொன்றிலும்
மரணவலி…
இல்லாத உறவுகளில்
இருந்து கொல்லும்
அவமானங்கள்…
கேட்காத சொற்களில்
உணராத அன்பு…
படராத கொடியில்
படர்ந்து திரியும்
சிலந்திவலை…
புரியாத புதிராய்
ஏற்றுக்கொள்ளமுடியா
கடமைகள்…
வாழ்ந்த வாழ்வில்
வாழா நிமிடங்கள்…
சிரித்த பொழுதுகளில்
மகிழா நொடிகள்…
மழை வேண்டி பலர்
மழை வேண்டாம் என சிலர்…
என்னைப்போல் சிலர்
மரணம் வேண்டியும்…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான கவிதை..எனது வாழக்கையை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்