ஜான் ஆர். மெக்கல்லோக் (John R. McCulloch) மார்ச் 1, 1789இல் பிறந்து நவம்பர் 11, 1864இல் மறைந்த ஸ்காட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் புள்ளிவிவர நிபுணரும் ஆவார். அவர் தொன்மைப் பொருளாதார ரிக்கார்டியன் பள்ளியின் மிகுந்த ஆர்வம்கொண்டவராகவும், கோட்பாட்டுகளின் விளக்கத்தினை அளித்தவருள் ஒருவராகவும் கருதப்படுகின்றார்.
மெக்கல்லோக், பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார், பொருளாதாரத் தரவுகள் சேகரிப்பு, புள்ளிவிவர பகுப்பாய்வு மற்றும் வெளியீட்டுதலில் முன்னோடியாக இருந்தார். 1828இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
1816இல் வெளிவந்த அவரது முதல் வெளியீடான An Essay on a Reduction of the Interest of the National Debtஇல் கோட்பாட்டு ரீதியான மற்றும் நடைமுறை அடிப்படையில் தேசியக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற கருத்தினை வெளிப்படுத்தியது. 1823இல் டேவிட் ரிக்கார்டோவின் மரணத்திற்குப் பிறகு, the Political Economy Club (அரசியல் பொருளாதாரக் கழகம்) அவரது நினைவாகப் பொருளாதாரம் குறித்த தொடர் பொது சொற்பொழிவினை மெக்கல்லோக் ஆற்றியுள்ளார்.
மெக்கல்லோக்கின் முக்கிய படைப்பான Principles (கொள்கைகள்) (1825), முதல் சிறந்த பொருளாதார பாடபுத்தகத் தொடராக இருந்தது. 1832ஆம் ஆண்டில், அவர் தனது நடைமுறை அகராதி, கோட்பாட்டுக் கருத்தியல் மற்றும் வரலாற்று வணிகம் மற்றும் கடல்வழி வணிக அகராதியை வெளியிட்டார், இது பின்னர் அவரது பிரித்தானியப் பேரரசின் புள்ளிவிவரக் கணக்கில் (1837) இணைக்கப்பட்டது. ஒரு தனித்துவமான கோட்பாட்டாளரான மெக்கல்லோக் தனது தத்துவார்த்த எழுத்துக்களை விடத் தனது புள்ளிவிவர மற்றும் விளக்கத் தொகுப்பில் சிறந்து விளங்குகிறார்.
ஆதாரம்: www.britannica.com; www.hetwebsite.net; www.1902encyclopedia.com www.encyclopedia.com; www.historyofinformation.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

