மார்ச் 02 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- முர்ரே நியூட்டன் ரோத்பார்ட் (Economist Murray Newton Rothbard Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

மார்ச் 02 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- முர்ரே நியூட்டன் ரோத்பார்ட் – பேராசிரியர் பு.அன்பழகன்

முர்ரே நியூட்டன் ரோத்பார்ட் (Murray Newton Rothbrad) மார்ச் 2, 1926இல் பிறந்து ஜனவரி 7, 1995இல் மறைந்த ஆஸ்திரிய பள்ளியினைச் சார்ந்த அமெரிக்க பொருளாதார அறிஞர், பொருளாதார வரலாற்றாசிரியர், அரசியல் கோட்பாட்டாளர் மற்றும் சமூக ஈடுபாட்டளாராக அறியப்படுகிறார். ரோத்பார்ட், “அனார்ச்சோ-முதலாளித்துவத்தின்” (அரசை முழுமையாக ஒழித்து, சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் தனியார் நிறுவனங்கள், தடையற்ற சந்தை மூலம் நிர்வகிக்க வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது) தந்தையாகக் கருதப்படுகிறார்.

ரோத்பார்ட் அரசு கட்டுப்பாட்டின் மீது தனிப்பட்ட பொறுப்பு மற்றும் சுய உரிமையை ஆதரித்தார். தனியார் சொத்துரிமையானது லாபத்தையும் இழப்பினையும் உருவாக்குகிறது, உற்பத்தியாளர்கள் தங்கள் முதலீட்டு முடிவுகளின் விளைவுகளை மதிப்பிட உதவுகிறது மற்றும் தொழில்முனைவோருக்கு ஊக்கத்தை அளிக்கிறது என்று அவர் வாதிட்டார்.

பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில், குறிப்பாக இறுதிநிலைப் பயன்பாட்டுக் கோட்பாடு, நலன்சார் பொருளாதாரம், பணவியல் கோட்பாடு, வணிகச் சுழற்சிக் கோட்பாடு மற்றும் பொருளாதார சிந்தனையின் வரலாறு ஆகிய துறைகளில் அவர் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். சாலைகள், உள்கட்டமைப்பு மற்றும் காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்டவை அரசாங்கத்தின் செயல்பாடுகளாகக் கருதப்படும் என்றும், இதனை தடையற்ற நிலையில் வழங்க வேண்டும் என்றார், இது ஒரு சர்ச்சைக்குரியதாக அப்போது கருதப்பட்டது.

ரோத்பார்ட் வரிவிதிப்பை எதிர்த்தார், தனிப்பட்ட பொருளாதார செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது என்றார். நவீன சுதந்திர வாத நெறிமுறைகள் மற்றும் அராஜக வாத தத்துவத்திற்கும் அவர் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். அமெரிக்காவில் நவீன சுதந்திர வாத மற்றும் அனார்ச்சோ-முதலாளித்துவ இயக்கத்தை அவர் தொடங்கி வழிநடத்தினார்.

ஆதாரம்: www.mises.org; www.springer.com; www.investopedia.com

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *