மார்ச் 03 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராக்னர் ஃபிரிஷ் (Economist Ragnar Frisch Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

மார்ச் 03 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராக்னர் ஃபிரிஷ் – பேராசிரியர் பு.அன்பழகன்

ராக்னர் ஃபிரிஷ் (Ragnar Frisch) மார்ச் 3, 1895இல் பிறந்த ஜனவரி 31, 1973இல் மறைந்த நோர்வே பொருளாதார அளவியல் மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் 1969ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை ஜான் டின்பெர்கனுடன் கூட்டாகப் பெற்றார். பொருளாதார அனுமானங்களைச் சோதிக்கக் கணித மற்றும் புள்ளிவிவர நுட்பங்களைப் பயன்படுத்துவதைக் குறிக்க “பொருளாதார அளவியல்” (Econometrics) என்ற வார்த்தையை ஃபிரிஷ் அறிமுகப்படுத்தினார், மேலும் பொருளாதார அளவியல் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார்.

பொருளாதார திட்டமிடல் மற்றும் தேசிய வருமானக் கணக்கியலுடன் இணைக்கப்பட்ட பெரிய அளவிலான பொருளாதார அளவியல் மாதிரியாக்கத்தின் வளர்ச்சி பற்றி விளக்கியதில் ஃபிரிஷ் புகழ்பெற்றவராக அறியப்படுகிறார். வணிகச் சுழற்சி பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையில், நுண்ணியல் பொருளாதாரம் (Microeconomics) என்ற செல்லையும் பேரியல் பொருளாதாரம் (Macroeconomics) என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார். நுண்ணியல் பொருளாதாரம் என்பது தனி நிறுவனங்கள், தனி தொழில்களின் பற்றியதாகும். பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தத்தைப் பற்றியதாகும்.

“உள்ளீடு ஓட்டம்” (flow-input), “வெளியீடுப் புள்ளி” (point-output) மற்றும் “உந்துவிசை மற்றும் பரவல்” (impulse and propagation) ஆகிய சொற்களையும் அவர் உருவாக்கி அறிமுகப்படுத்தினார். ஃபிரிஷ், இயக்கப் பொருளாதார மாதிரியாக்கத்திற்கான அவரது பங்களிப்பிற்காக புகழ்மிக்கவராக திகழ்கிறார், மேலும் 1933ஆம் ஆண்டில், வணிக சுழற்சியில் ஏற்ற இறக்கங்களை விவரிக்கக்கூடிய முதல் கணித பொருளாதார மாதிரியை அவர் வழங்கினார். ஃபிரிஷ், பொருளாதார அளவியலில் உற்பத்தி கோட்பாட்டை வடிவமைத்தார்; அவர் நேரத் தொடர் ஆய்வு மற்றும் நேரியல் ஒட்டுறவு ஆகியவற்றில் அவருடைய ஆய்வு பயணம் காணப்பட்டது. ஃபிரிஷ், ஃபிரெட்ரிக் வாவுடன் சேர்ந்து புகழ்பெற்ற ஃபிரிஷ்-வா தேற்றத்தை அறிமுகப்படுத்தினார்.

ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.nobelprize.org; www.hetwebsite.net

📚 எழுதியவர்:

பேராசிரியர் பு.அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *