மார்ச் 07 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் பிரீட்ரிக் நாப் (Economist Georg Friedrich Knapp Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 07 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் பிரீட்ரிக் நாப் – முனைவர் பு. அன்பழகன்

ஜார்ஜ் பிரீட்ரிக் நாப் (Georg Friedrich Knapp) மார்ச் 7, 1842இல் பிறந்து பிப்ரவரி 20, 1926இல் மறைந்த ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். நாப், புள்ளிவிவரங்கள் துணைகொண்டு பொருளாதார வரலாறு மற்றும் மக்கள்தொகை ஆய்வுகளை மேற்கொண்டார். வேளாண் முறை (1891) மற்றும் பணம் (1905) குறித்த அவரது புத்தகமானது மிகவும் புகழ்பெற்றதாகும். நாப், பணவியல் கோட்பாட்டின் சார்ட்டலிஸ்ட் பள்ளியின் (பணவியல் கோட்பாட்டினைப் பற்றிய ஆய்வு – பணமானது மதிப்பினை உருவாக்கும், பணத்தின் உள்மதிப்பினை அல்லது ஈடு வைப்பினைச் சார்ந்தது இல்லை என்ற வாதத்தை முன்னிறுத்தப்பட்டது) நிறுவனர் என்று அறியப்படுகிறார்.

பிற பணவியல் கோட்பாடானது பணத்தின் பரிமாற்ற மதிப்பில் கவனம் செலுத்துகிறன என்பதால் நாப்பின் கோட்பாடானது மாறுபட்ட நிலையில் வெளிப்படுகிறது. பணத்தின் மதிப்பானது அரசின் சட்டப்பூர்வமான உரிமை வழியாக உருவாக்கப்படுகிறது என்று நாப் குறிப்பிடுகிறார். சட்டக் கருத்துக்கள் அவரது பொருளாதார வாதத்திற்கு மையமாக உள்ளன. இந்த அணுகுமுறையை அனைத்து வகையான பணத்திற்கும் பொருந்தும் என்றார். ஒரு அரசாங்கம் ஆணையின் மூலம் பணத்தை உருவாக்கும் நிலையில் உள்ளது என்ற அனுமானத்துடன், நாப்பின் கோட்பாடு நவீன பணவியல் கோட்பாட்டில் கணிசமான கவனத்தை ஈர்த்தது.

1895ஆம் ஆண்டில், அவர் The State Theory of Money (பணத்தின் மாநிலக் கோட்பாடு) என்ற புத்தகத்தை வெளியிட்டார், இதில் பணத்திற்கு உள்ளார்ந்த மதிப்பு இருக்கக்கூடாது என்றும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு அடையாளமாக, அதாவது சட்டப்பூர்வப் பணமாகக் கண்டிப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசு நிலைப்பாட்டை எடுக்கிறது.

இது கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது, ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அதைப் பற்றி கடுமையாக வாதிட்டனர். பணவியல் தொடர்பான செய்திகள் பெரும் ஏற்ற இறக்கத்தில் இருந்த நேரத்தில் இது எழுதப்பட்டது. உலகம் முழுவதும், நாடுகள் தங்கள் பணவியல் அமைப்புகளுக்கான உகந்த உலோகத் திட்டம் குறித்து விவாதித்தன, அது வெள்ளி, தங்கம், தகுந்த விகிதத்தில் இருஉலேககம், அல்லது கலவையான உலோகம் பற்றியதாக இருந்தது.

உலோகத் திட்டம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று பரிந்துரைப்பதன் மூலம் நாப் புதிய விவாதத்தை முன் வைத்தார். தங்கம் அல்லது பிற உலோகங்களால் ஆதரிக்கப்படாத காகிதப் பணத்தின் விரும்பத்தக்கத் தன்மை பற்றிய நாப்பின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன, ஆனால் ஒருபோதும் பொருளாதார தளத்தில் முக்கிய இடத்தைப் பெற முடியவில்லை.

ஆதாரம்: www.ideas.repec.org; www.hetwebsite.net; www.amazon.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *