பியர்-பால் லு மெர்சியர் டி லா ரிவியர் (Pierre-Paul Le Mercier de La Riviere) மார்ச் 10, 1719இல் பிறந்து நவம்பர் 27, 1801இல் மறைந்த பிரெஞ்சு நாட்டை சார்ந்த இயற்கை கோட்பாட்டு பொருளாதார அறிஞர் ஆவார். மெர்சியர் enlighted despotism (அறிவொளி பெற்ற சர்வாதிகாரம்) என்ற இயற்கை கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
அரசாங்கத்தின் செயல்பாடு மனித சட்டங்களை உருவாக்குகிறது அவர் வாதிட்டார். இயற்கை வாதிகள் முன்மொழிந்த தலையிடாக் கொள்கைகளுக்குத் தகுந்த முறையில் “இயற்கை” உரிமைகள் மற்றும் கடமைகள் அடிப்படையில் மெர்சியர் அரசின் கோட்பாட்டை வெளிப்படுத்தினார். தனியார் தனிநபர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உண்மையில் “ஒப்பந்தம்” இருந்ததாக அவர் கூறினார்,
அங்கு அரசாங்கம் தனிநபர்களின் தனியார் சொத்தை “பாதுகாக்கும்” கடமையை ஏற்றுக்கொண்டது, அதற்கு ஈடாக, வரிவிதிக்கும் உரிமையைப் பெற்றது. அவரது வார்த்தைகளில், அரசாங்கம், “தெய்வீக உரிமை” மூலம், சொத்தின் “இணை உரிமையை” கொண்டுள்ளது, எனவே ஒரு பங்கிற்கு உரிமை உண்டு.
ஆனால், மெர்சியர் எச்சரிக்கிறார், இந்தப் பங்கு “தன்னிச்சையானது” அல்ல, மேலும் அரசாங்கத்தின் “இயற்கையான” செயல்பாடுகளைச் செய்வதற்கு முற்றிலும் தேவையானதை விட அதிகமாகக் கோரக்கூடாது என்றார். அவரது முக்கிய வாதமானது அரசின் தலையிடாக் கோட்பாடாகும், இது வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் உள்நாட்டுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றார்
ஆதாரம்: www.hetwebsite.net www.hetwebsite.net
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
