இயன் சார்லஸ் ரெய்னர் பியாட் (Ian Charles Rayner Byatt) மார்ச் 11, 1932இல் பிறந்த பிரித்தானியப பொருளாதார அறிஞர் ஆவார். நீர்நிலை குறித்த ஒழுங்குமுறை மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். இயன் பியாட் 2005முதல் 2011வரை ஸ்காட்லாந்தில் நீர் வளம் பற்றிய பொருளாதார ஒழுங்குமுறை நிறுவனமான ஸ்காட்லாந்திற்கான நீர் தொழில் ஆணையத்தின் (WICS) தலைவராக பணியாற்றினார்.
மனித நடவடிக்கைகள் காலநிலை மாற்றத்திற்கான முதன்மையான காரணங்கள் மற்றும் காலநிலை மாற்றம் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிவியல் கருத்தினை இயன் பியாட் தொடர்ந்து மறுத்துள்ளார். காலநிலை கொள்கைகள் மற்றும் CO2 உமிழ்வைக் குறைப்பதையும் பைட் எதிர்த்தார், அவற்றிற்கான விலையானது மிகவும் உயர்ந்தவை என்று வாதிட்டார். வெப்பநிலை 20°Cக்கும் குறைவான விகிதத்தில் உயர்ந்துள்ளது, இது IPCC ஆபத்தானது என்று கருதுகிறது, மேலும் பல காலநிலை மாற்ற மாதிரிகளால் கணிக்கப்பட்டதை விட இது மிகக் குறைவு என்று பைட் கூறினார்.
பைட்டின் கூற்றுப்படி, நமது பொருளாதாரத்தின் திறமையான செயல்பாட்டிற்கு நிலையான மின்சாரம் கிடைப்பது அவசியம் என்று கருதினார். சூழலியல் மாறுபாட்டுக் கொள்கையில் ஆற்றலுக்கான (energy) செலவை உயர்த்துவதானது அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன என்றார். புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் செலவுகள் புதை படிவ (fossil fuels) எரிபொருட்களின் விலையை விட அதிகம்; காற்று மற்றும் சூரிய சக்தியின் இடைவிடாத தன்மை மற்றும் கணிக்க முடியாத தன்மையினால் மின் கட்டமைப்பை இயக்குவதில் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது என்கிறார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் உற்பத்தியின் அதிக அளவினை நிறுவுவது என்பது மின்சார உற்பத்தி மற்றும் பகிர்வினை இரட்டிப்பாக்கும் என்றார். அவரது பார்வையில், பல பொருளாதார பிரச்சினைகள் போதுமான அளவிற்கு அவற்றைச் சரிசெய்வதற்குக் கவனம் செலுத்தவில்லை என்கிறார். மனிதனால் தூண்டப்படும் எந்தவொரு புவி வெப்பமடைதலும் அவசியம் நிகழும் என்றும், அத்தகைய வெப்ப மயமாதல் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடுகிறார்.
ஆதாரம்: www.seh.ox.ac.uk; www.desmog.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
