மார்ச் 12 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரெஹ்மான் சோபன் (Economist Rehman Sobhan Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 12 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரெஹ்மான் சோபன் – முனைவர் பு. அன்பழகன்

ரெஹ்மான் சோபன் (Rehman Sobhan) மார்ச் 12, 19354இல் பிறந்த ஒரு வங்காளதேசத்தினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். நிர்வாகம், கிராமப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய துறைகளில் அவரின் பங்களிப்பினால் அவர் உலக அளவில் அறியப்படும் பொருளாதார அறிஞராவார், மேலும் கல்விக்கான அவரின் சேவையானது முக்கியமானதாக அறியப்படுகிறது. 1957ஆம் ஆண்டு டாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளாதார போரசிரியராக தனது பணி தொடங்கிய அவர் 1977இல் ஓய்வு பெற்றார்.

சோபன், வங்காளதேச திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். வங்காளதேசத்தின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்குவதிலும், கிராமப்புற மேம்பாடு மற்றும் நில சீர்திருத்தத்திற்கான அவரது பங்களிப்பானது அந்த நாட்டின் வரலாற்றில் முக்கியச் சுவடுகளாக உள்ளது. 1991ஆம் ஆண்டு வங்காளதேச ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர், திட்டமிடல் அமைச்சகம் மற்றும் பொருளாதார உறவுகள் பிரிவின் பொறுப்பாளராகவும் இருந்தார். வங்காளதேசத்தை மேம்படுத்துவதற்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பு நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம்: www.cpd.org.bd; www.thedailystar.net

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *