மார்ச் 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரோஜர் நோல் (Economist Roger Noll Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரோஜர் நோல் – முனைவர் பு. அன்பழகன்

ரோஜர் நோல் (Roger Noll) மார்ச் 13, 1940இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞரான இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தின் தகைசால் பேராசிரியர் ஆவார். அவரது முதன்மை ஆராய்ச்சி பணிகளானது, மேம்பட்ட மற்றும் வளரும் பொருளாதாரங்களில் தொழில்நுட்பக் கொள்கை, பொருளாதார நோக்கிலான பொதுச் சட்டங்கள், தனியார் முறைப்படுத்துதல், விளையாட்டு பொருளாதாரம், பொழுதுபோக்கு பொருளாதாரம் போன்றவற்றினை சார்ந்திருந்தது.

நோல் அமெரிக்க எரிசக்தித் துறை, ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம், தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகம் மற்றும் தேசிய அறிவியல் அறக்கட்டளை ஆகியவற்றின் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக இருந்துள்ளார். நோல்லின் முக்கியப் புத்தகங்கள், Economic Aspects of Television Regulation (1973), Government and the Sports Business (1974), The Technology Prk Barrel (1991), Constitutional Reform, in California (1995), Sports, Jobs and Taxes (1997), Challenges to Research Universities (1998), Economic Reforms in India (2013).

நோல், ஒரு சிறந்த விளையாட்டு பொருளாதார நிபுணர். விளையாட்டு என்பது ஒரு தொழில், ஆனால் தொன்மை பொருளாதார நிறுவனங்களோ, நவீன பொருளாதார அறிஞர்களோ, விளையாட்டுப் பொருளாதாரத்தினை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக அங்கிகாரம் செய்யவில்லை.

சமூகத்தில் விளையாட்டானது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றும் விளையாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான பங்களிப்பு, விளையாட்டு வீரர் சந்தை விதிகளுக்கும் அணிகள் மற்றும் லீக்குகளின் செயல்திறனுக்கும் இடையிலான உறவையும், களத்திலும் அவர்களின் வருடாந்திர நிதி அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்வதாகும் என்கிறார் நோல்.

ஆதாரம்: www.profiles.stanford.edu; www.publicpolicy.stanford.edu

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *