மார்ச் 15 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வுல்ஃப் ஐசக் லடேஜின்ஸ்கி (Economist Wolf Isaac Ladejinsky Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 15 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வுல்ஃப் ஐசக் லடேஜின்ஸ்கி – முனைவர் பு. அன்பழகன்

வுல்ஃப் ஐசக் லடேஜின்ஸ்கி (Wolf Isaac Ladejinsky) மார்ச் 15, 1899இல் பிறந்து ஜூலை 3, 1975இல் மறைந்த அமெரிக்க ஜார்ஜிய விவசாய பொருளாதார அறிஞர் ஆவார். உலகில் உள்ள பல நாடுகளின் அரசாங்கங்களுக்கு நில சீர்திருத்தம் குறித்த முக்கிய ஆலோசகராக அவர் இருந்தார். 1955ஆம் ஆண்டு தொடங்கி, தாய்லாந்து, தைவான், தெற்கு வியட்நாம், ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கான நில சீர்திருத்தத் திட்டங்களுக்கு லேடேஜின்ஸ்கி முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அமெரிக்காவில் நவீன வேளாண் முறைக்காக பெரும் முயற்சியினை மேற்கொண்டார், பாரம்பரிய வேளாண் சாகுபடியினால் பெருமளவிற்கான விளைச்சலைப் பெற இயலாத ஆசிய நாடுகளுக்காக நவீன வேளாண்முறையினை புகுத்துவதற்கு சவாலை எதிர்கொண்டு பெரும் பணியாற்றியுள்ளார். இதன் விளைவாக ஜப்பானில் இருந்து இந்தியா வரையிலான மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டது.

லாடெஜின்ஸ்கி தனது பெரும்பாலான நேரத்தைக் கிராமப்புற விவசாயிகளுடன் செலவிட்டார், சாத்தியமான யோசனைகளைத் தேடி, உடனடியாக மதிப்பீடுகளைச் செய்தார். லாடெஜின்ஸ்கி சீனாவிற்குச் சென்று அங்குச் சீன-அமெரிக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக நில சீர்திருத்தத்தைச் செயல்படுத்தினார், இத்திட்டங்கள் கம்யூனிஸ்ட்டின் வெற்றி பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 1955 முதல் 1961 வரை, லாடெஜின்ஸ்கி தெற்கு வியட்நாமில் நில சீர்திருத்தம் மற்றும் அகதிகள் மீள்குடியேற்ற திட்டங்களில் பணியாற்றினார்.

இந்தியாவில் உலக வங்கியுடன் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயலில் லாசிஜின்ஸ்கி தனது வாழ்க்கையைக் கழித்தார். இந்திய அரசாங்கத்தின் நில சீர்திருத்தத்திற்கான மகத்தான திட்டங்கள் அரசியல் தலையீடு மற்றும் நடைமுறைப்படுத்தும் முறையில் முன்னுரிமைகளால் பலவீனமடைந்ததாக லாசிஜின்ஸ்கி விமர்சனத்தை முன்வைத்தார்.

வேளாண் சீர்திருத்தம் மூலம் ஆசிய விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதே வாழ்க்கை முழுவதும் அவரது குறிக்கோளாக இருந்தது. லாசிஜின்ஸ்கியின் கூற்றுப்படி, விவசாயிகள் மிகவும் கடினமாக உழைப்பாளர்கள், நல்ல புத்திசாலிகள், நேர்மையானவர்கள் என்றார். வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளவில்லை, அவர் இறக்கும் வரை இந்தியாவில் தங்கி, கிராமங்களில் வேளாண் போக்கினை கண்காணித்தபடி இருந்து வேளாண் சீர்திருத்தத்திற்குத் தொடர்ந்து ஊக்குவித்து வந்தார்.

ஆதாரம்: www.encyclopedia.com; www.archives.lib.umd.edu; www.dbpedia.org; www.nytimes.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *